ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, June 28, 2010
கலைஞர் செய்த தவறு..
தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது..
இதற்கான பொறுப்புகளை ஏற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி..
இம் மாநாட்டிற்கு ஆன செலவு 68.52 கோடிகள்..ஆனால் மாநாட்டிற்காக கோவை மற்றும் சுற்றுவட்டாரத்திலும் அடிப்படை கட்டமைக்கு செலவான தொகை 243 கோடி.இதை மாநாட்டிற்கான செலவில் எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன..இணையக் கண்காட்சி என இணையம் பற்றி பல அரிய தகவல்கள் அறிய முடிந்தது..பல நிகழ்ச்சிகள்.சிறப்பாக அமைந்தன.நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டவர்கள்..கலைஞரே..போதும்..போதும்..என்று சொல்லியும்..அவரைப் பாராட்டிக் கொண்டே இருந்தனர்..
நிகழ்ச்சிகளில் யார்..யார்..பங்கேற்க வேண்டும் என கலைஞரே ..தேர்ந்தெடுத்ததாய் செவி வழிச் செய்தி..
இது உண்மையெனில்..கலைஞர் செய்த தவறு பட்டிமன்றத்தில் பேச எஸ்.வி.சேகரை தேர்ந்தெடுத்தது..
கலைஞர் அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க நினைத்திருந்தால்..அவரது 'காதுல பூ' நாடகத்தைப் போடச்சொல்லியிருக்கலாம்..அதை விடுத்து.....
பட்டிமன்றத்தில் சேகர்....சிரிப்புத்தான் வருகிறது..
தென்கச்சி சாமிநாதன்..பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார்..அதை விடுத்து.. சேகர் தென்கச்சி சொன்னதாக சொன்ன சொன்ன செய்தி...குமட்டலையே ஏற்படுத்தியது..
தவிர்த்து..பழைய அமராவதி ஜோக்கைச் சொல்லி..அவரே சிரித்துக் கொண்டார்.
எப்படியெல்லாம் பேசக்கூடாது என அவர் பேச்சை அன்று கேட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
அந்த நிகழ்ச்சியில்..உண்மையில் அர்த்தத்தோடு பேசியவர்கள் என திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் நக்கீரன் கோபால் மட்டுமே சொல்லலாம்
பாவம் சாலமன் பாப்பையா
லியோனி வழக்கம் போல பாடல்கள் சிலவற்றைப் பாடிக்காட்டினார்.
பாரதிராஜா...வாகை சந்திரசேகர்..கலைஞரை முடிந்த அளவிற்கு பாராட்டினர்..
பட்டி மன்றம்..என சாலமன் பாப்பையாவை ந்டுவராகப் போட்டு..பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்ததில் கலைஞர் தவறிழைத்து விட்டதாகவே தோன்றியது.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
ONE MORE GRAVE ERROR ..POINTED OUT BY HIGH COURT. read this .http://www.vikatan.com/news/news.asp?artid=3803
நேர்மையான பார்வை..
நானும் இதையே கேள்வி பட்டேன்.
சரியான விமர்சனம். அது பட்டிமன்றம் மாதிரி தெரியவில்லை. கலைஞர் புகழ்பாடின மன்றம்தான். சந்திரசேகர் தலைப்பை விட்டு கலைஞரை புகழிறதிலையே இருந்தார். ஏன் செம்மொழி மாநாடு
சுருக்கமா கூறின் கலைஞரை புகழ்ந்து பேசி அவரவர் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போடப்பட்ட மேடை தான்.
நல்ல சுட்டிக்காட்டல்
இதை வாசியுங்கள்.
http://tamilnerrupu.blogspot.com/2010/06/blog-post_28.html
கலைஞர் புகழ் பாடிய கவியரங்கத்தையும்,பட்டிமன்ற மைய கருத்தை விடுத்து கலைஞர் புகழ் பாடப்பட்டதையும், தி மு க கொடிகளை தவிர்த்த முதல்வர் இதனை வழக்கம் போல் ரசித்ததையும் நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை ? முதல்வர் போதும் போதும் என எவ்வாறு மறுத்தார் என்பதையும் சொன்னால் தேவலை ..
கேட்கவே வருத்தமாக இருக்கிறது. :-(
நானும் பார்த்தேன்.. உங்களின் பார்வையில் அல்ல.. எனவே இப்போதான் தோன்றுகிறது,, இன்னும் ஆழமாக இருந்து இருக்கலாமோவென்று டி வி ஆர்..
சார்,
உங்களுடைய கட்டுரையான "தமிழ் செம்மொழி சிறப்பு" உலகம் முழுவதும் மெயிலில் சுற்றிக்கொண்டிருக்கிறது.
பரவாயில்லை, நன்றி "tvrk.blogspot.com" என்று போட்டு இருக்கிறார்கள்.
சந்தோசமாக உள்ளது.
அடேங்கப்பா! கருணாநிதி செய்த தவறு இதுமட்டும்தான் போல.
படித்தவர்களாக இருந்தாலும் வயது போகப் போக அறளை பேந்து வெளியாகுமோ !
எஸ்.வி. சேகர் மட்டுமல்ல திருப்பூர் கிருஷ்ணன் தவிர மற்ற எல்லோருமே (கோபால் பேச்சை நான் கேட்கவில்லை) சூப்பர் சொதப்பல். தலைப்புக்கும் அவர்கள் பேசிய பேச்சுக்கும் சம்மந்தமே இல்லாமல் கர்ண கொடூரமாக இருந்தது.
மொழிக்கு எல்லாம் மாநாடு எடுத்தால் இப்படி தான் ஆகும்
உலகமே பார்த்த (டிவியில்) செந்தமிழ் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடும்போது கலைஞரைப் பார்த்தீர்களா?
சகாதேவன்
நோ கமெண்ட்ஸ்..
unmai
Dr.Mudhalvar avargal pugaz padi vimarsitthathai pattimanrathil thavrthu irukkalam.
Arivu sar perunthagaigal,
ivvaru pugaz padum nerathil,
Nakkirar pondra pulavarkalai ninaivu koorndhu,idhu maadhiri pesuvadhai thavirthu irukkalam.
Tamilan enbavan,
endrume pugaz paadi,
Dr,Mudhalvar pondrorai
pukazchi seidhu than Vaaza venduma?
"அது பட்டிமன்றம் மாதிரி தெரியவில்லை. கலைஞர் புகழ்பாடின மன்றம்தான். சந்திரசேகர் தலைப்பை விட்டு கலைஞரை புகழிறதிலையே இருந்தார்"
Er.Ganesan/Kovai
Hi...hi eppadi sir ippadilam...mudiyala!nanum kurai sonnen paathingalanu sollikka uthavum!
Mothama Kovai maanada bloopers listla thaan vagaipaduthanum
ithula thaniya pattimanram mattum sollikittu.
Periya tv ad model aanatharku vaazhthugal!
வருகை புரிந்தவர்களுக்கும்..கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி
//என். உலகநாதன் said...
சார்,
உங்களுடைய கட்டுரையான "தமிழ் செம்மொழி சிறப்பு" உலகம் முழுவதும் மெயிலில் சுற்றிக்கொண்டிருக்கிறது.
பரவாயில்லை, நன்றி "tvrk.blogspot.com" என்று போட்டு இருக்கிறார்கள்.
சந்தோசமாக உள்ளது.//
தகவலுக்கும்..பகிர்ந்துக் கொண்ட அன்பு உள்ளத்திற்கும் நன்றி
Post a Comment