ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, June 22, 2010
தேங்காய்..மாங்காய்..பட்டாணி ..சுண்டல் (செம்மொழி மாநாடு - சிறப்பு சுண்டல்)
தமிழ்..திராவிடர்களின் முக்கிய மொழிகளில் ஒன்று.இந்தியாவில் தமிழ்நாடு, இலங்கை,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது..
2)1996ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுதும் எட்டு கோடியே..ஐம்பது லட்சம் மக்களால் தமிழ் பேசப்படுகிறது.
3)மக்கள் தொகை அடிப்படையில் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு 18 ஆம் இடம்.
4)இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இம்மொழி தற்போது வழக்கில் உள்ள செம்மொழிகளில் ஒன்றாகும்
5)தமிழில் 'ஆத்திச்சூடி' 1000 ஆண்டுகளுக்கு முன்னரும்..திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இயற்றப்பட்டது.
6) இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் தொல்லெழுத்து கல்வெட்டுகளில் 55000க்கும் மேலாக தமிழில் உள்ளன.
7)துபாய்,மலேசியா,தென்னாப்பிரிக்கா,மொரீசியஸ்,பிஜி,டிரினிடாட்,ஆகிய நாடுகளில் சிறிய அளவில் பேசப்படுகிற அரிய மொழி.
8)யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் அற்புதமான வாழ்க்கைத் தத்துவத்தை உலகுக்கு வழங்கியவன் தமிழன்.
9)தமிழ் நாட்டின் ஆட்சி மொழியான தமிழ் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.
10)சிங்கப்பூரிலும் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது.
11)தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரம் உள்ளது.
12)மலேசியாவில் தொடக்க இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் போதிக்கப்படுகிறது.
13)தமிழ் என்னும் சொல்லுக்கு த்ராவிடம் என்பதே மூலம் என்னும் கருத்தை முன் வைத்தவர்களில் கால்டுவெல்லும் முக்கியமானவர்
14)மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது தமிழ்
15)இன்று கிடைக்கக் கூடிய மிகப் பெரிய ஆக்கம் 'தொல்காப்பியம்' ஆகும்.இது கி.மு.இரண்டாம் நூற்றாண்டிற்கும்..கி.பி.3 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாய் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது
16)'செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாரதி அன்றே தமிழை செந்தமிழ் என்றிருக்கிறார்
17)தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாரதிதாசன்..தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றுள்ளார்
18)தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றுள்ளார் நாமக்கல் ராமலிங்க பிள்ளை
19)அழிந்துக் கொண்டிருக்கும் மொழிகளில் தமிழ் 16 ஆம் இடத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும்..அடுத்த நூற்றாண்டுகளில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழும் ஒன்றாயிருக்கும் என்று சொல்லப் படுகிறது.மற்ற மொழிகள் ஸ்பாநிஷ்.ஆங்கிலம்,சீன மொழி மற்றும் ஹிந்தி
20)பல உலகத் தமிழ் மாநாடுகள் நடந்தாலும்..செம்மொழி ஆனப்பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது
21)புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை வளாக மாய் இருந்த இடம் இனி செம்மொழி மையமாய் செயல்படும்
22)ஆகவே..நண்பர்களே..பத்தோடு பதினொன்று அல்ல நம் மொழி..ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய செம்மொழி நமது எனப் பெருமைக் கொள்வோம்.
23)தமிழை தமிழன் என்று சொல்லும் அனைவரும் படிப்போம்..தமிழ் ஆசிரியர்களையும்..தமிழ் எழுத்தாளர்களையும் மதிப்போம்..தமிழன் ஒருவனைக் கண்டால் தமிழில் மட்டுமே பேசுவோம்...என இந்நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்
24)'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' பிறப்பினால் அனைவரும் சமம் என்பதைக் கடைப்பிடிப்போம்
25)வாழ்க தமிழ்...வளர்க தமிழ்..
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
சிறப்பு சுண்டல் சுவையாய் உள்ளது
வாழ்க தமிழ்...வளர்க தமிழ்.
தமிழின் பெருமை சந்தோஷமாயிருக்கு.ஆனால் அது படும் கஸ்டம்தான் வேதனை !
nalla thagaval
வணக்கங்கள்...
//தமிழன் ஒருவனைக் கண்டால் தமிழில் மட்டுமே பேசுவோம்//...என இந்நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
இது..இது தான் சூப்பர்(அருமை)சரியா?
பல நல்ல செய்திகளை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா
வருகை புரிந்தவர்களுக்கு நன்றி
நல்ல தகவல்கள்
நன்றி
//அழிந்துக் கொண்டிருக்கும் மொழிகளில் தமிழ் 16 ஆம் இடத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும்..அடுத்த நூற்றாண்டுகளில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழும் ஒன்றாயிருக்கும் என்று சொல்லப் படுகிறது.மற்ற மொழிகள் ஸ்பாநிஷ்.ஆங்கிலம்,சீன மொழி மற்றும் ஹிந்தி//
இது தொடர்பாக ஏதாவது தொடுப்பு இருந்தால் தெரிவிக்கவும். நன்றி!
நல்ல தகவல்கள். தமிழ் வாழ்க!
திராவிடம் என்பதுதான் தமிழின் திரிபேயன்றி தமிழ் திராவிடத்தின் திரிபன்று.
இதை தேவணேய பாவாணர் தன் ஆராய்ச்சியின் முடிவில் கூறியிருக்கிறார்.
எந்த தமிழ் இலக்கியத்திலாவது திராவிடன்,திராவிடம் என்ற சொல் இருக்கிறதா?
அரசியல் ஆதாயத்திற்காக சுயனலமிகளால் இடையில் சொருகப்பட்ட சொல் தான் திராவிடம்.
//7)துபாய்,மலேசியா,தென்னாப்பிரிக்கா,மொரீசியஸ்,பிஜி,டிரினிடாட்,ஆகிய நாடுகளில் சிறிய அளவில் பேசப்படுகிற அரிய மொழி.//
மலேசியாவில் தமிழர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் தமிழில் அதுவும் கலப்படமற்ற தமிழில் பேசுபவர்கள்தான். இது தங்களுக்கு சிறிய அளவாகத் தெரிகிறதா.
// Karthick Chidambaram said...
இது தொடர்பாக ஏதாவது தொடுப்பு இருந்தால் தெரிவிக்கவும். நன்றி!
நல்ல தகவல்கள். தமிழ் வாழ்க//
திங்களன்று பொதிகை தொலைக்காட்சியில் வைரமுத்து அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுத்து எழுதியது
வருகை புரிந்தவர்களுக்கும்..ஆதரவு வாக்களித்தவர்களுக்கும்..எதிர் வாக்களித்தவருக்கும் நன்றி
வாழ்க தமிழ்...வளர்க தமிழ்
நல்ல பதிவு!!
///ஹேமா said...
தமிழின் பெருமை சந்தோஷமாயிருக்கு.ஆனால் அது படும் கஸ்டம்தான் வேதனை //
சந்தோஷம - மகிழ்ச்சி
கஸ்டம் - துயரம்
(இயன்றவரை தமிழில் உரையாடுவோம்)
Post a Comment