Friday, April 9, 2010

சாகுந்தலம்..(நாட்டிய நாடகம்) - 4




முந்தைய பதிவு
காட்சி-6

(துஷ்யந்தனை நினைத்துக் கொண்டு சகுந்தலை இருக்க துர்வாசர் வருதல்)

காலம் ஓடியது

மன்னன் திரும்பவும் இல்லை

அழைத்திடவுமில்லை

அவன் நினைவால்

பசலை நோய் தாக்க..

தாமரைத் தடாகத்திலே

நீரின் நிழலில் தன்

உரு பார்த்திருந்தாள்

அவன் தன்னை அன்று

வான் நிலவோடு ஒப்பிட்டது

எண்ணினாள்..- அப்போது

துர்வாச முனிவனும் வந்தானே

சகுந்தலையோ நிலவை நோக்கி

இன்று அவன் உடன் இல்லை

நிலவே நீயேனும் என்னிடம் பேசு

கண்ணில் நான் தேக்கி வைத்துள்ள

காதல் அம்புகளை

அவன் மேல் தைக்க வேண்டும்

நிலவே நீயேனும் என்னிடம் பேசு

என் தனிமை போக்கு

மங்கை என் மனத்தை

அவனிடம் ஒப்படைத்ததையும்

இதயத்தால் மட்டுமின்றி

உடலால் இணைந்ததையும்

நீ அறிவாயே வெண்ணிலவே

அவனிடம் சென்று சொல்

வட்ட நிலவே

எட்டி நின்றாகிலும்

என்னிடம் பேசு..

கன்னி மனம்

காதல் பருவம்

காந்தர்வ மணம் புரிந்தோம்

அவரே உயிராக

உறவு கொண்டேன்

வண்ணநிலவே அவரில்லை இன்று

நீயாவது என்னுடன் பேசு இன்று

நெஞ்சு கனக்குது

நினைவுகள் சுமையானது

இப்போது நான் இளைப்பாற

அவனது தோள்கள் வேண்டும்

பால் நிலவே..பேச அவனில்லை

நீயேனும் பேசு

கனவிலும் எனை மறவேன்

என்றவன் காலம் பல கடந்தும்

காணவில்லை

கருவிலே வளரும் மகவு

நாளை தந்தை யாரெனில்

யாது உரைப்பேன்..

நீயேனும் எனக்குச் சொல்

பால் நிலவே

(வந்த துர்வாச முனி கோபம் கொண்டு

உரைக்கிறார்)

பெண்ணே..

துர்வாசர்..நான் வந்து


நேரம் பல கடந்தும்

உன் மனதில் இருப்பவனையே

எண்ணீக் கொண்டிருக்கும் நீ

யார் நினைவில் உள்ளாயோ

அவன் உனை மறப்பான்

விருட்டென தன் நிலை உணர்ந்த

பேதை உரைக்கின்றாள்

ஐயா...எனை மன்னியும்

விருந்தினராய் வந்த

உம்மை நான் மதிக்கிறேன்

நான் வேறு எண்ணத்தில் இருந்ததென் தவறே

பிள்ளைகள் தவறு செய்யின்

பொறுத்தல்

பெரியோர் கடனன்றோ

என் வாழ்வே

பாழாகும் தண்டனை தரலாமோ

ஐயனே..என்னை மன்னியும்

என்றவாறே துர்வாசர் பாதம் பணிய

பெண்ணே..

துர்வாசனின் கோபம் நாடே அறியும்

இட்ட சாபம் இட்டதே

அதற்கான விமோசனம்

உன் மனதில் உள்ளவன்

உன்னிடம் கொடுத்த பொருள் ஒன்றை

மீண்டும் பார்ப்பானாயின்

உன் நினைவு திரும்பி பெறுவான்

அதுநாள் வரை

நீ துன்பம் அடைவாய்

அதுதான் விதி

என்றிட்டான்

(தொடரும்)

12 comments:

Chitra said...

தெரிந்த கதையாய் இருப்பினும், நாட்டிய நாடகமாய் காணும் போது, இன்னும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

பிரபாகர் said...

ம்... நன்றாக செல்கிறது அய்யா, தொடருகிறேன்!

பிரபாகர்...

sathishsangkavi.blogspot.com said...

நாடகம் அருமையாக இருக்குதுங்க சார்...

இளமுருகன் said...

படிக்க புரிந்துகொள்ள மிக எளிதாய் இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
தெரிந்த கதையாய் இருப்பினும், நாட்டிய நாடகமாய் காணும் போது, இன்னும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.//


வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பிரபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
நாடகம் அருமையாக இருக்குதுங்க சார்...//

நன்றி Sangkavi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இளமுருகன் said...
படிக்க புரிந்துகொள்ள மிக எளிதாய் இருக்கிறது.//

வருகைக்கு நன்றி இளமுருகன்

*இயற்கை ராஜி* said...

அருமையான காட்சிப்படுத்தல்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜி

Karthick Chidambaram said...

Nalla Nadai. Enakku sakunthalai kadhai meedhu konjam kopamum avanambikkayum undu. Aanal ungal eluththu enakku pidiththirukku.

Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Imayavaramban