Wednesday, April 21, 2010

அனுமதி மறுத்த அண்ணாசாமி

அதி புத்திசாலி அண்ணாசாமி வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்தார்....அண்ணாசாமி குடியிருக்கும் வீட்டிற்கு அவர் குடிவர உதவிய நண்பர் ஒருவருக்கு அந்த உறவினரைப் பிடிக்காது.அதனால் வந்த உறவினரை உபசரித்தால் நண்பருக்குப் பிடிக்காது என அண்ணாசாமி அறிவார்.மேலும் அந்த நண்பர் அனுமதியில்லாமல் அண்ணாசாமி வீட்டிற்கு யாரும் வரவும் முடியாது.

அதனால்..தன் வீட்டு நுழைவாயிலில் உள்ளே வர முடியாத அளவிற்கு அண்ணாசாமி..தடைக்கல்லாக ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்தார்.

வந்த உறவினர் 'இப்படி தடைக்கல்லைப் போட்டால் எப்படி உள்ளே வருவது?' என்றார்.

உடன் அண்ணாசாமி..

உறவினரான அவர் தன் வீட்டிற்குள் வர விரும்பினால்..அதை தனக்குத் தெரிவிக்குமாறும்..அப்படித் தெரிவித்ததும் தான் தன் நண்பருக்கு கடிதம் எழுதுவதாகவும்..அந்தக் கடிதத்திற்கு பதில் வந்ததும்..நண்பர் தடைக்கல்லை அகற்றச் சொன்னால்..அப்படி அகற்றியதும் உறவு உள்ளே வரலாம் என்றும் கூறினார்.

வந்த உறவினரோ...

உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

என்ற குறளை மனதில் எண்ணியபடியே திரும்பிச் சென்றார்.

18 comments:

பிரபாகர் said...

குறள் விளக்கத்தோடு, உங்கள் குரல் இந்த இடுகைப் புனைவில் அய்யா! என்ன சொல்ல, இதுபோல் தான் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது!

பிரபாகர்...

தமிழ் அமுதன் said...

அதி புத்திசாலி அண்ணாசாமி..!

இப்போ அடிமை அண்ணா சாமி..!


இதயெல்லாம் பார்த்து ’’அண்ணா’’ வின் ஆன்மா தற்கொலை பண்ணிக்க
போகுது...!

பனித்துளி சங்கர் said...

////////உறவினரான அவர் தன் வீட்டிற்குள் வர விரும்பினால்..அதை தனக்குத் தெரிவிக்குமாறும்..அப்படித் தெரிவித்ததும் தான் தன் நண்பருக்கு கடிதம் எழுதுவதாகவும்..அந்தக் கடிதத்திற்கு பதில் வந்ததும்..நண்பர் தடைக்கல்லை அகற்றச் சொன்னால்..அப்படி அகற்றியதும் உறவு உள்ளே வரலாம் என்றும் கூறினார்.//////


ஏலே மக்கா இந்த ஆளு சாப்பிடும்பொழுது வாயில முதலில் ஒரு பெரிய பாறங்கல்லை வைத்து அடைக்கணும் அப்பறம் தெரியும் வலியின் அருமையும் , வழியின் பெருமையும் .

பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் மீண்டும் வருவேன் அந்த பாறங்கல்லை அலாக்க தூக்கி எறிய

Chitra said...

குறளில், கலக்கிட்டீங்க.

Unknown said...

யாரை சொல்றீங்க ஐய்யா

vasu balaji said...

அண்ணாசாமிக்கு பாறாங்கல்லு இருக்கிறதே யாரோ சொல்லித்தானே தெரிஞ்சது சார்:))

நாமக்கல் சிபி said...

கலக்கல்!

இளமுருகன் said...

சூசகமா சொருகி இருக்கிங்க ரசித்தேன்

இளமுருகன்
நைஜீரியா

மணிஜி said...

உள்குத்து புரியலை எனக்கு

கோவி.கண்ணன் said...

//எனது 'சௌம்யா' குழுவினரின்'மனசேதான் கடவுளடா' என்னும் நாடகம்(என் கதை,வசனம்,இயக்கத்தில்)25-4-10 அன்று மாலை 7 மணிக்கு 'நாரத கான சபா; அரங்கில் நடைபெறுகிறது.நாடகத்திற்கு அன்புடன் அழைக்கிறேன் //

நல்வாழ்த்துகள், விடியோ எடுத்தால் பார்க்க வசதியாக இருக்கும்

Sanjai Gandhi said...

:(

Romeoboy said...

எனது சார் இது ?

Radhakrishnan said...

:) மதியார் வாசல் மிதியாதே அப்படின்னு போயிருக்கலாம்.

நசரேயன் said...

ஐயா ஏகப்பட்ட உள்குத்து கல் இருக்கும் போல இருக்கு

goma said...

குறளோடு சேர்ந்த எல்லாமே சிறக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

உண்மைத்தமிழன் said...

ஏதோ ஒண்ணுன்னு புரியுது.. ஆனா என்னன்னு தெளிவாத் தெரியலை..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி உண்மைத் தமிழன்(