சிவாஜிகணேசன் நடித்து வெற்றி பெற்ற பல படங்கள் சென்னையில் 3 அல்லது 4 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும்..வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்தால்..அப்படம் நூறு நாட்கள் ஓடும் படம் என வெற்றி பட வரிசையில் சேர்ந்து விடும்..உதாரணத்திற்கு அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திருசூலம் பட விவரத்தைப் பாருங்கள்
'திரிசூலம் மாபெரும் வெற்றி படமாகும்.வெள்ளிவிழா படம்.சென்னையில் வெளியான சாந்தி ,கிரௌன்,புவனேஸ்வரி திரை அரங்குகளில் தொடர்ச்சியாக முறையே 315,313,318 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகும்(100 நாட்களுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகள்)மதுரை சிந்தாமணியில் 401 அரங்கு நிறைந்த காட்சிகள்.மேலும் 20 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.இப்படம் சிவாஜியின் 200 ஆவது படம்..அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 26 மட்டுமே.8 திரை அரங்குகளில் வெள்ளிவிழா.இலங்கையிலும் இரு திரை அரங்குகளில் வெள்ளிவிழா.அந்த நாட்களிலேயே முதன் முதலாய் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி சாதனை புரிந்த படம்.'
இரண்டு கோடிகள் வசூலே பெரும் சாதனை என்றால்..படத்திற்கான தயாரிப்பு செலவு எவ்வளவு குறைவாய் இருந்திருக்கும்...நடிகர்கள் சம்பளம் எவ்வளவு இருந்திருக்கும்..
ஆனால்..இன்று வரும் மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் குறைந்தது 60 கோடிகளை தாண்டும் படங்கள்..ராவணன் மூன்று மொழிகளிலும் தயாரிப்புச் செலவு 153 கோடிகள்..
இன்றைய தயாரிப்பாளர்கள் படங்கள் நூற்றுக் கணக்கில் பிரிண்ட் போடப்படுகின்றன.சுறா 600 பிரிண்டுகள்..ராவணன் 1000 பிரிண்டுகளுக்கு மேல்..வெளியாகும் அன்று சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டுமே ஒரே நாள் 150 அல்லது 160 காட்சிகள்..
தவிர்த்து, தமிழகம் முழுவதும்..மற்ற மாநிலங்கள்..உலக மார்க்கெட் எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்..சராசரியாக 3000 முதல் 6000 காட்சிகள் வரை ஒரே நாளில் நடைபெறுகிறது.மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்சக் கட்டணமே 120 ரூபாய்.நாள் வசூலே கோடிக்கணக்கில்.கேளிக்கை வரியும் கிடையாது இப்போது.
அப்படியும் படங்கள் வசூலில் தோல்வி என்றால்..அதற்கான ஒரே காரணம்..தயாரிப்புச் செலவு அதிகம்.கதாநாயகன் சம்பளமே கோடிக்கணக்கில்..கதைக்குத் தேவையோ இல்லையோ படபிடிப்பு வெளிநாட்டில்.
ஆனால் அதே நேரம் 40 அல்லது 50 பிரிண்டுகள் மட்டுமே போடப்பட்டு..கிடைத்த தியேட்டர்களில் வெளியாகி..குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில்..கதாநாயகர்கள் சம்பளம் குறைய வேண்டும்..தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்...தோல்வி..தோல்வி..என தியேட்டர்காரர்கள் புலம்பலும்,விநியோகஸ்தர் கதறலும்..தயாரிப்பாளர் தலையில் போட்டுக் கொள்ளும் துண்டுகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்
43 comments:
ரொம்ப ஓவர் அறிவாளிகளை படம் எடுக்க விடக்கூடாது. சில சமயம் புரிஞ்சு தொலைய மாட்டேங்குது..
வித்யா said...
ரொம்ப ஓவர் அறிவாளிகளை படம் எடுக்க விடக்கூடாது. சில சமயம் புரிஞ்சு தொலைய மாட்டேங்குது..
....ha,ha,ha,ha,ha,ha....
நல்ல அலசல். பகிர்வுக்கு நன்றி.
மணிரத்னம் தன் மேல் கொண்ட அதீத நம்பிக்கை ..
சார்.. இது நீங்கள் சொல்கிறார் போல கிடையாது.. உலகம் முழுவதும் சினிமாவின் வியாபாரம் வேறுமாதிரி போய் கொண்டிருக்கிறது.. இது பற்றி பேச ஒரு பதிவெல்லாம் போதாது..
ரசிகர்கள் எல்லோரும் ஏமாளிகள் அல்ல என்பதை மணிரத்தினத்துக்கு ரசிகர்கள் ...அவ்வப்போது உணர்த்திருந்தாலும் ஏனோ யோசிக்காமல் ஒரே தப்பை திரும்ப்த் திரும்ப செய்கிறார்.
எதுவுமே சொல்ல முடியாது சார். இது ஒரு மகா பிஸினஸா மாறி ரொம்ப காலமாச்சுன்னு நினைக்கிறேன்.
ஸார்..
இந்தப் படத்தின் ஷூட்டிங் தினச் செலவுகளை நியாயமாக எடுத்துக் கொள்ளலாம்..!
ஆனால் நடித்தவர்களின் சம்பளம், மற்றும் மணிரத்னத்தின் சம்பளம், முதல் காப்பி அடிப்படையில் எடுத்ததற்கான சம்பளம் - இவை எல்லாவற்றையும் படத்தின் வசூல் கணக்கை வைத்து திட்டமிட்டு பிரித்துக் கொண்டால் படத்தினால் யாருக்கும் நஷ்டம் வராது..!
யார் அழுதாலும் பரவாயில்லை.. எங்களுக்கு பணம் கிடைத்தால் சரி என்ற கணக்கில் முன்கூட்டியே மணிரத்னம் தன்னுடைய கணக்கை செட்டில் செய்து கொண்டுவிட்டதால் நஷ்டம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே..!
கேபிளாரின் கருத்தை வழிமொழிகிறேன்
ஆஹா...!சார் இன்னும் நிறைய விஷயம் இருக்கு.
நிறைய பிரிண்ட் போடுவது(சில காரணங்களில் இதுவும் ஒன்று) திருட்டு டிவிடியைத் தடுக்க.கொஞ்சம் ஏமாந்தால் உங்கள் வீட்டு ஹாலிலும் ரீலிஸ் செய்வார்கள்.
//Cable Sankar said...
சார்.. இது நீங்கள் சொல்கிறார் போல கிடையாது.. உலகம் முழுவதும் சினிமாவின் வியாபாரம் வேறுமாதிரி போய் கொண்டிருக்கிறது.. இது பற்றி பேச ஒரு பதிவெல்லாம் போதாது..//
வேறு எப்படி வேணும்னாலும் போகட்டும் கேபிள்...ஆனால்..தயாரிப்பு செலவு குறைத்தால் லாபம் கிடைக்கலாம்..அல்லது நஷ்டக் கணக்கோ குறையும் அல்லவா...
//வித்யா said...
ரொம்ப ஓவர் அறிவாளிகளை படம் எடுக்க விடக்கூடாது. சில சமயம் புரிஞ்சு தொலைய மாட்டேங்குது..//
நீங்க பார்த்து புரியாமல் போனது..தமிழ்ப்படமா வித்யா :)))
வருகைக்கு நன்றி chitra
//கே.ஆர்.பி.செந்தில் said...
மணிரத்னம் தன் மேல் கொண்ட அதீத நம்பிக்கை ..//
வருகைக்கு நன்றி செந்தில்
கதை.
Mosamaana padangal tholviku kaaranam avai mosamaaka iruppathe budget alla.
40 kodi vaangum amir khan naditha 3 idiots 210 kodi vasool.
Hindiyil avg budget 100 kodi aagiduchu.top salary vaangum hero,heroin,director,dop,music director ellam hindi than.
Raavanan 3 language film so antha budget ok, sariya eduthiruntha odi irukkum.
Pala mozhila edukkum pothu geographical location,costume,culture ,story ellam neutrala irukkanum. Universal concept + making clear ah irukkanum.
But padam appadi illai, entha mozhi kaaranukum avan mozhi padam enra unarve varavillai.tholviku athuve kaaranam.
Maniku retirement stage vanthachu ,inimelam enna mukkinalum padam odathu.
Mosamaana padangal tholviku kaaranam avai mosamaaka iruppathe budget alla.
40 kodi vaangum amir khan naditha 3 idiots 210 kodi vasool.
Hindiyil avg budget 100 kodi aagiduchu.top salary vaangum hero,heroin,director,dop,music director ellam hindi than.
Raavanan 3 language film so antha budget ok, sariya eduthiruntha odi irukkum.
Pala mozhila edukkum pothu geographical location,costume,culture ,story ellam neutrala irukkanum. Universal concept + making clear ah irukkanum.
But padam appadi illai, entha mozhi kaaranukum avan mozhi padam enra unarve varavillai.tholviku athuve kaaranam.
Maniku retirement stage vanthachu ,inimelam enna mukkinalum padam odathu.
அடுத்தவர்களின் பணத்தில் மணிரத்னம் ஒரு EXPERIMENT +EXPERIENCE செய்து பார்த்திருக்கிறார்!
June 30, 2010 1:36:00 AM PDT
கே.ரவிஷங்கர் அவர்கள் சொன்னது சரி. திரிசூலம் படம் வந்தப்போ விடியோ என்ற ஒன்று இருப்பதே மக்களுக்குத் தெரியாது, திருட்டு சிடி என்பதும் கிடையாது, இப்போது இருப்பது போல நூற்றுக் கணக்கில் தொலைக்காட்சி சானல்களும் இல்லை. அப்போது படங்களும் கொஞ்சம் தரமாகவே வந்தன. இப்போது படம் எடுத்து ரிலீஸ் செய்வதற்கு முன்னமே திருட்டு சிடி வந்துவிட்டது என்று தலைமேல் துண்டு போட்டுக் கொண்டு இரண்டாம் தாரமாக வந்த மனைவியும், அவளுக்கு மூன்றாம் தாரமாக வாய்த்த கணவனும் அழுத கதையல்லவா நடக்கிறது. இப்போது அந்த மாதிரி வெறும் நாலு தியேட்டரில் வெளியிட்டால், இப்போது பார்க்கும் வருமானம் கூட பார்க்க்க முடியாமல் எல்லாத்தையும் திருட்டு சிடி காரனே அள்ளிக் கொண்டு போய் விடுவான்.
இதுல திருட்டு டி.வி.டி வேற ????
தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்..//
இதத்தானே சார் எல்லோரும் பொலம்பிக்கிட்டுத் திரியுறோம், எவன் கேக்குறான்.? :-))
//கதையில் கவனம் செலுத்தப் பட
வேண்டும் //
உண்மை
பழைய படங்கள் பார்ப்பதற்காகவும் வாழ்வைப் புரிவதற்காகவும் எடுக்கப்பட்டது.இப்போ !
//goma said...
ரசிகர்கள் எல்லோரும் ஏமாளிகள் அல்ல என்பதை மணிரத்தினத்துக்கு ரசிகர்கள் ...அவ்வப்போது உணர்த்திருந்தாலும் ஏனோ யோசிக்காமல் ஒரே தப்பை திரும்ப்த் திரும்ப செய்கிறார்.//
அறிவாளி!!!!
வருகைக்கு நன்றி அக்பர்
//உண்மைத் தமிழன் said
தன்னுடைய கணக்கை செட்டில் செய்து கொண்டுவிட்டதால் நஷ்டம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே//
எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்..!!அப்படி நினைச்சிருக்கலாம்
//முரளிகண்ணன் said...
கேபிளாரின் கருத்தை வழிமொழிகிறேன்//
அப்பா..முரளியிடம் இருந்து பின்னூட்டம் வந்து எவ்வளவு நாளாச்சு
//ராவணன் போன்ற படங்கள் ஏன் தோல்வியடைகின்றன..?//
இராவணனே கடைசியில் தோல்வி அடைகிறவன் தானே. :)
//கே.ரவிஷங்கர் said...
ஆஹா...!சார் இன்னும் நிறைய விஷயம் இருக்கு.
நிறைய பிரிண்ட் போடுவது(சில காரணங்களில் இதுவும் ஒன்று) திருட்டு டிவிடியைத் தடுக்க.கொஞ்சம் ஏமாந்தால் உங்கள் வீட்டு ஹாலிலும் ரீலிஸ் செய்வார்கள்.//
உண்மை ரவி..தவிர்த்து..படம் வெளியாகி..விமரிசனங்கள் வரும் முன் பணத்தை அதிகம் அள்ளிவிடவும் ஆசை...
// ராஜ நடராஜன் said...
கதை.//
:))))
வருகைக்கு நன்றி வவ்வால்
//அன்புடன் அருணா said...
அடுத்தவர்களின் பணத்தில் மணிரத்னம் ஒரு EXPERIMENT +EXPERIENCE செய்து பார்த்திருக்கிறார்!//
:)))
வருகைக்கு நன்றி அன்புடன் அருணா
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Jayadeva
//மங்குனி அமைச்சர் said...
இதுல திருட்டு டி.வி.டி வேற ????//
:))))
//ஆதிமூலகிருஷ்ணன் said...
தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்..//
இதத்தானே சார் எல்லோரும் பொலம்பிக்கிட்டுத் திரியுறோம், எவன் கேக்குறான்.? :-))//
விரைவில் கேட்கும் காலம் வரும்
//நசரேயன் said
//கதையில்.. கவனம் செலுத்தப் பட
வேண்டும் //
உண்மை///
வருகைக்கு நன்றி naareyan
//ஹேமா said...
பழைய படங்கள் பார்ப்பதற்காகவும் வாழ்வைப் புரிவதற்காகவும் எடுக்கப்பட்டது.இப்போ !//
நன்றி ஹேமா
//கோவி.கண்ணன் said...
//ராவணன் போன்ற படங்கள் ஏன் தோல்வியடைகின்றன..?//
இராவணனே கடைசியில் தோல்வி அடைகிறவன் தானே. :)//
கோவி தானே !!!!
சார்
தமிழ்நாடு முழுவதும் 50 அல்லது 60 திரையரங்குகளில் 100 நாள் ஓடுவதை விட 1000 திரையரங்குகளில் 10 நாள் ஓடினால் அதிக வருவாய் என்ற இரகசியத்தை ஆளவந்தானுக்கு பிறகு கண்டு பிடித்து விட்டார்கள்
அதிலும் ராவணனை பொருத்த வரை முன்பதிவிலேயே அவர்கள் ஓரளவு தப்பித்து விட்டார்கள்
இதனால் தான் படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே hype ஏற்றி விட்டு முன்பதிவு செய்ய வைக்கிறார்கள்
டாக்டர் சார்..நானும் அதைத்தான் சொல்றேன்..தயாரிப்பு செலவைக் குறைத்தால்..படம் பத்து நாட்கள் ஓடினாலே நஷ்டத்தைத் தவிர்க்கலாம்
நல்ல பதிவு சார். இது ஒரு பெரிய விஷயம்.. இன்னும் சில பதிவுகளாக கூட எழுதியிருக்கலாம்.
மணிஜியின் விளம்பர படத்தில் நடித்தமைக்கு வாழ்த்துக்கள்
நன்றி மோகன் குமார்
Maniratnam is the best.His direction is the soul for his films.If you could accept bala,ameer,sasikumar as a good directors ,then why you are criticizing maniratnam.That shows he is the godfather for every cinema fans.Criticism only makes a man perfect.If you criticize more,definitely he will response for that in his next film
Post a Comment