
டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா..? ஒரு மணி அடித்தால் உன் ஞாபகம்..என்றெல்லாம் காதலியின் சிரிப்பையும்..அவள் ஞாபகம் வரவும்..மணியை உதாரணம் காட்டியுள்ளனர் கவிஞர்கள்.
சோம்பித் திரிபவர்களையும்..உல்லாச வாழ்க்கை வாழ்பவர்களையும்..'அவனுக்கு என்னப்பா மணி அடிச்சா சாப்பாடு' என்று சொல்வதுண்டு..
சில மணித்துளிகள் தாமதத்தால் பல நஷ்டம் ஏற்பட்டதுண்டு..
ஆனால் நமது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மணி அடித்தால் நமக்கு வேறு ஞாபகம் வரவைத்துள்ளார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி..சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திருக்குறள் மணிக்கூண்டு சேவையைத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த மணிக்கூண்டில் மணிக்கு ஒருமுறை நேரம்,குறள் மற்றும் அதன் பொருள் ஆகியவை ஒலிக்கும்.
இனி ஒவ்வொரு மணிக்கும் குறளுக்கான குரலைக் கேட்கலாம்..
மகிழ்ச்சியான செய்திதான்...
ஆனால்..சென்னை சென்ட்ரல், மாநகராட்சி ஆகிய கட்டிடங்களின் ,மணிக்கூண்டைத்தவிர சென்னையில் உள்ள மற்ற மணிக்கூண்டுகள் சில நாட்களே ஓடும்..பல நாட்கள் இருபத்தினான்கு மணி நேரமும் ஒரே நேரத்தையேக் காட்டும்..
இனி..சென்னை பல்கலைக் கழக மணிக்கூண்டு ஒழுங்காக செயல் படும் என எதிர்ப்பார்க்கலாம்.
13 comments:
மணிக்கு ஒரு குறளா - இல்ல குரலா? கண்ணி ராசி படத்துல பார்த்த ஜோக் ஞாபகம் வந்துச்சு.நல்லது நடக்கட்டும். வாழ்த்துக்கள் அமைச்சரின் சிந்தனைக்கு
நல்ல விசயம்... அனைத்து நாட்களும் செயல் பட்டால்
மணி அடிச்சா..... குறள் ...... ஆஹா...... எப்படியெல்லாம் மண்டைக்குள்ள "மணி" அடிச்சிருக்குது....
தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்.
நல்ல ஏற்பாடு!
லண்டன் பிக்பென் மணி ஓசை ,அவர்களுக்கு உயிரோடு கலந்த ஒலி என்பார்கள்.
அதுபோல், நமக்கெல்லாம் குறள் ஒலி பரப்பும் கடிகாரம் குறள் பெட்டகமாகிறது.
மணிக் குர(ற)ல்.
:)
இது நல்ல யோசனையா இருக்கே!
நல்லது
சரியா சொன்னீங்க.. மணிக்கூண்டு இருக்கும் ஆனா எதுவும் சரியா ஓடாது டி வி ஆர்
ரொம்ப நல்ல ஏற்பாடு.
நன்றி
ஈரோடு கதிர்
thenammailakshmanan
இராமசாமி கண்ணண்
Post a Comment