1. தமிழ் வாழ்க
என்றால்
அவனுக்கு புரிவதில்லை
லாங்லிவ் டமில்
என்றால்
அவனுக்கு புரிகிறது
ஏனெனில்
அவன் ஒரு தமிழன்.
2. தமிழ்
கட்டாய பயிற்சி மொழிக்காக
ஆங்கிலப் பள்ளியில்
அரசியல் வாதி
ஆர்ப்பாட்டம்
வகுப்பறையிலிருந்து
வெளியே தந்தையை
பார்த்தான் மகன்.
3. வாழும்போது
வறியவன் நீ
தனிமனிதன் உனக்கு
உணவில்லை தரணியில்
இறந்தபின் உன்
புகழ்ப் பாடப்படும்
நினைவில்லம் கட்டப்பட்டும்
உன் ஜாதகம் அப்படி
ஏனெனில்..நீ
ஒரு தமிழ்க்கவிஞன்
10 comments:
Reality bites! அவ்வவ்வ்வ்வ்....... !
இதுவும் தமிழ் தான் என்று ஆகி போச்சுங்க....!
வாழிய செம்மொழி ... வாழிய நற்றமிழர் ..
உச்சி மண்டைல நச்:)
செந்தமிழ் நாடு - இங்கிலீஷ் எங்கள் language !
டமில் வால்க:(
உலகத்துலேயே பெஸ்ட் லாங்குவேஜ் தமிழ்தான் சார்.
ஆதங்கத்தைக் கொட்டிட்டீங்க.. என்னபண்ணித் தொலைக்குறது.. இதுதான் விதி
வருகை புரிந்தவர்களுக்கு நன்றி
தமிழ் எழுச்சிப் பாடலுக்கு ,பாரதியாருக்குப் பிறகு பாரதிதாசனுக்குப் பிறகு யாரும் இல்லையே
T.V.ராதாகிருஷ்ணன் said...
//goma said...
தமிழ் எழுச்சிப் பாடலுக்கு ,பாரதியாருக்குப் பிறகு பாரதிதாசனுக்குப் பிறகு யாரும் இல்லையே//
:)))
Post a Comment