ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, April 6, 2010
விவசாயியும்..தண்ணீர் பிரச்னையும்
சில ஆண்டுகளுக்கு முன்..ஊர் பக்கம் சென்று திரும்புகையில்..தாம்பரம் வந்தாலும் சென்னைக்குள் வந்தது போல இருக்காது..இன்னும் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமே என்றிருக்கும்..மாம்பலம் வந்தால்தான்..'அப்பாடா வண்டி சென்னை வந்துவிட்டது' என்ற எண்ணம் ஏற்படும்.
ஆனால்..இப்போதோ...செங்கல்பட்டு வந்தாலே சென்னை வந்தார் போல் தோற்றம்..பச்சை பட்டாடை உடுத்தி..வளர்ந்துவிட்ட பருவப் பெண்ணைப்போல தலை வணங்கி..காற்றின் ஓசையில் கல கல என சிரிப்பதுபோல் நெற்பயிர்கள்..ரயில் ஓடும் பாதையின் இரு பக்கங்களிலும் தோற்றம் அளித்தக் காலம் போய் விட்டது..இந்தப் பக்கமும் ஸ்ரீபெரும்புதூர் வரை இதே நிலை.
சென்னை தான் இப்படி வளர்ந்து விட்டது என்றால்..ஊர் பக்கங்களும் அப்படித்தான்.உதாரணத்திற்கு..முன்பெல்லாம்..திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் வரை தான் கட்டிடங்கள்..பின்னர் நெல்வயல்கள் தான்..ஆனால் இன்று சமயபுரம் வரை கான்கிரீட் கட்டிடங்கள்..பசும் வயல்களை விழுங்கி விட்டன..கிட்டத்தட்ட எல்லா இடங்களுமே இப்படி ஆகி விட்டன..அது போதாது என..தென் தமிழகத்தில் நாம் பயணிக்கும் போது..ஆங்காங்கே..பல ஏக்கர் நெல்வயல்கள்..அரசியல்வாதிகளால்..பொறியியற் கல்லூரிகளாய் ஆகிவிட்டதையும் பார்க்க முடிகிறது.சுவரிருந்தாலே சித்திரம் எழுத முடியும் என்னும் நிலையை மறந்து விட்டோம்.
உலகம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் சொன்னாலும்..நகரங்கள் பெருகிவிட்டன..என்பதே நிதர்சனம்.
இது போன்ற நிலை ஏற்படும்போது..ஏன்..உணவுப்பிரச்னை..விலைவாசி ஏற்றம்..தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது..
விவசாயி தான் மக்களின் பசி தீர்ப்பவன்..மக்களின் வயிறு நிரம்பணும்னு..அவன் வெயிலில் உடலை வருத்திக் கொள்கிறான்..ஆனால் அரசு அந்த விவசாயியின் வயிறு நிரம்புவதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை.அவனை நல்லபடியாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை..ஒவ்வொரு வருடமும் அவன் உழைப்பால்..அவன் வியர்வையால் உருவான நெல்முத்துக்களுக்கு அவனால் விலை நிர்ணயிக்க முடிவதில்லை..அரசே..கட்டுப்படியாகாத ஒரு விலையை நிர்ணயிக்கிறது.
விலைவாசி உயர்வுக்கேற்ப..அகவிலைப்படியை ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தும் அரசு..விவசாயியின் அகத்தைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை.
தண்ணீர் பிரச்னையை எடுத்துக் கொண்டால்...ஒரு தொலை நோக்குப் பார்வையில்லை..ஆற்றுப்படுகை நிலத்தடி நீரையும்..ஆழ்துளை கிணறு தோண்டி தண்ணீரை எடுத்து விட்டால்..கிராமங்களில் எந்த நாளிலுமே பயிரிட முடியாத நிலை ஏற்படும்.குடிக்கும் தண்ணீர் அடிப்படை உரிமை என்னும் நிலை மாறி..அடிப்படை தேவை என்னும் நிலைக்கு வந்து விட்டது..இனி வரும் நாட்களில் ..உலக அளவில் ஏற்படப் போகும் தண்ணீர் பஞ்சம்..மூன்றாம் உலகப் போரைக் கூட உண்டாக்கும் என ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது..
இந்நிலையில் சமீபத்திய செய்தி ஒன்று..ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு..காவிரி ஆற்றுப் படுகையில் ராட்சசஷ கிணறுகள் தோண்டப்படும்..என்பது..
ஆனால்..உண்மையில் காவிரியில் அப்பகுதியில் கர்நாடகாவிலிருந்து வரும் நீரையே..தர்மபுரி மாவட்டங்களில் குடிநீராகக் கொடுப்பதே ஒகேனக்கல் திட்டம்..அதனால்தான் கர்நாடகா பிரச்னை எழுப்பியது..(நாம்..நம் பகுதியில் கிணறு நோண்டுவதற்கு அவர்கள் ஏன் தடை சொல்லப் போகிறார்கள்)
அரசு ..இந்நிலையில்..உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக..வயல்வெளிகள்..லேஅவுட் போடும் நிலங்களாக மாறுவதைத் தடை செய்ய வேண்டும்..நதிப்படுகைகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்..தண்ணீர் பிரச்னைக்கு மக்கள் ஒத்துழைப்போடு நிரந்தரத் தீர்வுக் காணவேண்டும்..
அதை விடுத்து..ஒரு தொலைநோக்குப் பார்வையின்றி..அவ்வப்போது ஏற்படும் நிலையை..அவ்வப்போது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுமேயாயின்..இனி வரும் நாட்களில் தாகத்தாலும்..வறுமையாலும் வாடப்போகும் மக்களை யாராலுமே காப்பாற்ற முடியாது
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
Good one.. there are very few people think about this issue.
Since most of people are not aware about villages they dont know how farmers suffer.
In villages lots of tress should be planted. Most of the places become sites.
ஆ... ஊ’னா அரசு மேல குத்தம் சொல்றதே நம்ம எல்லாருக்கும் வேலையா போச்சு..
இவ்ளோ பேசுற நம்ம.. ஒரு கிராமத்துல இருக்கிற விவசாய நிலத்துல முதலீடு செஞ்சு, விவசாயம் பாக்கலாமே.. ?
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Balu
//ஆளவந்தான் said...
ஆ... ஊ’னா அரசு மேல குத்தம் சொல்றதே நம்ம எல்லாருக்கும் வேலையா போச்சு..
இவ்ளோ பேசுற நம்ம.. ஒரு கிராமத்துல இருக்கிற விவசாய நிலத்துல முதலீடு செஞ்சு, விவசாயம் பாக்கலாமே.. ?//
ஐயா..ஆளவந்தான்..
நான் அரசை மட்டுமே குறை சொல்லவில்லை..அப்போதுகூட..அரசு போர்க்கால அடிபடையில்..மக்கள் ஒத்துழைப்போடு என்றே எழுதியுள்ளேன்..ஒரு சமயம் ஆளவந்தான் என்னும் பெயர் உங்களுக்கு இருப்பதால் கோபம் வந்துவிட்டதோ என்னவோ..:))
இது தனி மனித தாக்குதல் எல்லாம் இல்லீங்க :)
நமக்கு யாரையாவது குத்தம் சொல்லணும்... இல்ல யாரு மேலயாவது பழி போடணும்...
அரசை எதிர்பார்த்து காலத்தை வீணாக்காம, குறைந்த பட்சம் ஒரு ( அரை ஏக்கர் ) நிலத்தையாவது காப்பாத்தாலாமே..
நான் கரையேறிட்டேன்... நீங்க( பொதுவா) கரையேறுவது எப்போது?
என்னைப் பொறுத்தவரை அதற்கான வசதியோ..தகுதியோ இல்லை..ஆளவந்தான்
//காற்றின் ஓசையில் கல கல என சிரிப்பதுபோல் நெற்பயிர்கள்..//
இனி நடவு இருக்காதுங்க...
விவசாயி மட்டும் எத்தனை நாளைக்கு இளிச்சவாயனா இருக்குறது...
கதிர்..அதைத்தான் சொல்கிறேன்..அவன் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் நிலை வந்தால்..விவசாயியும் மனம் மகிழ்வான்..அவன் வாழ்வில் வறுமை இருக்காது..நஷ்டப்பட மாட்டான்..இளிச்சவாயன் ஆக வேண்டிய அவலம் இராது..அப்படி ஒரு நிலை வருமா?...ம்...ம்...ம்...
T.V.ராதாகிருஷ்ணன் said...
கதிர்..அதைத்தான் சொல்கிறேன்..அவன் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் நிலை வந்தால்..விவசாயியும் மனம் மகிழ்வான்..அவன் வாழ்வில் வறுமை இருக்காது..நஷ்டப்பட மாட்டான்..இளிச்சவாயன் ஆக வேண்டிய அவலம் இராது..அப்படி ஒரு நிலை வருமா?...ம்...ம்...ம்...
இறக்குமதி பண்ணா அதிலயும் காசடிக்கலாம்னு இருக்காங்களோ? குத்தம் சொல்ல கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் இதை முறையீடாகப் பார்க்கலாமே:). விளைச்சல் அதிகமாகி, விலைவாசி குறைந்தால் அகவிலைப்படியை பிடித்தம் கூடச் செய்யலாமே:)
பாஸ், போன வாரம் எங்களுடைய தோட்டத்தில் ஆழ்துளை கிணறு ஒண்டு தோண்டினோம். 615 அடி. தண்ணீர் வரலை.
Dont know what to do now and just wondering how the future is going to be!.
ngo`s and public should try for a new law that insists our MLA`S ans MP`S should stay at-least for 5 days in a village in their constituency to understand the problems of farmers
we still do farming in our lands but the returns are very negligible compared to job goers
while i was studying in school i too had a inferiority complex of being born in agricultural family, but now a day`s real estate price has shored up so our lands have a good worth which gives us some respect in the society
regards
rajamani-tirupur
.ஒரு தொலைநோக்குப் பார்வையின்றி..அவ்வப்போது ஏற்படும் நிலையை..அவ்வப்போது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுமேயாயின்..இனி வரும் நாட்களில் தாகத்தாலும்..வறுமையாலும் வாடப்போகும் மக்களை யாராலுமே காப்பாற்ற முடியாது
...... விவசாயிகள் மேல் அக்கறையும் - நாட்டு நலன் மீது கரிசனையும் உள்ள எவருக்கும் தோன்றும் கருத்து. நம் அரசியல்வாதிகளுக்கு???
ஏன் சார் நீங்க வேற. நம்ம அரசியல்வாதிகள் எல்லோருக்குமே ரியல் எஸ்டேட் தான் முக்கிய பொழைப்பே. என்னத்த சொல்ல??
இலவசமின்சாரம், விவசாயகடன் ரத்து என்பதை விட. விளை பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்தாலே இந்த பிரச்சனையை தீர்த்துவிடலாம்.
இது பற்றி முன்பு நான் எழுதிய இடுகை உங்களுக்கு நினைவிலிருக்கும் என்று நினைக்கிறேன்.
//வானம்பாடிகள் said...
இறக்குமதி பண்ணா அதிலயும் காசடிக்கலாம்னு இருக்காங்களோ? குத்தம் சொல்ல கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் இதை முறையீடாகப் பார்க்கலாமே:). விளைச்சல் அதிகமாகி, விலைவாசி குறைந்தால் அகவிலைப்படியை பிடித்தம் கூடச் செய்யலாமே:)//
உண்மை...வருகைக்கு நன்றி பாலா
//Kumar said...
பாஸ், போன வாரம் எங்களுடைய தோட்டத்தில் ஆழ்துளை கிணறு ஒண்டு தோண்டினோம். 615 அடி. தண்ணீர் வரலை.
Dont know what to do now and just wondering how the future is going to be!.//
615 அடியிலும் தண்ணீர் இல்லையெனில்...ம்...ம்...ம்...என்ன சொல்லமுடியும் :((
//rajamani said...
we still do farming in our lands but the returns are very negligible compared to job goers //
ராஜாமணி..நான் அதைத்தான் சொல்கிறேன்..விவசாயிகளுக்கு..அவர்கள் உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்க வகை செய்ய வேண்டும்..இல்லையேல்..அவர்களும் வேறு பிழைப்பைத் தேடி விவசாயத்தை கைவிட்டு விடுவார்கள்.அவர்கள் வீட்டில் செல்வம் பொங்கினால் தான் நம் வீட்டில் பொங்கல் அன்று பொங்கல் பொங்கும்
//அரசியல்வாதிகளால்..பொறியியற் கல்லூரிகளாய் ஆகிவிட்டதையும் பார்க்க முடிகிறது//
வருத்தமாய்தான் இருக்கிறது.''கடைக்கால் பலமில்லாமல் உயரமான அலங்காரமான மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறோம்''
இளமுருகன்
நைஜீரியா
yes friends
when a farmer is poor in a country then the country is also poor
regards
rajamani
கஷ்டம்தான்.. அடுத்த தலைமுறை வாழ்வாதே கடினம்தான்
/தர்மபுரி மாவட்டங்களில் குடிநீராகக் கொடுப்பதே ஒகேனக்கல் திட்டம்..அதனால்தான் கர்நாடகா பிரச்னை எழுப்பியது..//
அங்க போராடத் துப்பில்லை. பூமியத் தோண்டினா யார் என்ன சொல்லப் போறாங்க? அங்கயும் தண்ணி காலியாகிட்டுன்னா என்ன செய்வாங்களோ?
ரெயில் பயணங்களின் சுவாரசியமே இருபுறமும் பச்சைப் பசேலென பயிர்களும், மலைகளும், ஆறுகள், ஆற்றின்மீதான பாலங்களும்தான்.. இப்ப எங்க பாத்தாலும், மனிதர்கள், வாகனங்கள், கட்டிடங்கள்!! தண்ணீர் வற்றிய ஆற்றின்மீது பயங்கர சத்தத்துடன் போகும்போது ஏதோ பாதாளங்களைக் கடப்பது போல ஒரு பய உணர்வு!!
//அரசு ..இந்நிலையில்..உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக..வயல்வெளிகள்..லேஅவுட் போடும் நிலங்களாக மாறுவதைத் தடை செய்ய வேண்டும்..நதிப்படுகைகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்..தண்ணீர் பிரச்னைக்கு மக்கள் ஒத்துழைப்போடு நிரந்தரத் தீர்வுக் காணவேண்டும்..///
என்னா பேராச , ம்ம்ம்ம்ம்....................... நம்ம கவுருமென்டு அவ்வளவு கேவலமா போச்சா ?
//////அதை விடுத்து..ஒரு தொலைநோக்குப் பார்வையின்றி..அவ்வப்போது ஏற்படும் நிலையை..அவ்வப்போது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுமேயாயின்..இனி வரும் நாட்களில் தாகத்தாலும்..வறுமையாலும் வாடப்போகும் மக்களை யாராலுமே காப்பாற்ற முடியாது /////
சிந்திக்க வேண்டிய பதிவுதான் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
//Chitra said...
விவசாயிகள் மேல் அக்கறையும் - நாட்டு நலன் மீது கரிசனையும் உள்ள எவருக்கும் தோன்றும் கருத்து. நம் அரசியல்வாதிகளுக்கு???//
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Chitra
//வித்யா said...
ஏன் சார் நீங்க வேற. நம்ம அரசியல்வாதிகள் எல்லோருக்குமே ரியல் எஸ்டேட் தான் முக்கிய பொழைப்பே. என்னத்த சொல்ல??//
என்னத்த சொல்ல??// :)))
//அக்பர் said...
இது பற்றி முன்பு நான் எழுதிய இடுகை உங்களுக்கு நினைவிலிருக்கும் என்று நினைக்கிறேன்.//
அக்பர்..லிங்க் கொடுக்கவும்..நன்றி
//இளமுருகன் said...
வருத்தமாய்தான் இருக்கிறது.''கடைக்கால் பலமில்லாமல் உயரமான அலங்காரமான மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறோம்''//
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி இளமுருகன்
//rajamani said...
yes friends
when a farmer is poor in a country then the country is also poor
regards
rajamani//
Thanks Rajamani
//உழவன்" "Uzhavan" said...
கஷ்டம்தான்.. அடுத்த தலைமுறை வாழ்வாதே கடினம்தான்//
உண்மை ...கவலையான விஷயம்தான்
//ஹுஸைனம்மா said...
ரெயில் பயணங்களின் சுவாரசியமே
இருபுறமும் பச்சைப் பசேலென பயிர்களும், மலைகளும், ஆறுகள், ஆற்றின்மீதான பாலங்களும்தான்.. இப்ப எங்க பாத்தாலும், மனிதர்கள், வாகனங்கள், கட்டிடங்கள்!! தண்ணீர் வற்றிய ஆற்றின்மீது பயங்கர சத்தத்துடன் போகும்போது ஏதோ பாதாளங்களைக் கடப்பது போல ஒரு பய உணர்வு!!//
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ஹுஸைனம்மா
//மங்குனி அமைச்சர் said...
என்னா பேராச , ம்ம்ம்ம்ம்....................... நம்ம கவுருமென்டு அவ்வளவு கேவலமா போச்சா //
எல்லா மாநிலங்கள் நிலையும் அப்படித்தான் மங்குனி
///அக்பர் said...
விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html//
நீங்கள் சொன்ன விருதுகளை உங்கள் வலைப்பூவிற்கு வந்து பெற்று கொண்டேன் அக்பர்
/// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
சிந்திக்க வேண்டிய பதிவுதான் அருமை .
பகிர்வுக்கு நன்றி !//
வருகைக்கு நன்றி சங்கர்
//ஆனால் அரசு அந்த விவசாயியின் வயிறு நிரம்புவதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை.அவனை நல்லபடியாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை..//
உண்மைங்க... சாராயத்துக்கும் டாஸ்மாக்குக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்த சோத்துக்கு குடுக்காத அரசாங்கம்.... இந்தமாதிரியான ஆளும்வர்க்கத்த பட்டிணிப்போட்டாத்தான் சரியாகும்....
ஆதங்கம் அறிந்தேன்...
நன்றி க.பாலாசி
Post a Comment