Friday, April 30, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி ..சுண்டல்(30-4-10)

நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்..அவர்களில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஜீவாவும் ஒருவர்.'அன்பும் அரசியலும் வேறு வேறல்ல..உலகம் முழுமைக்கும் அன்பும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்பதே உண்மையான அரசியல் தத்துவமாகும்.ஆகவே..அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்கமுடியாது.'இதுதான் ஜீவாவின் அரசியல் தத்துவம்.

2)மக்கள் தொகை அடிப்படையிலான செல்ஃபோன் இணைப்புகளின் எண்ணிக்கையில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.அதாவது 100 நபருக்கு 150 இணைப்புகள் உள்ளன.100 க்கு 167 என்று தில்லி முதல் இடத்திலும்,100க்கு 137 என மும்பை மூன்றாவது இடத்திலும்..100க்கு 114 என கொல்கத்தா 4ஆம் இடத்திலும் உள்ளது.

3)மோனலிசா என்ற உலகப் புகழ் பெற்ற ஒவியத்தில் அந்தப் பெண்ணிற்கு புருவங்கள் வரையப் படவில்லையே...ஏன்..அதற்கான காரணம்..இந்தக் கால பெண்கள் தங்கள் புருவங்களை Trim செய்வது போல..15,16 ஆம் நூற்றாண்டில் பெண்கள் தங்கள் புருவங்களை நன்கு மழித்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததாம்.

4)தக்காளிச் சாற்றிலே சர்க்கரையைப் போட்டால் ரத்தச் சிவப்பாக மாறுகிறது..சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டால் வெளுத்துப் போகிறது.இனிமையான பேச்சு மேலும் உன்னை அழகுள்ளவனாக்குகிறது.கடுமை உன் முகத்தைச் சோகையாக்குகிறது. -கண்ணதாசன்

5) ஐந்து வயது வரை அரசனைப் போலவும்..பதினைந்து வயதுவரை தாசனைப் போலவும் பதினாறாம் வயது முதல் நண்பனைப் போலவும் நினைத்து ஒரு தந்தை தன் மகனை நடத்த வேண்டும்.

6)இதயம் சீராக இயங்கி நோய்களை தவிர்க்க..ரத்தத்தில் இன்சுலின் அதிகரித்து டயாபடீஸ் ஆபத்தை குறைக்க திராட்சை சாப்பிடச் சொல்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்

7)கொசுறு- ஒரு ஜோக்

சாப்பிடும் போது அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு..அப்புறம் சாப்பிட்டதை வாய்க்குக் கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன் டாக்டர்
இந்த நேரத்திலே எப்படி என் கிளினிக்கிற்கு வந்தீங்க
கால்நடையாகத்தான்

16 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அதாவது 100 நபருக்கு 150 இணைப்புகள் //

பாதிக்கு மேற்பட்டவர்கள் இரண்டு இணைப்புகள்

தமிழகம் அசத்துக்கிறது

Anonymous said...

சுவையான சுண்டல்

Paleo God said...

தே மா ப சு அருமை சார்! :))

shortfilmindia.com said...

:)

கேபிள் சங்கர்

அமைதி அப்பா said...

//மக்கள் தொகை அடிப்படையிலான செல் ஃபோன் இணைப்புகளின் எண்ணிக்கையில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.அதாவது 100 நபருக்கு 150 இணைப்புகள் உள்ளன.//

உண்மைதான் சார், எங்கள் வீட்டில் மூன்று பேருக்கு, ஐந்து செல்ஃபோன் இணைப்பு உள்ளது.

Chitra said...

சரவெடிகள்......!!!
Good ones!

vasu balaji said...

தக்காளி மேட்டர் புதுசு. :). பூந்தமல்லி ஹைரோட் ஃபுல்லா ந்யூரோ அண்ட் இஎண்டி க்ளினிக்கா வரப்போகுது :((அவ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

அனைத்தும் வழமை போல் அருமை.

ஹேமா said...

தக்காளிச் சுண்டல் புதிய செய்தி.

பிரபாகர் said...

மோனலிசா பற்றிய தகவலும், தக்காளியும் புதுசு!

வழக்கம்போல் அருமை அய்யா!

பிரபாகர்...

*இயற்கை ராஜி* said...

nice:-)

சிநேகிதன் அக்பர் said...

நல்ல டேஸ்ட் சார்.

தலைவர் ஜீவா விசயம் அருமை.

ஈரோடு கதிர் said...

சுவை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பப்பா...எக்ஸ்ப்ரஸ் ட்ரையின் வேகத்தில ஓடுது எழுத்து! படித்து முடித்தவுடன் இரைத்தது எனக்கு!!

Kanchana Radhakrishnan said...

//ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
அப்பப்பா...எக்ஸ்ப்ரஸ் ட்ரையின் வேகத்தில ஓடுது எழுத்து! படித்து முடித்தவுடன் இரைத்தது எனக்கு!!//

:)))