Saturday, April 24, 2010

உணவும்..செரிமானமும்
நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

17 comments:

பிரபாகர் said...

உணவு சம்மந்தப்பட்ட விஷயங்களை சுருக்கமாக அழகாய் தந்திருக்கிறீர்கள் அய்யா!

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு

goma said...

நன்றாக செரிமானம் ஆனது

சித்து said...

சூப்பர் சார், Short n Sweet :D

அக்பர் said...

நல்ல விசயம்.

அக்பர் said...

நாடகம் சிறக்க வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இந்த முறைகளை கடைபிடித்தாலே நோய் எட்டிகூட பாக்காது.. நல்ல குறிப்புகள் அதற்கு ஏற்றார்போல் குறளின் விளக்கமும் அருமை.

மின்மினி said...

நல்ல விஷயங்களை நாலுபேருக்கு சொல்வதில் தப்பில்லை. அருமை டிவிஆர் சார்.

ஹேமா said...

மிகவும் மிகவும் தேவையான பதிவு.

வானம்பாடிகள் said...

வர வர வள்ளுவன வச்சி டி.வி.ஆர். சார் குசும்பு தாங்கல.
/ ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு/

ங்கொய்யால கவுஜ கசியுமில்ல. அப்ப வச்சிக்கறண்டி உனக்கு.

/ பிரபாகர் said...

உணவு சம்மந்தப்பட்ட விஷயங்களை சுருக்கமாக அழகாய் தந்திருக்கிறீர்கள் அய்யா!

பிரபாகர்.../

ஒழுங்கு புள்ள கெழங்கு தின்னுச்சாம். பிரவு ஓவர் சீனு ஒடம்புக்காவாதும்மா.

வானம்பாடிகள் said...

சார். நாடகம் சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

//சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.//

பிரச்சினையே இங்கேதான் ஆரம்பிக்குது:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

வித்யா said...

நல்ல பகிர்வு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வித்யா

அமைதி அப்பா said...

அனுபவத்தில் கண்ட உண்மை!
நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அமைதி அப்பா