Sunday, June 20, 2010

அல்கா அஜீத்..வின்னர் ஆஃப் சூபர் சிங்கர் ஜூனியர் 2



ஓ....எவ்வளவு அருமையான குரல்..

..இறுதி நாள் நிகழ்ச்சியில் அல்காவின் பாடலைக் கேளுங்கள்..கேளுங்கள்..கேட்டுக் கொண்டே இருங்கள்




alka's performance

17 comments:

ராம்ஜி_யாஹூ said...

அல்காவின் பாடல் அன்று அருமை., சிங்கரா வேலனே பாடல்.

அனைவரும் எழுந்து நின்று கை தட்டி மகிழ்ந்த பாராட்டிய பாடல் அது.

என் பார்வையில், அழகா கேரளாவின் ரூபாவின் பாணியை பின் பற்றினார் என்று எண்ணுகிறேன்.

ரூபா இந்த பாடலை பாடியதையும் கேளுங்கள். பாடலுடன் என்னை கவர்ந்தது உன்னி மேனன், ஜானகியின் பாராட்டுக்கள் .

உன்னி மேனன் சொல்வார்- ஜானகி அம்மா முன்பு இந்த பாடலை படுவர்க்கே பெரிய தைரியம் வேண்டும், பாராட்டுகிறேன் ரொப்ப, ஜானகி அம்மா பாடியதில் டோநூற்று எட்டு சதவீதம் பாடி உள்ளீர்கள் என்பார்.
ஜானகி அம்மா மைக்கை எடுத்து சொல்வார், இல்லை நூற்றி இருபது சதம் பாடி உள்ளார் என்று.

ஜானகியிடம் கற்று கொள்ள வேண்டியது சங்கீதம் மட்டும் அல்ல, பெருந்தன்மையான மனதையும் , எண்ணங்களையும் தான்.

http://www.youtube.com/watch?v=lqh_OPMcEG0

ராம்ஜி_யாஹூ said...

http://www.youtube.com/watch?v=lqh_OPMcEG0

நானானி said...

ஜானகியைப் போலவே பாடி அ..அசட்திவிட்டார் அல்கா! பிரமிச்சுட்டேன்.
வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராம்ஜீ கேட்டேன்..அல்காவின் குரலில் இனிமை இன்னும் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது

Starjan (ஸ்டார்ஜன்) said...

அல்கா வெற்றிபெற வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அல்காவின் மாஸ்டர் பீஸ் சிங்கார வேலனே தேவா - ஜானகியே பாராட்டும் வண்ணம் பாடினார்

நல்வாழ்த்துகள் டிவிஆர்
நட்புடன் சீனா

கோவி.கண்ணன் said...

அல்காவின் திறமை அசத்தல்
**********

பக்கத்துவீட்டு குழந்தை இனிமையாக மழலைப் பேசுகிறது என்பதற்காக தம் குழந்தையை புறக்கணித்தாளாம் தாய் !
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நானானி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//cheena (சீனா) said...
அல்காவின் மாஸ்டர் பீஸ் சிங்கார வேலனே தேவா - ஜானகியே பாராட்டும் வண்ணம் பாடினார்

நல்வாழ்த்துகள் டிவிஆர்
நட்புடன் சீனா//

நன்றி Cheena

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
பக்கத்துவீட்டு குழந்தை இனிமையாக மழலைப் பேசுகிறது என்பதற்காக தம் குழந்தையை புறக்கணித்தாளாம் தாய் !
:)//
அப்படிப்பட்டவள் தாயாக இருக்கமுடியாது..
அதே சமயம் திறமை மிக்க பக்கத்துவீட்டு குழந்தையைப் பாராட்டும் மனப்பான்மையும் தாயிற்கு உண்டு..

ஆமாம் கோவி..ஒரு சிறு சந்தேகம்..

எதையும் குற்றம் காணும் நோக்கில்தான் பார்ப்பீர்களா?

கோவி.கண்ணன் said...

//எதையும் குற்றம் காணும் நோக்கில்தான் பார்ப்பீர்களா?//

அப்படி இல்லை,

ஊரார் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தால் தம் பிள்ளை சுவிஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏதலி(அகதி)களாகத்தான் போகும் படி நிலமை இருக்கிறது. திறமைக்கான பரிசுகள் தமிழகத்தின் செல்லக் குரல் என்று கொடுத்தது என்னால் ஏற்க முடியவில்லை. அதற்கு பதிலாக வெறுமனே விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் என்று சொல்லி இருந்தால் நான் இது பற்றி கருத்து தெரிவித்து இருக்க மாட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
//எதையும் குற்றம் காணும் நோக்கில்தான் பார்ப்பீர்களா?//

அப்படி இல்லை,

ஊரார் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தால் தம் பிள்ளை சுவிஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏதலி(அகதி)களாகத்தான் போகும் படி நிலமை இருக்கிறது. திறமைக்கான பரிசுகள் தமிழகத்தின் செல்லக் குரல் என்று கொடுத்தது என்னால் ஏற்க முடியவில்லை. அதற்கு பதிலாக வெறுமனே விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் என்று சொல்லி இருந்தால் நான் இது பற்றி கருத்து தெரிவித்து இருக்க மாட்டேன்//

தமிழகத்தின் தேடல்..அவ்வளவுதான்..அவர் தமிழகம் சேர்ந்தவராகவே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது அவர்கள் எண்ணமாய் இருக்கலாம்

வடுவூர் குமார் said...

நான் ஸ்ர‌வ‌ன் வ‌ருவார் என்று எதிர்பார்த்தேன்.அன்று அல்காவின் பாட்டு சூப்ப‌ராக‌ இருந்த‌து.நாத‌ஸ்வ‌ர‌க்கார‌ரை ஒன்றும் சொல்லாம‌ல் விட்ட‌து என்வோ போல் இருந்த‌து.சிங்கார‌வேல‌னில்‍ நாத‌ஸ்வ‌ர‌ம் ஒரு பாதி அல்ல‌வா?

-L-L-D-a-s-u said...

மலையாளிகளுக்கு மட்டும் பாட்டு வரும் என்பதை நிலைநிறுத்த விரும்புகிறார்கள் .
முதலில் மாத்யூ அடுத்து அஜீஸ் இப்பொழுது அல்கா .

கோவி சொல்வது போல அல்கா அழகாகத்தான் பாடுகிறார் . ஆனால் வலசேரி என்று தமிழக்த்திற்குள் வந்தது என்பதுதான் கேள்வி .

சிங்காரவேலன்.. அருமை .. ஆனால் , வெளியேற்றப்பட்ட ஷ்ரி நிஷா பாடிய 'ஞானப்பழத்தை' விடவா?

நேரடி இறுதியாள‌ராக ப்ரியங்கா , ஷ்ரி நிஷா அல்லது நித்யஷ்ரீயை விடவா ரோஷன் நன்றாகப்பாடிவிட்டான்?

வாக்குக‌ள்ப‌டிதான் அல்கா முத‌லிட‌ம் என்ப‌தை ந‌ம்ப‌முடிய‌வில்லை . வாக்குக‌ள் ம்ட்டுமே என்றால் சின்ன‌ப்பைய‌ன் சிரிகாந்த் முறிய‌டிக்க‌ யாராலும் , எந்த‌ 'பெர்பார்ம‌ன்ஸ்' ஆலும் முடியாது . ;)


ம‌லேஷியா வாசுதேவ‌ன் ம‌க‌ன் 'நாய‌ர்' ஆன‌து எத‌னால்?

கரிகாலன் said...

விஜய் தொலைக்காட்சியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் மலையாளிகளை தமிழ்நாட்டில் வாழவைப்பதற்காகவே தமிழில் நடத்தப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியின் அனைத்து நிலைகளும் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு புரியும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றி