Sunday, April 25, 2010

முப்பதாயிரத்தில் திரைப்படம் எடுக்க முடியுமா?
கேபிள் சங்கரின் வலைப்பூவில் மேலே போட்டுள்ள விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்..

உண்மையில் 30000 ரூபாயில் படம் எடுக்க முடியுமா?

முடியும் என்று நிரூபித்துள்ளது ஏவிஎம் நிறுவனம்...அதுவும் முழுநீள நகைச்சுவைப் படத்தை 32000 ரூபாய் செலவில் எடுத்து..படமும் மாபெரும் வெற்றி பெற வைத்தனர்..

ஹி..ஹி..ஹி...

அந்தப் படம் டி.ஆர்.ராமசந்திரன்,காளி என்.ரத்தினம்,சாரங்கபாணி ஆகியோர் நடித்த 'சபாபதி' என்ற படம்.

அப்போது அந்த நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கதாநாயகனுக்கு படம் முடியும் வரை மாதச்சம்பளம் அறுபத்தேழரை ரூபாய்..கதாநாயகிக்கு நாற்பத்து ஐந்து ரூபாய்..

படம் வெளியான ஆண்டு 1942.

அதே போன்று 'நாம் இருவர்" படக் கதைக்கு இவர்கள் கொடுத்த பணம் 3000 ரூபாய்..ஆனால் அதில் இடம்பெற்றிருந்த பாரதியார் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட காப்பிரைட்டிற்குக் கொடுத்த பணம் பத்தாயிரமாம்

21 comments:

கோவி.கண்ணன் said...

//உண்மையில் 30000 ரூபாயில் படம் எடுக்க முடியுமா? //

வீடியோ காமராவினால் கூட எடுக்க முடியாது.

:)

கோவி.கண்ணன் said...

சித்தப்பா,

நேற்று நாடகம் எப்படிப் போச்சு.....பதிவு எதுவும் உண்டா ?

பிரபாகர் said...

ஆஹா...

கேபிள் அண்ணா விஷயத்தை எடுத்துக்கொண்டு என்னமாய் ஒரு ஒப்பீடல்!

அப்போது மக்களுக்கு சினிமா பார்ப்பது என்பது வரங்களாய், இன்று சாபமாய் அய்யா!

பிரபாகர்...

பிரபாகர் said...

கோவி அண்ணா!

அய்யாவுக்கு நாமதான் முதல்ல என எண்ணி வத்தால் மூன்றாவது இடம்!...

அய்யோ... வடை போச்சே! (கமெண்ட் போட்டுட்டு ஓட்டு போட்டிருக்கனுமோ?)

பிரபாகர்...

கோவி.கண்ணன் said...

//பிரபாகர் said...

கோவி அண்ணா!

அய்யாவுக்கு நாமதான் முதல்ல என எண்ணி வத்தால் மூன்றாவது இடம்!..//

வடை போச்சா......? பந்திக்கு முந்தனும்

Cable சங்கர் said...

அளாளுக்க்கு முப்பதாயிரம் போட்டா முடியும். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். தலைவரே..

vasu balaji said...

எக்கோ எஃபெக்டோடோட போட்டாலும் போன வடை திரும்பாது பிரவு:)

Chitra said...

ஆஆஆஆஆஆ.......!!! :-D

ஈரோடு கதிர் said...

:)))

சிநேகிதன் அக்பர் said...

1942ல் 30000 த்தோட மதிப்பு 3 கோடி இருக்குமே சார்.

அன்னைக்கு சம்பளம் கொடுத்தாங்க. இன்னைக்கு பங்கு கொடுக்குறாங்க போலிருக்கு.

ஒப்பீடு நல்லாயிருக்கு.

சிநேகிதன் அக்பர் said...

//நேற்று நாடகம் எப்படிப் போச்சு.....பதிவு எதுவும் உண்டா ?//

ஆமா சார் அது பற்றி எழுதுங்க.

மங்குனி அமைச்சர் said...

சார் , 1800 கோடில படம் எடுக்க முடியுமா ? இப்ப என் கைல கேஷ் அவ்வலோவு தான் இருக்கு

ஹேமா said...

அந்தக் காலத்தில் அந்தப் பணத்தின் மதிப்பே அதிகம்தானே !

Radhakrishnan said...

மிகவும் சிந்திக்க வேண்டிய பதிவு. நாட்டின் பொருளாதார நிலை எங்கு போய் சேர்ந்து விட்டது.

பனித்துளி சங்கர் said...

நண்பர் கேபிள் ஷங்கர் முப்பதாயிரத்தில் திரைப்படம் எடுக்க முடியுமா?" எப்படி இயலும் இதை பற்றி தெளிவாக ஒரு பதிவில் எழுதி இருக்கிறாரே பின்பு என்ன நண்பரே .

முடியாது என்று நினைக்கத் தொடங்கிவிட்டால் நமது முடி கூட நமக்கு சுமையாகத்தெரியும் .

ஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பபான் .!

"உழவன்" "Uzhavan" said...

//அளாளுக்க்கு முப்பதாயிரம் போட்டா முடியும். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். தலைவரே..//
 
ஓ... இப்படி ஒன்னு இருக்கா :-))

ரவி said...

//Cable Sankar said...
அளாளுக்க்கு முப்பதாயிரம் போட்டா முடியும். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். தலைவரே.///

எச்சூஸ்மீ ? உன்னும் நீங்க திருந்தலையா ? ஆக ஊரான் ஊட்டு நெய்க்கு வேலை வந்துருச்சு. நெய் உருகிடாம பார்த்துக்கங்க ஹி ஹி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

//உண்மையில் 30000 ரூபாயில் படம் எடுக்க முடியுமா?///

அதானே..

Starjan (ஸ்டார்ஜன்) said...

//நேற்று நாடகம் எப்படிப் போச்சு.....பதிவு எதுவும் உண்டா ?//

ஆமா சார் அது பற்றி எழுதுங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Starjan