Wednesday, June 23, 2010

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (தமிழ் செம்மொழி சிறப்பு சுண்டல்-2)

முந்தைய பதிவுக்கு..

26)நமஸ்காரத்திற்கு வணக்கம்..உபந்நியாசத்திற்கு சொற்பொழிவு,மகாஜனங்களுக்கு பொதுமக்கள்,உபாத்தியாயருக்கு ஆசிரியர்,காரியதரிசிக்கு செயலாளர்,சர்வகலாசாலைக்கு பல்கலைக் கழகம்,ராஜ்யத்திற்கு மாநிலம் என மாற்றித் தந்தவர் அறிஞர் அண்ணா

27)தொன்மை,செம்மை,இனிமை,எளிமை,வளமை,புதுமை,மென்மை,மேன்மை இவை அனைத்தையும் கொண்டது தமிழே ஆகும்

28)தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்

29)தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்..டாக்ஸ்,அசெஸ்மென்ட்,டியூட்டி,கஸ்டம்ஸ் ஆகிய ஆங்கிலவார்த்தைகளுக்கு இணையான சொற்கள் தமிழில் உண்டு என்றும், அவை வரி,தீர்வை,கடமை,சுங்கம் என்றும் ஒரு கூட்டத்தில் முழங்கினார்.

30)தமிழில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப்படுகிறது.தை முதல் நாள் புத்தாண்டு பிறக்கும்.ஆங்கில ஆண்டைவிட திருவள்ளுவர் ஆண்டுக்கு 31 ஆண்டுகள் அதிகம்

31)திருக்குறள் பெருமையை அறிந்த காந்தியடிகள்..'திருக்குறளைப் படிப்பதற்காக நான் தமிழனாக பிறக்க ஆசைப்படிகிறேன்' என்றார்

32)தமிழ் வேதம் என திருக்குறள் போற்றப்படுகிறது

33)தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் திருக்குறள் ஒலித்தபின்னரே தொடங்கும்.இதை முதன் முதல் ஆரம்பித்து வைத்தவர் சி.பா.ஆதித்தனார் ஆவார்

34)செம்மொழிக்கு அதிகம் குரல் கொடுத்தவர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி ஆவார்.இவர் தமிழ் மொழி மேல் கொண்ட ஆர்வத்தால் தன் பெயரை'பரிதிமாற்கலைஞர்' என்று மாற்றிக் கொண்டார்

35)பரிதிமாற்கலைஞர் 1903ஆம் ஆண்டு'தமிழ் மொழியின் வரலாறு' என்னும் நூலை எழுதினார்

36)கோலாலம்பூர் (1966)சென்னை(1968)பாரிஸ்(1970)யாழ்ப்பாணம்(1974)மதுரை(1981)கோலாலம்பூர்(1987)மொரீசியஸ்(1989)தஞ்சாவூர்(1995) ஆகிய எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் இதுவரை நடந்துள்ளன..உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதுவே முதல் முறையாகும்

37)இறைவனுக்கு உலகத்தில் எல்லா மொழிகளிலும் இல்லாத பொருள் தமிழ் மொழியில் மட்டுமே உண்டு..கடவுள்...கட..எல்லாவற்றையும் கடந்தவர்..உள்..எல்லாவற்றினுள்ளும் உள்ளவர்..எப்பேர்பட்ட அர்த்தத்தை இந்த நான்கு எழுத்து சொல் தன்னுள்ளே வைத்துள்ளது....இப்படி சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி

38)அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது.அதன் முகப்பு வாயிலில் 'கற்க கசடற' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

39)சட்டசபையில் வரவு செலவு திட்டத்தை முதலில் தமிழில் சமர்ப்பித்தது காமராஜர் ஆட்சியில்..ஆண்டு 1957-58

40)24-2-61ல் சட்டசபையில் நிதியமைச்சராய் இருந்த சி.சுப்ரமணியம் 'சென்னை ராஜ்ஜியம்' என்பதற்கு பதிலாக 'தமிழ்நாடு' எனலாம் என்றார்

41)ஆங்கிலேயர் ஆட்சியில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு கூறினார் நீதிபதியாய் இருந்த வேதநாயகம் அவர்கள்

42)சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் தமிழர் ஆவார்

43)நாம் இன்று பார்க்கும் திருவள்ளுவர் படம்..சிலைக்கு உருவம் தந்தவர் வேணுகோபால் சர்மா ஆவார் .

44)அண்ணா முதல்வர் ஆனதும் 18-7-1967 அன்று சென்னை மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்னும் பெயர் சூட்டும் தீர்மானத்தை சட்டசபையில் ஏக மனதாக நிறைவேற்றச் செய்தார்

45)தமிழ்த்தாத்தா உ.வே.சா., ஊர் ஊராகச் சென்று ஓலைச்சுவடுகளைச் சேகரித்துச் செம்மொழி தொண்டாற்றினார்

46)அவர் சீடரான கி.வா.ஜகன்னாதனும்..பல இடங்களுக்குச் சென்று நாடோடிப் பாடல்களையும்..பழமொழிகளையும் சேகரித்துத் தந்தார்

47)திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப்

48)தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை

49)தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆவார்

50)ஜி.யு.போப் தன் கல்லறையில் எழுதச் சொன்ன வரி..தமிழ்ப் படித்த மாணவன் இந்த கல்லறையில் உறங்குகிறான்

18 comments:

கோவி.கண்ணன் said...

//44)அண்ணா முதல்வர் ஆனதும் 18-7-1967 அன்று சென்னை மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்னும் பெயர் சூட்டும் தீர்மானத்தை சட்டசபையில் ஏக மனதாக நிறைவேற்றச் செய்தார்//

தீர்மானம் - முடிவு
ஏக மனது - ஒரு மனது

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

Karthick Chidambaram said...

அருமையான பதிவு.
//ஆங்கிலேயர் ஆட்சியில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு கூறினார் நீதிபதியாய் இருந்த வேதநாயகம் அவர்கள்//
தேவையான தகவல்.

Chitra said...

50)ஜி.யு.போப் தன் கல்லறையில் எழுதச் சொன்ன வரி..தமிழ்ப் படித்த மாணவன் இந்த கல்லறையில் உறங்குகிறான்

...... தமிழ் கற்று கொண்டதை, எவ்வளவு பெருமையாக கருதி இருக்கிறார்......
ஆனால், தமிழ் நாட்டில் எத்தனை பேர், தமிழில் பேச தெரியாது - வாசிக்க தெரியாது - எழுத தெரியாது - என்று சொல்வதை, பெருமை என்று எண்ணிக் கொள்கின்றனர்.... ம்ம்ம்ம்.....

Vidhya Chandrasekaran said...

நல்ல பகிர்வு..

ரவி said...

இதுக்கு கூட நெகடிவ் ஓட்டா , நாடு எங்க போவுது

சிநேகிதன் அக்பர் said...

பயனுள்ள தகவல்கள் நன்றி சார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல தகவல்கள்; ஹிருதயம் என்பதை இதயம் என்றவர் பாரதியார் எனப் படித்ததாக ஞாபகம்.

Vaidheeswaran S. said...

38)அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது.அதன் முகப்பு வாயிலில் 'கற்க கசடற' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

புகைப்படம் அல்லது வேறு ஆதாரம் கிடைக்குமா?

ஹேமா said...

யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாடு பற்றி அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அதுவும் ஒரு கலவர மாநாடாகவே முடிந்திருக்கிறது ஈழத்தில்.

மாதேவி said...

பயனுள்ள நல்ல தகவல்கள்.

க.பாலாசி said...

நன்றிங்க அய்யா...

Unknown said...

//இதுக்கு கூட நெகடிவ் ஓட்டா//

யார் மீதோ அல்லது எதன் மீதோ உள்ள வெறுப்பை இங்கே காட்டுகிறார்கள். அவர்களும் நன்றாக இருக்கட்டும்.

-/பெயரிலி. said...

நான்தான் நெகட்டீவோ மறையோ அந்த வோட்டினையோ வாக்கினையோ போட்டேன். கருணாநிதி என்றவரை விதந்தோத்தியும் எல்லாமே சாமிநாதையன்னும் ஜகத்நாதனுமே என்றுமே நிறுவவும் முயலுவதிலே இப்படியாவது எதிர்ப்பதிலே ஒரு சிறு உவகை.

தமிழ் என்றால் உங்களுக்கெல்லாமே இப்போது உங்களுக்கான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலாகத்தான் தெரிகின்றது. அண்டை அயலிலே பலருக்கு அப்படியில்லை - உயிராகவும் உயிர்குடிக்கும் தென் திசைக்கா(வ)லனாகவும் தெரிகின்றது.

நீங்கள் உங்கள் பாட்டுக்குப் புத்தகம் வெளியிட்டுப் படத்துக்குப் 'போசு' கொடுத்து மகிழுங்கள். நான் என் பாட்டுக்கு இப்படியாக - போட்டுக்கொ'ல்'கிறேன்

அ.முத்து பிரகாஷ் said...

புது புது தகவல்களில் மனம் குளிர்கிறேன் !
நன்றி தோழர் !
...
செம்மொழி வாழ்த்துக்கள் !
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_24.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைபுரிந்த..ஆதரவு வாக்களித்த..எதிர் வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Vaidheeswaran S. said...
38)அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது.அதன் முகப்பு வாயிலில் 'கற்க கசடற' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

புகைப்படம் அல்லது வேறு ஆதாரம் கிடைக்குமா?//

ஆதாரம்..இந்த வார ராணி வார இதழ்..

goma said...

38)அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது.அதன் முகப்பு வாயிலில் 'கற்க கசடற' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

நல்ல செய்தி.
அங்கே தமிழ் கொடி ஏற்றியது யார் ?
அதையும் விசாரித்துச் சொல்லுங்களேன்