Thursday, June 24, 2010

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (தமிழ் செம்மொழி சிறப்பு சுண்டல் 3 )

முதல் பகுதிக்கு

இரண்டாம் பகுதிக்கு

51)சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என 64 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் தியாகி சங்கரலிங்கனார்

52)தமிழின் முதல் எழுத்து "அ" இறுதி எழுத்து 'ன்'..திருக்குறளும் 'அ' வில் தொடங்கி (அகர முதல எழுத்தெல்லாம்) 'ன்' ல் முடியும்.(ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்")

53) தமிழ் சொல்லாய்வைத் தொடங்கி வைத்தவர் தேவநேயப்பாவணர்

54)தேம்பாவணி படைத்த வீரமாமுனிவர் 'பரமார்த்த குரு கதைகளையும் எழுதினார்

55)தந்தை பெரியார் தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்தவர்

56)தமிழில் விரிவான முதல் அகராதியை உருவாக்கியவர் யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் ஆவார்.58000 சொற்களைக் கொண்டது அது

57)தமிழ் வெறும் செம்மொழி அல்ல..'உயர் தனிச் செம்மொழி' என ஆய்வு செய்து கூறியவர் பரிதிமாற்கலைஞர்

58)முதல் தமிழ்ச் சங்கம் 4400 ஆண்டுகளும்..இரண்டாம் தமிழ்ச்சங்கம் 3700 ஆண்டுகளும்..மூன்றாம் தமிழ்ச் சங்கம் 1850 ஆண்டுகளும் செயல் பட்டன

59)சங்க காலங்கள் முதல்,இடை,கடை என்று வழக்கில் இருந்தன..கி.பி.முதலாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது சங்க காலம்

60)லண்டன்..பி.பி.சி.,வானொலி நிலையம் இந்திய மொழிகளில் ஹிந்தி,தமிழில் மட்டுமே ஒலி பரப்பு செய்கிறது

61)தமிழில் ஏறத்தாழ 30000 பழமொழிகள் உள்ளனவாம்

62)தமிழ் சுருக்கெழுத்து நூலை வெளியிட்டவர் என்.சுப்பிரமணியம் (1955)

63)திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இடம் பெறவில்லை (இதனால் அக்காலத்தில் வேறு மொழிகள் வழக்கில் இல்லை எனலாமா)

64)தமிழ் பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் மு.வரதராசனார்.

65)தமிழின் மிகப் பழையதான தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லை.(அந்தக் காலத்திலேயே இயற்கை தான் கடவுள் என்று உணர்ந்து இருந்தனரோ)

66)தமிழின் மூன்று ஓசைகள் வல்லினம்,மெல்லினம் இடையினம்.மூன்று ஓசைகளிலிருந்து ஒவ்வொரு எழுத்தை எடுத்து தமிழ் என்றானது. த -வல்லினம், மி -மெல்லினம், ழ்-இடையினம்.

67)மலேசியாவில் 523 தொடக்கப் பள்ளிகள், 8600 தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர்.ஒரு லட்சத்து எட்டாயிரம் மாணவர்கள் தமிழ் பயில்கின்றன்ர்.

68)"தமிழ்த் தாய்க்கு உருவம் உண்டா" என பாரதிதாசனிடம் ஒரு முறை கேட்டனர்". "பாரத மாதாவுக்கு உருவம் உண்டென்றால் தமிழ்த் தாய்க்கும் உருவம் உண்டு,"என்று பதிலடிக் கொடுத்தார்
பாவேந்தர்.

69)'தமிழுக்கு அமுதென்று பெயர்' என்றார் பாவேந்தர்.உண்மை..'அமிழ்து..அமிழ்து..'என்று சொல்லிக் கொண்டே இருந்தால்..தமிழ்..தமிழ்..என வரும்

70)தமிழ்நாடு அரசுப்பணித் தேர்வில் தமிழில் கேள்விகள் கேட்கப் பட வேண்டும் என்றவர் காமராஜர்

71)ம.பொ.சி. அவர்களை..தமிழக எல்லைப் போராட்ட தளபதி எனலாம்..தமிழ்நாட்டின் வட,தெற்கு எல்லைகளின் மீட்பில் இவர் பணி மகத்தானது

72)சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழாசிரியர் பர்சிவெல் துரை என்ற ஆங்கிலேயர்

73)'எனது தாய்மொழியை நன்மையான செய்திகளைச் சொல்வதற்கே பயன் படுத்துவேன்..தவறுகளையோ..தீமைகளையோ அதில் எடுத்துரைக்க மாட்டேன்' என காந்தியிடம் சொன்னவர் பாரதியார்

74)தமிழில் இருந்து 25க்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் (கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,துளு,குடகு போன்றவை) தோன்றி வளர்ந்துள்ளன

75)தேம்பாவணி அளித்த வீரமாமுனிவர் இத்தாலி நாட்டவர்..'கான்டன்ஸ்டைன் பெஸ்கி' என்ற அவர் பெயரை தமிழ்ப் படுத்தி வீரமாமுனிவர் என்று வைத்துக் கொண்டார்.

11 comments:

Karthick Chidambaram said...

அருமையான தகவல்கள்.

//திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இடம் பெறவில்லை (இதனால் அக்காலத்தில் வேறு மொழிகள் வழக்கில் இல்லை எனலாமா) //
தமிழ் என்கிற சொல் பிற்பாடே பழக்கத்தில் வந்தது என்று எங்கோ படித்த ஞாபகம்.

vasu balaji said...

சுண்டல் சுவை தூக்கல்:)

Ravichandran Somu said...

அய்யா, மிக அருமையான தகவல்களை தொகுத்து தந்துள்ளீர்கள். மிக்க நன்றி

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Chitra said...

72)சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழாசிரியர் பர்சிவெல் துரை என்ற ஆங்கிலேயர்

,.....அருமையான தகவல் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.

Photo 'N Paint said...

லண்டன்..பி.பி.சி.,வானொலி நிலையம் இந்திய மொழிகளில் ஹிந்தி,தமிழில் மட்டுமே ஒலி பரப்பு செய்கிறது??

have a look here

ஆரூரன் விசுவநாதன் said...

நிறைய செய்திகளைத் தாங்கி வந்திருக்கின்றது.......வாழ்த்துக்கள்


//தமிழ் பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் மு.வரதராசனார்.//

எந்த அடிப்படையில் மேற்கண்டவாறு மு.வ. அழைக்கப்பட்டார் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
எந்த அடிப்படையில் மேற்கண்டவாறு மு.வ. அழைக்கப்பட்டார் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.
//

அவருடைய முதல் நாவலை அக்காலத்தில் பதிப்பகங்கள் சில வெளியிட ஏற்றுக் கொள்ளவில்லையாம். கடைசியாக அதை வெளியிடத் துணிந்த பாரி நிலையம் செல்லப்பனிடமும் அன்றைய நிலையில் போதிய பொருள் வசதி இல்லை. பின்னர் மு.வ. தன் துணைவியார் இராதா அம்மையாரின் நகைகளை அடகு வைத்து தமது முதல் நாவலை வெளியிட்டாராம். பெர்னாட்ஷா எழுத்து வாழ்க்கைப் போராட்டம் பற்றித் தமிழில் ஒரு நூல் எழுதிய மு.வ. தாமே அப்படி ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாது," என்று குறிப்பிட்டுள்ளார் மு.வ., மறைவிற்கு பின் அகிலன்..

ஆகவே பின்னர் இதனால் மு.வ.,தமிழ் பெர்னாட்ஷா எனப்பட்டார்

வவ்வால் said...

Nalla thagavalkal. I think veeramaa munivar was an italian by birth, not spanish . Trichy aruke poondi madha church kattiyullar.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வவ்வால் said...
Nalla thagavalkal. I think veeramaa munivar was an italian by birth, not spanish . Trichy aruke poondi madha church kattiyullar.//

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..திருத்தப்பட்டு விட்டது வவ்வால்

Anonymous said...

அப்படின்னா வாழம் வள்ளுவர் தமிழக்கும் ஒன்றும் செய்யவில்லையா

Anonymous said...

அப்படின்னா வாழம் வள்ளுவர் தமிழக்கும் ஒன்றும் செய்யவில்லையா