நீ
உண்ணும் அரிசியில்
உன் பெயர் எழுதி இருக்கும்
என்றார் அப்பா
அப்போ
எறும்பு இழுத்துப் போகும்
இரையில்
அதன் பெயர் இருக்குமா
2)நாளை
வெளியில் வேலையிருக்கு
மழை வரும்னு சொல்லாதீங்க
ஆணையிடுகிறாள் இல்லாள்
வானிலை அறிக்கை
அதிகாரியிடம்
3)நீ
பார்த்துவிட்டுப் போன
என் வீட்டுக் கண்ணாடி
இப்போதெல்லாம்
என் முகம் காட்டுவதில்லை
4)என் உயிர் உன்னிடம்
என்ற பாடல்
தேநீர்க் கடையில்
ஒலித்துக் கொண்டிருக்க
ரசித்துக் கொண்டிருக்கிறான்
உயிரில்லாமல்
26 comments:
//நீ
உண்ணும் அரிசியில்
உன் பெயர் எழுதி இருக்கும்
என்றார் அப்பா
//
உணவை வீணடிக்காமல் இருக்க சொல்லப்பட்டதாக இருக்கலாம்.
கவிதைகள் அருமை சார்.
கவிதை மிக அருமை டிவிஆர் சார்.
ஹிஹிஹிஹிஹி
அரிசிக்கதை எங்கம்மாவும் சொல்வாங்க!
/எறும்பு இழுத்துப் போகும்
இரையில்
அதன் பெயர் இருக்குமா/
இருக்கும்.
உணவை வீணடிக்காமல் இருக்க சொல்லப்பட்டதாக இருக்கலாம்./// அதே..
//அக்பர் said...
உணவை வீணடிக்காமல் இருக்க சொல்லப்பட்டதாக இருக்கலாம்.
கவிதைகள் அருமை சார்.//
நன்றி அக்பர்
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கவிதை மிக அருமை டிவிஆர் சார்.//
நன்றி Starjan
//கார்க்கி said...
ஹிஹிஹிஹிஹி///
:-)))
//அன்புடன் அருணா said...
அரிசிக்கதை எங்கம்மாவும் சொல்வாங்க!//
ஆம்...பெரியவர்கள் சொல்வார்கள்..அது மட்டுமல்லாமல்..ஒரு நெல்மணி..வயலிலிருந்து தப்பி,தூற்றுகையில் தப்பி..கோணிப்பையில் மில்லுக்குக் கொண்டுப்போகையில் தப்பி..மில்லில் அரிசியாகி..அளந்து போடுகையில் தப்பி..கொள்முதல் ஆகி..அரிசிக் கடைக்கு வந்து..அவர்கள் அளக்கையில்..தப்பி..நம்ம வீட்டுப் பைக்குள் வந்து..அதை டப்பாவில் கொட்டும் போது தப்பி,அம்மா சாதமாக்க கலைகையில் தப்பி..இலையில் கொதித்து சாதமாகி நாம் உண்ணும் போதுதான் பிறவிப் பயனை அடைகிறதாம். அப்படிப்பட்ட சாதத்தின் ஒரு பருக்கை வீணானாலும்..அந்த அரிசி தன் பிறவிப் பயனை அடைவதில்லையாம்..இதையும் என் தந்தை சொல்வார்கள்.
//வானம்பாடிகள் said...
இருக்கும்.//
நன்றி Bala
//butterfly Surya said...
உணவை வீணடிக்காமல் இருக்க சொல்லப்பட்டதாக இருக்கலாம்./// அதே..//
அதே...
நன்றி Surya
//நீ
உண்ணும் அரிசியில்
உன் பெயர் எழுதி இருக்கும்
என்றார் அப்பா//
...... எனக்கு சொல்லப்பட்ட விளக்கம் - நாம் என்னதான் முயன்றாலும், நமக்கு என்று "எழுதப்பட்டிருப்பதுதான்" (maybe, they meant தலை எழுத்து) நடக்கும் - கிடைக்கும். அந்த அரிசி எறும்புக்கு என்று நியமிக்கப் பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
இது உண்மையா, சரிதானா, நான் நம்ப வேண்டுமா என்று ஆராயாமல் அப்படியே விட்டு விட்டேன். :-)
கவிதைகள் அனைத்தும் அருமை.
நல்ல கவிதைகள். முதல் கவிதை சிந்திக்க அருமை.
நல்லாருக்கு...நல்லாருக்கு...
ஒகே..
"அன்புடன் அருணா said...
அரிசிக்கதை எங்கம்மாவும் சொல்வாங்க!"
அம்மா அரிசி அளந்து போடும்போது நிலத்தில் சிந்தினால் நாங்கள் காலால் தட்டிவிடவோம்.லக்சுமியைக் காலால் தட்டக்கூடாது கையால் பொறுக்கி எடுக்கவேண்டும் எனக்கூறுவார்.
வருகைக்கு நன்றி chitra
//பித்தனின் வாக்கு said...
நல்ல கவிதைகள். முதல் கவிதை சிந்திக்க அருமை.//
நன்றி பித்தனின் வாக்கு
//கண்ணகி said...
நல்லாருக்கு...நல்லாருக்கு...//
நன்றி கண்ணகி
//வித்யா said...
ஒகே//
நன்றி வித்யா
//மாதேவி said...
"அன்புடன் அருணா said...
அரிசிக்கதை எங்கம்மாவும் சொல்வாங்க!"//
வருகைக்கு நன்றி மாதேவி
இயல்பான சின விஷயங்களையும் கவிதையாக்கிவிடுகிறீர்கள்.அருமை.
சிறப்பான கவிதைகள், வாழ்த்துக்கள்!
வருகைக்கு நன்றி ஹேமா
//abarasithan said...
சிறப்பான கவிதைகள், வாழ்த்துக்கள்!//
நன்றி abarasithan
Post a Comment