பதிவர் சந்திப்பு என்றால்..நான் சென்னையில் இருந்தால் கண்டிப்பாக இதுநாள் வரை கலந்துக் கொள்வேன்..ஆனால் சென்ற சனிக்கிழமை நடந்த சந்திப்பிற்கு நான் செல்லவில்லை.
அதற்கான 10 காரணங்கள்
1)முக்கியமாக சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால்..யாரேனும் ஏதேனும் ஜெராக்ஸ் காபி எடுத்த நோடீஸ்களைக் கொடுத்தால் அதை வாங்குவதா..வேண்டாமா என்ற குழப்பம்.
2)முதலில் சில பதிவர்கள்..முதலிலேயே பதிவர் சந்திப்பு என்பதைத் தீர்மானித்து விட்டு..பின் மற்றவர்களை அழைத்திருக்கிறார்கள் என யாரேனும் வன்மையாக குற்றம் சாட்டுவர்
3)பதிவர்கள் வட்டமாக அமர்வார்களா..வரிசையில் அமர்வார்களா..வரிசையில் அமர்ந்தால் யார் யார் முதல் வரிசையில் அமர்வது என்ற குழப்பம் இருக்கும்
4)யாரேனும் ஒரு பதிவர் டீ,பிஸ்கெட் சப்ளை செய்துவிட்டு ..அதற்கான காசை கொடுத்தால் ..நானும் தருகிறேன் என்று சொல்வேன்..உடன் அவர்..அப்படியானால் நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றுவிட்டால்..கடற்கரை வேறு..நமக்கு எதற்கு ஏன் வீண் வம்பு?
5)வரும் அனைத்துப் பதிவினரிடையேயும் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும்..யாரிடமேனும் மறந்து சொல்லாமல் கிளம்பினால்..அவர்கள் மனதில் கீறல் ஏற்படும்..அதைத் தவிர்க்கலாம்..
6)நாம் ஒரு யூத் பதிவர் என்பது ஊரறிந்த ரகசியம்..நம்மை யாரேனும் வயதான, மூத்த பதிவர் புகைப்படம் எடுத்து..தன் பதிவில் நமக்கு விளம்பரம் கொடுத்து விட்டால்...அவர்களுக்கு நம்மால் வீண் வேலை
7)நாம் யாரேனும் பேசுகையில் மௌனியாய் இருக்க வேண்டும்..அப்படியில்லா விட்டால்..'சைலன்ஸ் பேசறாங்க இல்ல..' என்று வாத்தியார் தோரணையில் யாரேனும் குரல் கொடுப்பார்களோ என்ற பயம்..
8)ராமு..சோமு என இயக்குநர்கள் யாரேனும் வந்திருந்து..சந்திப்பு அவர்கள் எடுத்த படங்கள் பற்றி இருந்து விட்டால்...என்ன செய்வது.
9)சந்திப்பிற்கு முன் நம் பெயர், விலாசம் என..கேட்டு வாங்கும் போது..அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் கடற்கரைக்கு வரும் கூட்டம் நம்மை ஒரு தீவிரவாதி என எண்ணிவிட்டால் என்ன செய்வது?
10)வலைப்பதிவர் குழுமத்தில் இனி பதிவர் சந்திப்பு நடத்த அனுமதி வாங்க வேண்டுமா? இவர்கள் வாங்கி இருக்கிறார்களா?
மேற்குறிப்பிட்ட காரணங்களால் நான் கலந்துக் கொள்ளவில்லை.
ஹி..ஹி..ஹி...உண்மைக் காரணம்..அன்று எனக்கு வேறு வேலை இருந்தது.உண்மையில்.பால பாரதியையும் மற்ற நண்பர்களையும் பார்க்க முடியாதது வருத்தமே!
யாரேனும்..இன்னொரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா..
46 comments:
அதான பார்த்தேன். காரணமெல்லாம் நகைச்சுவைக்கு தான் என்று ஊகித்தேன்
//ஹி..ஹி..ஹி...உண்மைக் காரணம்..அன்று எனக்கு வேறு வேலை இருந்தது.உண்மையில்.பால பாரதியையும் மற்ற நண்பர்களையும் பார்க்க முடியாதது வருத்தமே!//
போண்டா போச்சே !
காரணங்கள் இருந்து கொண்டு போகமால் இருக்கலாம். போகாமல் இருந்து விட்டு, காரணம் தேடி ஒரு பதிவா? ஹா,ஹா,ஹா,....
just kidding!
Good one!
Unexpected final twist.Very nice.
ஒரு த்ரில்லர் சினிமா பார்ப்பது போன்ற உணர்வு.
வாசகர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்து விட்டீர்கள்.
:))
:)
:-)
:)
:))))))
தமிழ் பதிவுலக அரசியல் இந்திய அரசியலை விட மோசமா இருக்கும்போல இருக்குதே !
எல்லாம் பிரமை.... :))
நீங்க சொன்ன அதே காரணங்களால்தான் நானும் பதிவர் சந்திப்பைப் புறக்கணித்தேன் :)
:-)
//நாம் ஒரு யூத் பதிவர் என்பது ஊரறிந்த ரகசியம்..நம்மை யாரேனும் வயதான, மூத்த பதிவர் புகைப்படம் எடுத்து..தன் பதிவில் நமக்கு விளம்பரம் கொடுத்து விட்டால்...அவர்களுக்கு நம்மால் வீண் வேலை//
ராதாகிருஷ்ணன்,
இப்ப சொன்னீங்களே இது நியாயமான காரணம்.
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
கலக்குங்க சாமி.
ரைட்டு ஸார்.
//Blogger ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நீங்க சொன்ன அதே காரணங்களால்தான் நானும் பதிவர் சந்திப்பைப் புறக்கணித்தேன் :)//
;);)
ரசிக்கும்படியான நகைச்சுவை உணர்வு :)
அனுஜன்யா
நான் வராமல் இருந்ததன் ரஹசியமும் அதேதான் என்று சொல்லமாட்டேன்.
Excellent :)
சந்திப்புக்கு வரும் யூத்துகளின் சுண்ணாம்புத்தலை, வழுக்கை மண்டை ஆகியவற்றை போட்டோ புடிச்சு பதிவில் போட்டு அவர்களின் இமேஜை உயர்த்தித்தான் ஆவது என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளேன். இனிமே யாராவது சந்திப்புக்கு வரட்டும்.. தெரியும் சேதி.!!
இந்த கேபிளின் தொல்லை தாங்கலை. அவரது தொப்பை மட்டுமே 8MP போட்டோ ஒண்ணு எடுத்து வச்சிருக்கேன். பரங்கிமலையை படுக்கப் போட்ட மாதிரி இருக்கும். அதை போட்டுடலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.
அந்த பயம் இருக்கணும்..!!!!!
ஆனால் இதில் இரு காரணங்கள் உண்மை போல் தெரிகிறதே ;) !!!!
சூப்பரா போச்சு!
/இந்த கேபிளின் தொல்லை தாங்கலை. அவரது தொப்பை மட்டுமே 8MP போட்டோ ஒண்ணு எடுத்து வச்சிருக்கேன். பரங்கிமலையை படுக்கப் போட்ட மாதிரி இருக்கும். அதை போட்டுடலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.//
யோவ் ஆதி.. யூத்துக்கு அழகே தொப்பைன்னு புது யூத் அகராதி.. அது சரி..யூத்துங்களை பத்தி உங்களுக்குதெரியது இல்லை :)
//ஹி..ஹி..ஹி...உண்மைக் காரணம்..அன்று எனக்கு வேறு வேலை இருந்தது.உண்மையில்//
என்னா வில்லத்தனம்....
வருகைக்கு நன்றி
கோவி.கண்ணன்
Chitra
Suresh
ராம்ஜி_யாஹூ
Bala
Cable
வருகைக்கு நன்றி
ஜாக்கி சேகர்
butterfly Surya
யெஸ்.பாலபாரதி ♠
யுவகிருஷ்ணா
Robin
வருகைக்கு நன்றி
வித்யா
துபாய் ராஜா
ஜ்யோவ்ராம் சுந்தர்
இராகவன் நைஜிரியா
வருகைக்கு நன்றி
சத்ரியன்
நர்சிம்
அனுஜன்யா
Vidhoosh(விதூஷ்)
சின்ன அம்மிணி
ஆதிமூலகிருஷ்ணன்
//புருனோ Bruno said...
ஆனால் இதில் இரு காரணங்கள் உண்மை போல் தெரிகிறதே ;) !!!!//
இல்லை டாக்டர்..தவறு..ஒரு காரணம் மட்டுமே உண்மை..அது எனக்கு வேறு வேலை இருந்தது என்பதே..எனது புதிய நாடகத்திற்கான ஒத்திகை அன்று இருந்தது
வருகைக்கு நன்றி
அன்புடன் அருணா
யாநிலாவின் தந்தை
நான் நினச்சேன் நீங்க சொல்லிடிங்க ஹி ஹி ஹி
நான் நினச்சேன் நீங்க சொல்லிடிங்க ஹி ஹி ஹி
10 காரணங்களில் ஒரு சிலவற்றை தவிர மற்றவை புரிந்தது.
// மங்குனி அமைச்சர் said...
நான் நினச்சேன் நீங்க சொல்லிடிங்க ஹி ஹி ஹி//
வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்
//பின்னோக்கி said...
10 காரணங்களில் ஒரு சிலவற்றை தவிர மற்றவை புரிந்தது.//
:)))
ஹிஹிஹி..
நடத்துங்க யூத் பதிவரே
வருகைக்கு நன்றி கார்க்கி
ஆஹா :-)
படித்தேன் ரசித்தேன். நல்ல நகைச்சுவை சார்.
ஹா...ஹா...
வருகைக்கு நன்றி
சாம்ராஜ்ய ப்ரியன்
அக்பர்
இளமுருகன்
நன்றி LK
எந்த பால் போட்டாலும் அடிக்கிறிங்களே!
//வால்பையன் said...
எந்த பால் போட்டாலும் அடிக்கிறிங்களே!//
:))))
மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவராகவே இருக்கிறீர்கள் ஐயா. :)
தங்களின் நாடகம் அசைபடத்தில் பார்க்க இயலுமா?
Post a Comment