யானை படுத்தால்
குதிரை உயரம் என்பதால்
குதிரை சிறப்பற்றதா?
பட்டுப் புழு பின்னாளில்
பட்டாம்பூச்சியாய் பறக்கும் என்பதால்
மலப் புழு தன்னை
பட்டுப்புழுவாய் எண்ணுவதா?
எழுத்தாளன் என்பதால்
எழுதுவதெல்லாம் தரமானதா?
தரமானதை எழுதாதால் அவன்
தரமற்ற எழுத்தாளனா?
சாதிஎனும் முள்கிரீடத்தை
தூக்கி எறிந்ததால்
அவன் மனிதனில்லையா?
அவன் மனிதன் என்பதால்
சாதியை பற்றுவதா?
மனிதனாய் வாழ்பவனுக்கு
மனித நேயம் இல்லையா?
மனிதநேயம் இல்லாததால்
மனிதனானவனா அவன்?
மனித சாதிக்கும்
மிருக சாதிக்கும்
வேறுபாடை உணர்ந்தால்
மனிதன் ஆகிவிடலாமா?
குதிரை உயரம் என்பதால்
குதிரை சிறப்பற்றதா?
பட்டுப் புழு பின்னாளில்
பட்டாம்பூச்சியாய் பறக்கும் என்பதால்
மலப் புழு தன்னை
பட்டுப்புழுவாய் எண்ணுவதா?
எழுத்தாளன் என்பதால்
எழுதுவதெல்லாம் தரமானதா?
தரமானதை எழுதாதால் அவன்
தரமற்ற எழுத்தாளனா?
சாதிஎனும் முள்கிரீடத்தை
தூக்கி எறிந்ததால்
அவன் மனிதனில்லையா?
அவன் மனிதன் என்பதால்
சாதியை பற்றுவதா?
மனிதனாய் வாழ்பவனுக்கு
மனித நேயம் இல்லையா?
மனிதநேயம் இல்லாததால்
மனிதனானவனா அவன்?
மனித சாதிக்கும்
மிருக சாதிக்கும்
வேறுபாடை உணர்ந்தால்
மனிதன் ஆகிவிடலாமா?
15 comments:
ஆம்..
மனித சாதிக்கும்
மிருக சாதிக்கும்
வேறுபாடு அறிந்தால்
மனிதம் சாதிக்கும்.!
// எழுத்தாளன் என்பதால்
எழுதுவதெல்லாம் தரமானதா
தரமானதை எழுதுவதால் அவன்
தரமற்ற எழுத்தாளனா.//
நல்ல சிந்தனை, நல்ல கவிதை.
நல்ல கவிதை......
//மனித சாதிக்கும்
மிருக சாதிக்கும்
வேறுபாடை உணர்ந்தால்
மனிதன் ஆகலாம் நாம்//
அருமையா சொன்னீங்க...
நல்ல கவிதை.....
////மனித சாதிக்கும்
மிருக சாதிக்கும்
வேறுபாடை உணர்ந்தால்
மனிதன் ஆகலாம் நாம் //////////
ஆஹா !
உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது . மிகவும் அருமை .
தெளிந்த உள்ளம்..!!
அருமை சார்.
:))
யானை படுத்தால்
குதிரை உயரம்
எனக்கென்னவோ இதன் சரியான அர்த்தம்,
யானை படுத்தால், குதிரை உயரமாகத் தெரியும்.
அதாகப்பட்டது படுத்திருக்கும் யானையின் பக்கத்தில் குதிரை நின்றால் ,குதிரைதானே உயரம்?
என்னவோ ரொம்ப நாளா குடைந்து கொண்டிருந்த கண்டு பிடிப்பை வெளியிட்டேன்...ஹி ஹி ஹி[குதிரை கனைக்கவில்லை நான்தான் ஹிஹித்தேன்]
மிருகம் பாவம் மிருகம் பாவம்.
தெளிந்து விட்டது.
நல்லதையும் கெட்டதையும் பிரிச்சுப் பாக்கிற தெளிவு மனுசனுக்கு இருந்தாலே போதுமே !
கடைசி வரிகள் முத்தாய்ப்பு அய்யா!
பிரபாகர்...
மனித சாதிக்கும்
மிருக சாதிக்கும்
வேறுபாடை உணர்ந்தால்
மனிதன் ஆகலாம் நாம்
....அருமையான கருத்துக்களுடன் கவிதை மிளிர்கிறது.
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
ஆம்..
மனித சாதிக்கும்
மிருக சாதிக்கும்
வேறுபாடு அறிந்தால்
மனிதம் சாதிக்கும்.!
மிகவும் அருமை நல்ல கவிதை......
நன்றி செந்தில்குமார்
Post a Comment