Wednesday, June 9, 2010

நான் உப்பு விற்கப்போனால்...

பொதுவாக எல்லோரும் இப்படி சொல்வதுண்டு..

'நான் உப்பு விற்கப் போனா மழை பெய்யுது..மாவு விற்கப் போனா காற்றடிக்குது'ன்னு..

இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ..எனக்கு மிகவும் பொருந்தி வருகிறது..

நான் பெசன்ட் நகரிலிருந்து..சைதாபேட்டைப் போக 23Cபேருந்திற்கு நிற்கும் போது..பெரம்பூர் செல்லும் 29C பேருந்து மூன்று நான்கு ஒரே நேரத்தில் வரும்..எனக்கு வேண்டிய வண்டியே வராது.நான் பெரம்பூர் போக வேண்டி வருகையில் 29C வராது 23 C தொடர்ந்து வரும்.

என்றேனும் வேண்டிய வண்டி உடனே கிடைத்து..அதில் உட்கார இடமும் கிடைத்தால்..அந்த வண்டி அடுத்த இரண்டொரு நிறுத்தங்கள் தள்ளி பிரேக் டவுன் ஆகும்..பின்னால் வரும் வேறு வண்டியில் தொற்றிக் கொண்டு போக வேண்டி இருக்கும்.

பேருந்தில் நடத்துநருக்கு என்னைப் பார்த்தால் தான் எட்டணா சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டு போகத் தோன்றும்.

தியேட்டருக்கு சினிமா பார்க்கப் போனால்..தினமும் காலியாய் இருக்கும் தியேட்டர்..நான் போகும் அன்றுதான் கூட்டத்தோடு இருக்கும்..எனக்கு முன்னால் நிற்கும் நபர் வரை டிக்கெட் கிடைக்கும்..எனக்கு பே..பே..தான்

நான் எண்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் போகும் இடத்திற்கு..என் பின்னாலேயே வேறு ஒருவர் அதே இடத்திலிருந்து அறுபது ரூபாய் கொடுத்தேன் என்பார்

அவ்வளவு ஏன்..எனது இடுகைகள் பல 6 வாக்குகள் வாங்கி தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரையில் இடம் பெறாது இருந்தன..இப்போது சில நாட்களாக பத்து வாக்குகள் பெற்றும்..இடம் பெறவில்லை.வாசகர் பரிந்துரை எடுக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில்..'நான் உப்பு விற்க....' எனக்குத் தானே பொருத்தம்..

(ஏன்..மாவையும்..உப்பையும் சேர்த்து கேக்காக ஆக்கி விற்கலாமே..என புத்திசாலிகள் அறிவுரை கொடுக்கக் கூடும்..அறிவுரை மட்டும் தானே நாட்டில் மலிவாகக் கிடைக்கிறது)

52 comments:

அமைதிச்சாரல் said...

//அறிவுரை மட்டும் தானே நாட்டில் மலிவாகக் கிடைக்கிறது//

உண்மைதான் :-))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மீண்டு(ம்) வந்ததற்கு நன்றி ஐயா!

LK said...

welcome back :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சரிங்க ஐயா..

கண்ணைத் தொடைச்சுக்குங்க..!

நீங்க பழுத்த பழம்ல்ல..

அதுதான் இப்படி சோதனை வருது..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
மீண்டு(ம்) வந்ததற்கு நன்றி ஐயா!//

நன்றி ஜோதிபாரதி

அன்புடன் அருணா said...

SAME BLOOD!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//LK said...
welcome back :)//


நன்றி LK

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சரிங்க ஐயா..

கண்ணைத் தொடைச்சுக்குங்க..!

நீங்க பழுத்த பழம்ல்ல..

அதுதான் இப்படி சோதனை வருது..!//

நீங்க ஏன் சொல்லமாட்டீங்க..உங்களுக்கு உங்கப்பன் முருகன் இருக்கான்..என்னும் தைரியம் :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அருணா

பிரபாகர் said...

ம்... வாங்கய்யா! உங்களை நானும் தொடர்கிறேன்...(உப்பு விற்க அல்ல, இடுகையிட)...

பிரபாகர்...

ரமி said...

// நான் பெசன்ட் நகரிலிருந்து..சைதாபேட்டைப் போக 23Cபேருந்திற்கு நிற்கும் போது..பெரம்பூர் செல்லும் 29C பேருந்து மூன்று நான்கு ஒரே நேரத்தில் வரும்..எனக்கு வேண்டிய வண்டியே வராது.நான் பெரம்பூர் போக வேண்டி வருகையில் 29C வராது 23 C தொடர்ந்து வரும். //

Why blood? Same blood.

மோகன் குமார் said...

சார் என் பதிவுகளில் அவ்வப்போது அய்யாசாமி என ஒரு பாத்திரம் இப்படி தான் அவஸ்தைபடுவதாக எழுதுவேன். இது போன்ற நிகழ்வு பலருக்கும் அவ்வபோது நடக்கிறது

Karthick Chidambaram said...

//தியேட்டருக்கு சினிமா பார்க்கப் போனால்..தினமும் காலியாய் இருக்கும் தியேட்டர்..நான் போகும் அன்றுதான் கூட்டத்தோடு இருக்கும்..எனக்கு முன்னால் நிற்கும் நபர் வரை டிக்கெட் கிடைக்கும்..எனக்கு பே..பே..தான்//
யாரு படதிற்கு போனீங்க ? அத சொல்லுங்க

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/06/blog-post_09.html

வித்யா said...

29C அனுபவங்கள் எனக்கும் இருக்கிறது. பெசண்ட் நகரிலிருந்து கதீட்ரல் வருவதற்குள் அப்பாடா என்றிருக்கும்.

உங்களுக்கு :((

கே.ஆர்.பி.செந்தில் said...

இது எல்லோருக்கும் பொதுவாக நிகழும், நானும் இதைபற்றி நினைத்து ஆச்சர்யப் பட்டிருக்கிறேன் ஐயா .

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சார் விடுங்க பாலிதீன் கவர்ல போட்டு வித்துடலாம்!! (அறிவுரையல்ல பகுத்தறிவு.. :)))) )

--

எனக்கு பழகிடிச்சு சார்! :)

goma said...

எனக்கும் இது போல் தோன்றியிருக்கிறது.
சூப்பர் மார்க்கெட்டில் நான் அரை மணி நேரம் காத்திருந்து பில்லிங் வந்தால்,அப்பொழுதுதான் கணக்கு மிஷின் பேப்பர் சுருளை கவ்விப் பிடித்துக் கொண்டு அழிச்சாட்டியம் பண்ணும்,
...
லன்ச் பிரேக் போர்டு வந்து நம் முகத்தில் அடிக்கும்..

வானம்பாடிகள் said...

சார்! இதுக்கா சார் இப்புடி! என்ன பாருங்க சார்! அஞ்சா நெஞ்சன பாருங்க சார். கலர் டிவி 3000ரூ விலை ஏறப்போகுதுன்னு வீட்டில இருந்த காசெல்லாம் வழிச்செடுது விடியோகான் டிவி 30ம் தேதி வாங்கிட்டு, 31ம் தேதி பட்ஜட் முடிய ஒன்னாம் தேதி நான் வாங்கின அதே டி.வி. 2000 ரூ விலை குறைப்பு, ஒரு விடியோகான் டூ இன் ஒன் இலவசம். கெல்வினேட்டர் ஃப்ரிட்ஜ் எக்ஸேஞ்ச் பண்ண போய் கடையில கேட்டு அவன் எடைக்கு எடுத்திருந்தாலுமே 1000ரூ வந்திருக்கும். வெறும் 600ரூக்கு எக்ஸேஞ்ச் பண்ணக் கொடுத்துட்டு, அடுத்த நாள் பேப்பர் படிச்சா கெல்வினேட்டர் கம்பெனி காரனே எக்ஸேன்ச் விலையில எந்த பழைய கெல்வினேட்டர்னாலும் ரூ 1500க்கு எக்ஸேன்ச் போட்டான். ஸ்ஸ்ஸ்ஸ் ஆன்னு கூட மொனகலை. :)).

இராகவன் நைஜிரியா said...

// //அறிவுரை மட்டும் தானே நாட்டில் மலிவாகக் கிடைக்கிறது//

இனாமாக கிடைக்கின்றது... அதுவும் நிறையவே கிடைக்கின்றது.

ஆகாயமனிதன்.. said...

(ஏன்..மாவையும்..உப்பையும் சேர்த்து கேக்காக ஆக்கி விற்கலாமே..என புத்திசாலிகள் அறிவுரை கொடுக்கக் கூடும்..அறிவுரை மட்டும் தானே நாட்டில் மலிவாகக் கிடைக்கிறது)

தமிழா.... !!!! தமிழா... !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
ம்... வாங்கய்யா! உங்களை நானும் தொடர்கிறேன்...(உப்பு விற்க அல்ல, இடுகையிட)...

பிரபாகர்...//

பிரபா..உங்க மேல் எனக்குக் கோபம்..இரண்டாம் ஆசான் என்றெதெல்லாம் பொய்...அதனால்தான் என்னைப் பார்க்காமல் திரும்பிவிட்டீர்கள்..எனக்குத் தெரிந்திருந்தால் நானாவது வந்து பார்த்திருப்பேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரமி said...
// நான் பெசன்ட் நகரிலிருந்து..சைதாபேட்டைப் போக 23Cபேருந்திற்கு நிற்கும் போது..பெரம்பூர் செல்லும் 29C பேருந்து மூன்று நான்கு ஒரே நேரத்தில் வரும்..எனக்கு வேண்டிய வண்டியே வராது.நான் பெரம்பூர் போக வேண்டி வருகையில் 29C வராது 23 C தொடர்ந்து வரும். //

Why blood? Same blood.//

நன்றி ரமி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மோகன் குமார் said...
சார் என் பதிவுகளில் அவ்வப்போது அய்யாசாமி என ஒரு பாத்திரம் இப்படி தான் அவஸ்தைபடுவதாக எழுதுவேன். இது போன்ற நிகழ்வு பலருக்கும் அவ்வபோது நடக்கிறது//

ஆம் நீங்கள் சொல்வது உண்மை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
29C அனுபவங்கள் எனக்கும் இருக்கிறது. பெசண்ட் நகரிலிருந்து கதீட்ரல் வருவதற்குள் அப்பாடா என்றிருக்கும்.

உங்களுக்கு :((//

எனக்கு அம்மாடா...என்றிருக்கும் :))
வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Karthick Chidambaram said...
யாரு படதிற்கு போனீங்க ? அத சொல்லுங்க //

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இது எல்லோருக்கும் பொதுவாக நிகழும், நானும் இதைபற்றி நினைத்து ஆச்சர்யப் பட்டிருக்கிறேன் ஐயா//

வருகைக்கு நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சார் விடுங்க பாலிதீன் கவர்ல போட்டு வித்துடலாம்!! (அறிவுரையல்ல பகுத்தறிவு.. :)))) )//

இதுதான் பகுத்தறிவுங்களா? நான் வேற ஏதோன்னு நினைச்சேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
எனக்கும் இது போல் தோன்றியிருக்கிறது.
சூப்பர் மார்க்கெட்டில் நான் அரை மணி நேரம் காத்திருந்து பில்லிங் வந்தால்,அப்பொழுதுதான் கணக்கு மிஷின் பேப்பர் சுருளை கவ்விப் பிடித்துக் கொண்டு அழிச்சாட்டியம் பண்ணும்,
...
லன்ச் பிரேக் போர்டு வந்து நம் முகத்தில் அடிக்கும்..//

ரயில்வே ரிசர்வேஷன் போது இப்படி நடப்பதுண்டு..மேலும் லோயர் பர்த் கிடைக்காது..ஒரு சமயம் கவுண்டரில் லோயர் பர்த் கேட்டு கிடைத்தும் விட்டது.சந்தோஷமாக டிக்கட் வாங்கியதும் பார்த்தால் சைட் லோயர் :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாலா..எனக்கும் இப்படியெல்லாம் நடந்திருக்கு..ரொம்ப சொன்னா ஏமாளின்னு சொல்லிடப் போறாங்கன்னு தான் அடக்கி வாசித்திருக்கேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
// //அறிவுரை மட்டும் தானே நாட்டில் மலிவாகக் கிடைக்கிறது//

இனாமாக கிடைக்கின்றது... அதுவும் நிறையவே கிடைக்கின்றது.//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்னங்க..ஆகாய மனிதன் கூப்பிட்டீங்களா..?

கிருஷ்குமார் said...

Indha pathivukkum vai vittu sirichen..

வவ்வால் said...

Iodized salt vikkanumnu govt solluthu,neenga plain salt vithu makkalukku pathipu undakka paarthinga athan mazhai penju makkalai kaappathiduchu!

Selling uniodized salt is a crime under ipc pfa act 1954,unga pathivil oputhal vaakkumoolam koduthirupathal case poduvathu easy,enave munjaamin vaangi vaithukollavum. :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கிருஷ்குமார் said...
Indha pathivukkum vai vittu sirichen..//

நன்றி கிருஷ்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வவ்வால் said...
Iodized salt vikkanumnu govt solluthu,neenga plain salt vithu makkalukku pathipu undakka paarthinga athan mazhai penju makkalai kaappathiduchu!

Selling uniodized salt is a crime under ipc pfa act 1954,unga pathivil oputhal vaakkumoolam koduthirupathal case poduvathu easy,enave munjaamin vaangi vaithukollavum. :)//

என் சார்பில் முன் ஜாமீன் மனுவை நீங்களே தாக்கல் செய்யவும்...ஆவ்வ்வ்வ்வ்:)))

அக்பர் said...

சார். கொன்னுட்டிங்க போங்க. ஆனா இது எல்லோருக்கும் பொருந்தும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

உப்பும் மாவும் கேக்காகதான் ஆகனுமா என்ன? ஏன் உப்புமா ஆக கூடாது!

நசரேயன் said...

நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க

ஜெஸ்வந்தி said...

// நான் பெசன்ட் நகரிலிருந்து..சைதாபேட்டைப் போக 23Cபேருந்திற்கு நிற்கும் போது..பெரம்பூர் செல்லும் 29C பேருந்து மூன்று நான்கு ஒரே நேரத்தில் வரும்..எனக்கு வேண்டிய வண்டியே வராது.நான் பெரம்பூர் போக வேண்டி வருகையில் 29C வராது 23 C தொடர்ந்து வரும். //

Ha ha haa. It happens to everyone.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...
உப்பும் மாவும் கேக்காகதான் ஆகனுமா என்ன? ஏன் உப்புமா ஆக கூடாது!//

உப்புமா ..மழையில நனைஞ்சா நல்லாயிருக்குமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...
உப்பும் மாவும் கேக்காகதான் ஆகனுமா என்ன? ஏன் உப்புமா ஆக கூடாது!//

உப்புமா ..மழையில நனைஞ்சா நல்லாயிருக்குமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜெஸ்வந்தி

நியோ said...

// அவ்வளவு ஏன்..எனது இடுகைகள் பல 6 வாக்குகள் வாங்கி தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரையில் இடம் பெறாது இருந்தன..இப்போது சில நாட்களாக பத்து வாக்குகள் பெற்றும்..இடம் பெறவில்லை //
கலைப் படாதீங்க சார் ...
நானும் ஒரு ஒட்டு தமிழ் மணத்துல குத்திடுறேன் ...
வர்றேன் சார் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நியோ

ஆனால் நம்ம் ராசி(!) தமிழ்மணத்திலே வாசகர் பரிந்துரையைத் தூக்கிட்டாங்களே

மங்குனி அமைச்சர் said...

same blood

மோகன் குமார் said...

//ஆனால் நம்ம் ராசி(!) தமிழ்மணத்திலே வாசகர் பரிந்துரையைத் தூக்கிட்டாங்களே//

இல்லீங்க சார் உங்க இந்த பதிவு கூட 11 பரிந்துரை வாக்கு வாங்கி டாப்பில் இருக்கு. தமிழ் மணம் வாசகர் பரிந்துரை கிளிக் செய்து பாருங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மோகன் குமார் said...
இல்லீங்க சார் உங்க இந்த பதிவு கூட 11 பரிந்துரை வாக்கு வாங்கி டாப்பில் இருக்கு. தமிழ் மணம் வாசகர் பரிந்துரை கிளிக் செய்து பாருங்க//

:)))
நன்றி மோகன் குமார்

vr murugesan said...

:)