ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Wednesday, April 14, 2010
சாகுந்தலம்..(நாட்டிய நாடகம்) - 5
முந்தைய காட்சிக்கு
காட்சி-7
(சகுந்தலை ஆசிரமத்தை விட்டு கிளம்புதல்)
மன்னனும் திரும்பக் காணோம்
வரச்சொல்லியும் சேதி இல்லை
கன்வ ரிஷி சொல்ல..கடலை நோக்கி
சகுந்தலை நதி செல்ல ஆரம்பிக்க
சோகநிழல் பரவியது குடிலில்
இடியோசை வானத்தைப் பிளக்க
இயற்கை அழ ஆரம்பித்தது
கன்வரோ..சகுந்தலை அறியாமல்
கண்களின் நீரைத் துடைத்தார்
தோழிகள் ஊமையாயினர்
நந்தவனத்தில்
அவள்... நீர் விட்டு
வளர்த்த பூஞ்செடிகள்
காற்று வீசியும் அழியாது
மௌனம் காத்தன .-அவளின்
சிவந்த இதழ்கள்
துக்கம் தாளாமல் கடிபட்டதால்
இரத்தச் சிவப்பாயின..
மரக்கிளையில் அமர்ந்து
பறவைகள் அழுதன
பசு..கன்று..மான்..முயல்
சினேகிதியின் பிரிவால்
வாடிடுவோமோ எனக் கலங்க
சாவு வீட்டு மௌனம்..
நங்கை சகுந்தலை
கன்வரை வணங்கி
திரும்பிப் பாராது
விரைந்தாள்..
காட்சி-8
(ராஜமுத்திரை கை நழுவுதல்)
மணாளனை நோக்கி
மனதில் இன்ப சூரியன்
ஒளிர் விட
பரிசல் ஒன்றில் ஏறி
மங்கை அவள்
நதி கடக்கிறாள்
பாதி வழியில்...- ஐயகோ..
காற்று..சூறாவளிக் காற்று
பரிசல் முன்னேறாது
சுற்றுகிறது...விளிம்பில்
நதி நீர் முட்டி முட்டிச் செல்ல
பரிசல் மூழ்கிடுமோ என
ஐயம் ஏற்பட
கைகள் பிடிமானத்தைத் தேட
பரிசலின் விளிம்பைப் பிடிக்கிறாள்
நங்கை
கையில் அரசன் ஈந்த
ராஜ மோதிரம்
தண்ணீரின் வழவழப்பில் நழுவி
நதியினுள் வீழ்ந்திட
ஐயோ பெண்ணே..இருந்த ஒரு
ஆதாரமும் தொலைந்ததே - என
இயற்கை அழத் தொடங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஆஹா கவிதை நடையில் அழகான நடனம் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்
எளிமையாக , அருமையாக இருக்கிறது சார்.
படிக்க எளிதாய் இனிமையாய் இருக்கிறது.
இளமுருகன்
நைஜீரியா.
வருகைக்கு நன்றி ஷங்கர்
//அக்பர் said...
எளிமையாக , அருமையாக இருக்கிறது சார்.//
நன்றி அக்பர்
//இளமுருகன் said...
படிக்க எளிதாய் இனிமையாய் இருக்கிறது.//
நன்றி இளமுருகன்
எளிமையான வடிவம்.. ரசித்தேன்...
//க.பாலாசி said...
எளிமையான வடிவம்.. ரசித்தேன்...//
நன்றி பாலாசி
அசத்திட்டீர்கள்......... அருமையாக வந்து இருக்குங்க.
நன்றி Chitra
Post a Comment