பிறர் உழைப்பில் வாழ்வது மனித இனம் ஒன்றே..உதாரணத்திற்கு...தேன்கூடு..தேனீக்கள் பாடுபட்டு உழைத்துக் கட்டுவது..தேனீக்கள் துளித்துளியாக தேனை சேகரித்துக் கொண்டு வந்து கூட்டில் சேர்க்கிறது.தேன்கூட்டை மனிதன் தன் சுயநலத்திற்காக..தான் சுவைக்க கலைக்கிறான்..அதன் உழைப்பை அபகரிக்கிறான்.
2)இந்த வார விகடனில் மிஸ்டர் ஐ.க்யூ., பகுதியில் வந்திருந்த இந்த புதிர் எனக்குப் பிடித்திருந்தது..எழுதியவர் சென்னை 24 லிருந்து ஜெ.விஜய பார்வதி
'கணேஷ் கலந்துக் கொள்ளும் நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுகிறது.தேர்வு அதிகாரி 'காஃபி சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்டு இரண்டு காஃபி கொண்டு வரச் சொல்கிறார்.அதிகாரி காஃபியைச் சுவைத்த படியே 'வாட் ஈஸ் பிஃபோர் யூ?' என்று கேட்க..கணேஷ் 'டீ' என பதிலளிக்கிறான்.சரியான விடைச் சொன்ன கணேஷ் தேர்ந்தெடுக்கப் படுகிறான்.."
3)அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆண்டு சம்பளம் 1.8 கோடி(இந்திய ரூபாயில்)..தவிர அலவன்ஸ்கள் 22.5 லட்சம்., பதவிக் காலம் கழிந்ததும் அவருக்கு அளிக்கப்போகும் பென்ஷன் ஆண்டுக்கு 90 லட்சம்
4)பந்தா என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடியவர் கர்ம வீரர் காமராஜர்.அவர் முதல்வராய் இருந்த போது அவருக்கான பாதுகாப்பு கார்கள் 'சைரனு'டன் புறப்பட்ட போது 'நான் உயிரோடுதானே இருக்கேன்..அதுக்குள்ளே ஏன் சங்கு ஊதறீங்க ' என்றாராம்
5)பண பலம்,அதிகார பலம்,அடியாள் பலம் வைத்து 13 கட்சிகளுடன் கூட்டணி வைத்து சுமார் 70 கோடி செலவு செய்து பென்னகரத்தில் தி.மு.க., வெற்றி பெற்றது..அது வாங்கிய வாக்குகள் 77 ஆயிரம்..ஆனால் பா.ம.க., வோ அதில் 10 சதவிகிதம் கூட செலவு செய்யாது 41 ஆயிரம் வாக்குகள் பெற்றது..என்று ஒரு பேட்டியில் அன்புமணி கூறியுள்ளார்..அவரே கிட்டத்தட்ட 7 கோடிகள் பா.ம.க., செலவு செய்தது என பொருள்படும்படிக் கூறியுள்ளார்.ஒரு தொகுதியில் தேர்தலுக்கு 7 கோடி செலவு செய்யலாமா? தேர்தல் ஆணையம் என்ன கூறுகிறது?
6) கொசுறு..ஒரு ஜோக்
சபாநாயர் பொண்ணு கல்யாணம்னு சொன்னாங்களே எப்போ?
அவர் அதற்கான தேதியை மறு தேதிக் கூறாமல் ஒத்தி வைச்சுட்டார்
(புதிருக்கான விடை- தன் முன் இருப்பது காஃபி என கணேஷிற்குத் தெரியும்..ஆனால் அதிகாரி அதைக் கேட்கவில்லை..என்றும்..தனக்கான அடுத்தக் கேள்வியே..'வாட் ஈஸ் பிஃபோர் யூ' என்றும் உணர்ந்து 'டீ' என பதிலளித்தான் கணேஷ். யூ என்னும் ஆங்கில எழுத்திற்கு முன் எழுத்து 'T' தானே)
43 comments:
'நான் உயிரோடுதானே இருக்கேன்..அதுக்குள்ளே ஏன் சங்கு ஊதறீங்க '
...ha,ha,ha,ha.... good one!
காமராஜ் கலக்கல்.... அதே சமயம் தேர்தல் செலவு நேர்மைக்கு சங்கு!
ஐ.க்யூ படிக்கும்போதே புரிஞ்சிடுச்சி!
எல்லாம்... மொத்தத்தில் அருமை.
பிரபாகர்...
//யூ என்னும் ஆங்கில எழுத்திற்கு முன் எழுத்து 'T' தானே//
அட....
//3)அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆண்டு சம்பளம் 1.8 கோடி(இந்திய ரூபாயில்)..தவிர அலவன்ஸ்கள் 22.5 லட்சம்., பதவிக் காலம் கழிந்ததும் அவருக்கு அளிக்கப்போகும் பென்ஷன் ஆண்டுக்கு 90 லட்சம்//
எனக்கும் அப்டி ஒரு வேலையிருந்தா சொல்லுங்களேன்....
காமராஜர்.... நாம் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய மனிதர்.....
//ஒரு தொகுதியில் தேர்தலுக்கு 7 கோடி செலவு செய்யலாமா? தேர்தல் ஆணையம் என்ன கூறுகிறது?//
அவங்க என்னத்த சொல்லப்போறாங்க.... வழக்கம்போலத்தான்....
// அதிகாரி காஃபியைச் சுவைத்த படியே 'வாட் ஈஸ் பிஃபோர் யூ?' என்று கேட்க..கணேஷ் 'டீ' என பதிலளிக்கிறான்.சரியான விடைச் சொன்ன கணேஷ் தேர்ந்தெடுக்கப் படுகிறான்.//
அண்ணே, எனக்கு இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்கு....
இந்த மாதிரி பதில் சொன்னவுடனே அந்த HR என்னைய ஒரு லுக் விட்டது பாருங்க....அதோட எஸ்கேப் .......வேலையும் கிடைகல....
//பந்தா என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடியவர் கர்ம வீரர் காமராஜர்.அவர் முதல்வராய் இருந்த போது அவருக்கான பாதுகாப்பு கார்கள் 'சைரனு'டன் புறப்பட்ட போது 'நான் உயிரோடுதானே இருக்கேன்..அதுக்குள்ளே ஏன் சங்கு ஊதறீங்க ' என்றாராம்//
இந்த மாதிரி இப்ப போன மக்களே சொல்லுவார்கள் "பொழைக்க தெரியாதவர்"... ஆனாலும் அவர் எளிமை எனக்கு பிடிக்கும்...
ஆஹா...
அருமையான பதிவு !
// 4)பந்தா என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடியவர் கர்ம வீரர் காமராஜர்.அவர் முதல்வராய் இருந்த போது அவருக்கான பாதுகாப்பு கார்கள் 'சைரனு'டன் புறப்பட்ட போது 'நான் உயிரோடுதானே இருக்கேன்.. அதுக்குள்ளே ஏன் சங்கு ஊதறீங்க ' என்றாராம்//
அய்யா அது அந்தக் காலம்... இப்போ எல்லாருக்கும் நாங்க சங்கு ஊதப் போறோம் அப்படின்னு சொல்வதற்காக, இப்போ எல்லாம் சங்கு ஊதிகிட்டு போறாங்க.
// அதிகாரி காஃபியைச் சுவைத்த படியே 'வாட் ஈஸ் பிஃபோர் யூ?' என்று கேட்க..கணேஷ் 'டீ' என பதிலளிக்கிறான்.சரியான விடைச் சொன்ன கணேஷ் தேர்ந்தெடுக்கப் படுகிறான்.." //
நல்ல வேலை.. நான் அட்டண்ட் பண்ண எந்த நேர்முகத் தேர்விலும் இந்த மாதிரி கேள்வி கேட்கவில்லை. நானும் கும்மி பின்னூட்டம் ரேஞ்சுல எதாவது சொல்லியிருப்பேன்.
// தேன்கூட்டை மனிதன் தன் சுயநலத்திற்காக..தான் சுவைக்க கலைக்கிறான்..அதன் உழைப்பை அபகரிக்கிறான். //
இதுக்கு பேருதான் ஆறாவது அறிவு... :-)
// 3)அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆண்டு சம்பளம் 1.8 கோடி(இந்திய ரூபாயில்)..தவிர அலவன்ஸ்கள் 22.5 லட்சம்., பதவிக் காலம் கழிந்ததும் அவருக்கு அளிக்கப்போகும் பென்ஷன் ஆண்டுக்கு 90 லட்சம் //
நம்ம ஊர் அரசியல்வாதிகளோடு கம்பேர் பண்ணால் இது ஜுஜூபி... ஒரு கவுன்சிலர் இவ்வளவு சம்பாதிக்கின்றாருங்க.
// சபாநாயர் பொண்ணு கல்யாணம்னு சொன்னாங்களே எப்போ?
அவர் அதற்கான தேதியை மறு தேதிக் கூறாமல் ஒத்தி வைச்சுட்டார் //
பழக்க தோஷம்...??
****
அவரே கிட்டத்தட்ட 7 கோடிகள் பா.ம.க., செலவு செய்தது என பொருள்படும்படிக் கூறியுள்ளார்.ஒரு தொகுதியில் தேர்தலுக்கு 7 கோடி செலவு செய்யலாமா? தேர்தல் ஆணையம் என்ன கூறுகிறது?
****
உங்களுடைய லாஜிக் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது உடன்பிறப்பு அவர்களே !
தேன்கூடு பத்தி அருமை..
நல்லவேளை சார்.. ஐ.கியூ'விற்கான விளக்கம் போட்டதால எனக்குப் புரிஞ்சுது..
மொத்தத்தில் சுவையான பதிவு..
///Chitra said...
'நான் உயிரோடுதானே இருக்கேன்..அதுக்குள்ளே ஏன் சங்கு ஊதறீங்க '
...ha,ha,ha,ha.... good one!///
வருகைக்கு நன்றி chitra
//பிரபாகர் said...
எல்லாம்... மொத்தத்தில் அருமை.//
நன்றி பிரபாகர்
//பிறர் உழைப்பில் வாழ்வது மனித இனம் ஒன்றே..உதாரணத்திற்கு...தேன்கூடு..தேனீக்கள் பாடுபட்டு உழைத்துக் கட்டுவது..தேனீக்கள் துளித்துளியாக தேனை சேகரித்துக் கொண்டு வந்து கூட்டில் சேர்க்கிறது//
:)
பசுவிடம் பாலை நாம கறந்து எடுத்துவிட்டு பசு பால் தருகிறது என்று அது எதோ விருப்பட்டு தருவது போல் சொல்கிறோம் இல்லையா ?
வருகைக்கு நன்றி பாலாசி
வருகைக்கு நன்றி நல்லவன் கருப்பு...
// வித்யா said...
:))//
நன்றி வித்யா
//ரேஷன் ஆபீசர் said...
ஆஹா...
அருமையான பதிவு !//
நன்றி ரேஷன் ஆபீசர்
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ராகவன்
//மணிகண்டன் said...
உங்களுடைய லாஜிக் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது உடன்பிறப்பு அவர்களே !//
:))))
//அன்புடன்-மணிகண்டன் said...
தேன்கூடு பத்தி அருமை..
நல்லவேளை சார்.. ஐ.கியூ'விற்கான விளக்கம் போட்டதால எனக்குப் புரிஞ்சுது..
மொத்தத்தில் சுவையான பதிவு..//
நன்றி அன்புடன்-மணிகண்டன்
//கோவி.கண்ணன் said
பசுவிடம் பாலை நாம கறந்து எடுத்துவிட்டு பசு பால் தருகிறது என்று அது எதோ விருப்பட்டு தருவது போல் சொல்கிறோம் இல்லையா ?//
:-))))
நம்ம வாங்கி வெக்குற சர்க்கரைய எறும்பு எடுத்துக்கிட்டு போகுதே .. நம்ம வீட்டுக்கு உள்ளே சிலந்தி வீடு கட்டிகுதே .. மனுஷ பய தன ரத்தத்தையே கொசுக்கு உணவா தாரானே .. எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தான்..
சும்மா உலுள்ளலயக்கு .
உண்மைல நம் வசதிக்காக சின்ன சின்ன உயிரினத்தை
பற்றி நாம் கவலை படறது இல்லை.. என் வலைப்பதிவுல
"சிட்டு செல்ல சிட்டு" நு ஒரு பதிவு இருக்கு படிச்சு பார்த்து கருத்து சொல்லுங்க
சூடான சுவையான ஏ1 பட்டாணி சுண்டல்.. சூப்பர் குவாலிட்டி ,என்ன கொஞ்சம் குவான்டிடி தான் கம்மி
//நான் உயிரோடுதானே இருக்கேன்..அதுக்குள்ளே ஏன் சங்கு ஊதறீங்க//
அது ஒரு பொற்காலம்.
எல்லாமே நல்ல தகவல்கள்
//முரளி said...சூடான சுவையான ஏ1 பட்டாணி சுண்டல்.. சூப்பர் குவாலிட்டி ,என்ன கொஞ்சம் குவான்டிடி தான் கம்மி//
Quantity அதிகமான quality குறைஞ்சுடுமேன்னு தான்
வருகைக்கு நன்றி
///அமைதிச்சாரல் said...
//நான் உயிரோடுதானே இருக்கேன்..அதுக்குள்ளே ஏன் சங்கு ஊதறீங்க//
அது ஒரு பொற்காலம்.///
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்
//"உழவன்" "Uzhavan" said...
எல்லாமே நல்ல தகவல்கள்//
நன்றி Uzhavan
தேங்காய், மாங்காய், பட்டாணி அனைத்தும் சுவையாய் இருக்கிறது. :-)
தே.மா.ப.சு. சூப்பர் சார்..:)
இராகவன் அண்ணன் கமெண்ட் க்ளாஸ்..:))
//ரோஸ்விக் said...
தேங்காய், மாங்காய், பட்டாணி அனைத்தும் சுவையாய் இருக்கிறது. :-)//
வருகைக்கு நன்றி ரோஸ்விக்
//ஷங்கர்.. said...
தே.மா.ப.சு. சூப்பர் சார்..:) //
நன்றி ஷங்கர்..
காமராஜர் காலமெல்லாம் இறந்த காலமாயிருச்சு ஸாரே..!
இப்பல்லாம் முன்னாடி சங்கு ஊதினாத்தான் கார்ல ஏறி உக்கார்றாங்க..!
இது இந்தக் காலம்..!
நல்ல சுவையான் சுண்டல் சார். நன்றி.
ரசித்தேன்..
காமராஜ்:). இபோல்லாம் ஏதோ கோளாறுல சங்கு நின்னு போனா எத்தன பேருக்கு சங்கு ஊதுவாங்களோ:))
நல்ல பதிவு. நன்றி பத்ரி
(லக்கிலூக் ஸ்பெஷல்)
ரொம்ப நல்ல பதிவு. அண்டு ஐ.க்யூ...நன்றி டி.வி.ஆர் அய்யா. (இது நான் தான்)
///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
காமராஜர் காலமெல்லாம் இறந்த காலமாயிருச்சு ஸாரே..!
இப்பல்லாம் முன்னாடி சங்கு ஊதினாத்தான் கார்ல ஏறி உக்கார்றாங்க..!
இது இந்தக் காலம்..!///
உ.த., ஊர்ல தான் இருக்கீங்களா?
// இராமசாமி கண்ணண் said...
நல்ல சுவையான் சுண்டல் சார். நன்றி.//
வருகைக்கு நன்றி இராமசாமி கண்ணண்
//ஜெரி ஈசானந்தன். said...
ரசித்தேன்..//
நன்றி ஜெரி
//வானம்பாடிகள் said...
காமராஜ்:). இபோல்லாம் ஏதோ கோளாறுல சங்கு நின்னு போனா எத்தன பேருக்கு சங்கு ஊதுவாங்களோ:))//
:))
வருகைக்கு நன்றி Bala
///செந்தழல் ரவி said...
நல்ல பதிவு. நன்றி பத்ரி
(லக்கிலூக் ஸ்பெஷல்)
ரொம்ப நல்ல பதிவு. அண்டு ஐ.க்யூ...நன்றி டி.வி.ஆர் அய்யா. (இது நான் தான்)//
இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு புரியறதில்ல ரவி....!!!!!:))ஆனால் நீங்க வந்ததற்கு நன்றி
பல சுவைகள் கொண்ட பதிவு.ரசித்தேன்.
(தளத்தின் மேலும் கீழும் உள்ள திருக்குறளை அதன் இரண்டு வரியிலேயே கொண்டு வரப் பாருங்களேன்)
இளமுருகன்
நைஜீரியா
வருகைக்கு நன்றி இளமுருகன்
நீங்கள் குறிப்பிட்ட புதிர் எனக்கும் பிடித்திருந்தது.
நன்றி பின்னோக்கி
Post a Comment