Monday, June 7, 2010

வெற்றியை அடையும் வழி..

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.

எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.

ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.

கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..

என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.

ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.

எடுத்த காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.

எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.

வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை

(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)

பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.

வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அத்னால் தான் வள்ளுவனும்..

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.

19 comments:

துளசி கோபால் said...

மீண்டு(ம்) வந்தமைக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

ILA (a) இளா said...

நன்றி!

ILA (a) இளா said...

நன்றி!

Unknown said...

எங்க வேண்டுகோளை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி ஐயா..

Karthick Chidambaram said...

மீண்டும் வந்தமைக்கு வாழ்த்து.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு.

CS. Mohan Kumar said...

//பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.//

அற்புதம். மிக்க நன்றி.

மங்குனி அமைச்சர் said...

புரியுது சார் ...................???????????

Chitra said...

நல்ல பதிவு.

vasu balaji said...

ரொம்ப நன்றி சார். இந்த இலக்கியச் சுவை போகத் தெரிஞ்சது.

கோவி.கண்ணன் said...

1000 ஆவது பதிவுக்கு நல்வாழ்த்துகள், பாராட்டுகள்.

துளசி கோபால் said...

அட! ஆயிரமா!!!!!!!

இனிய நல் வாழ்த்து(க்)கள்.

இவ்வளோ பக்கத்துலே இருந்துக்கிட்டாப் போகப் பார்த்தீங்க?????

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர் - 1000க்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள்

நட்புடன் சீனா

தாராபுரத்தான் said...

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.

உண்மைங்க சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தவர்களுக்கும்..கருத்து தெரிவித்தவர்களுக்கும்..என்னை மீண்டும் எழுதத் தூண்டியவர்களுக்கும்..1000ஆவது பதிவிற்கு வாழ்த்து தெரிவித்த கோவி, துளசி டீச்சர்,சீனா சார் ஆகியவர்களுக்கும் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

1000-த்துக்கு நல்வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அமைதிச்சாரல்

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

ஒன்று தெரியுங்களா ஐயா! வெற்றியை அடையும் வழின்னு சொல்லிட்டு... வழித்தவறி அடையும் எதையோ வெற்றியாய் அடையாளப் படுத்த நினைக்கிறீர்கள்! முதலில் ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள் ஐயா! நேர்வழியில் அடையும் ஒன்றே வெற்றியாகும். குறுக்கு வழியில் அடையும் எவையும் ‘வெற்று’ ஆகும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.//தான்

இதற்கு என்ன அர்த்தம் வசந்தவாசல் அ.சலீம்பாஷா