Thursday, June 10, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (11-6-10)

(வாராவாரம் ஒழுங்காக வந்துக்கொண்டிருந்த 'தேங்காய்....' இடுகை கடந்த சில நாட்களாக வரவில்லை..காரணம் பதிவுலக சர்ச்சையும்..அதனால் நான் விலகி இருந்ததும்..இனி சுண்டல் வழக்கமாய்க் கிடைக்கும்)

தண்ணீர் சேமிக்க மும்பை பெண் மேயர் ஷ்ரதா யாதவ் ஒரு அருமையான (!!) யோசனையைக் கூறியிருக்கிறார்.வரும் விருந்தினர்களுக்கு ஒரு தம்ளருக்குப் பதில் அரை தம்ளர் தண்ணீர் கொடுங்க..போதும் என்கிறார்.விருந்துகள் நடத்தும் ஓட்டல்களுக்கும் இது பொருந்தும் என்கிறார்.

2)சீனாவின் மக்கள் தொகை 150 கோடிகளைத் தாண்டிவிட்டதாம்.ஒரு..வீடு..ஒரு குழந்தை சட்டத்தை மீறி தம்பதிகள் பல குழந்தைகளைப் பெற்றதே காரணமாம்.

3)புற்று நோய் தாக்கியுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க..ஒரே மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் 1.30 கோடி திரட்டியுள்ளார்.குழந்தைகள் புற்று நோய்க்கு எதிராகப் போர்..என்ற பிரச்சாரத்தைத் துவக்கி தன் டுவிட்டரில் சச்சின் செய்தார்.இதைப் பார்த்தவர்கள் ஒரே மாதத்தில் 1.30 கோடி நன்கொடை அளித்துள்ளனராம்.

4)சர்வதேச நீரிழிவு நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது(5.08கோடி) நம்மை விட அதிக மக்கள் தொகைக் கொண்ட சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது(4.32 கோடி)

5)உலகில் உள்ள 650 கோடி மக்கள் 6912 மொழிகள் பேசுகிறார்கள்

6)ஒரு பொன் மொழி..

தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால்...வெற்றியை நீ நெருங்கி விட்டாய் என்று அர்த்தம்

7)கொசுறு;-

கிரிக்கெட் மேட்ச் போய் வந்ததிலே இருந்து தலைவர் இப்பவெல்லாம் தண்ணி அடிக்கும் போதுக் கூட சியர்ஸ் என்றதும் சியர் கேர்ல்ஸ் வந்து ஆடணும்னு அடம் பிடிக்கிறார்.

22 comments:

மோகன் குமார் said...

We can consider making Sachin our PM. He can solve many problems..????

பிரபாகர் said...

வழக்கம்போல் கலக்கலாய் இருக்குங்கய்யா!

பிரபாகர்...

வானம்பாடிகள் said...

இப்போதான் நிறைவா இருக்கு:) நன்றி சார்.

தமிழ் உதயன் said...

nice posting

those who are effected by sugar problem in india is 5.08 crore or 50.8 crore

maruthu said...

//கிரிக்கெட் மேட்ச் போய் வந்ததிலே இருந்து தலைவர் இப்பவெல்லாம் தண்ணி அடிக்கும் போதுக் கூட சியர்ஸ் என்றதும் சியர் கேர்ல்ஸ் வந்து ஆடணும்னு அடம் பிடிக்கிறார்.//

தலைவர்னா யாரு?மஞ்ச துண்டா,மரம் வெட்டியா,தோழ்ர் மருதையனா?குழப்பம்.

ப்ரியமுடன்...வசந்த் said...

சியர்ஸ்..

:)

க.பாலாசி said...

//ஒரு குழந்தை சட்டத்தை மீறி தம்பதிகள் பல குழந்தைகளைப் பெற்றதே காரணமாம்.//

இங்கணயும் அதே நிலைமைதானுங்க..

சச்சின் - சபாஷ்...

Sangkavi said...

வழக்கம் போல் கலக்கல்....

Chitra said...

4)சர்வதேச நீரிழிவு நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது(50.8கோடி) நம்மை விட அதிக மக்கள் தொகைக் கொண்ட சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது(4.32 கோடி)


.... Don't we get an international sweet award or medal for this? :-(

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் உதயன் said...
nice posting

those who are effected by sugar problem in india is 5.08 crore or 50.8 crore//

தட்டச்சுப் பிழை..சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..மாற்றிவிட்டேன்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தண்ணிய சேமிக்க ஆளுக்கு ஒரு லிட்டர் கோக் கொடுத்தடலாம் சார்:)

வித்யா said...

நல்ல தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

ஈரோடு கதிர் said...

//.வரும் விருந்தினர்களுக்கு ஒரு தம்ளருக்குப் பதில் அரை தம்ளர் தண்ணீர் கொடுங்க..//

கிழிஞ்சுது போங்க

ஷர்புதீன் said...

we need you sir., welcome

அக்பர் said...

ரொம்ப நாளைக்கப்பறம் சுண்டல் சாப்பிட்டாலும் சுவை மாறவில்லை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

டிவிஆர் சார் நல்லாருக்கீங்களா.. நலம் நலமறிய ஆவல். சுண்டல் நல்ல மணமாக இருந்தது டிவிஆர் சார்.

ரோஸ்விக் said...

இப்புடி சுண்டல் சாப்பிட்டத்தானே குஜாலா இருக்கும்... :-)) அதைப்போயி இல்லையின்னு சொல்லிட்டீங்களே ... :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

மோகன் குமார்
பிரபாகர்
Bala
தமிழ் உதயன்
maruthu

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ப்ரியமுடன்...வசந்த்
க.பாலாசி
Sangkavi
Chitra
ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வித்யா
ஈரோடு கதிர்
ஷர்புதீன்
அக்பர்
Starjan
ரோஸ்விக்

நானானி said...

நல்ல தகவல்கள் சார்!

தண்ணீரை சேமிக்கும் வழி கலக்கல்.

என்னைக் கேட்டால் கால் தம்ளாரே போதும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நானானி