Friday, January 21, 2011

குறள் இன்பம் - 7





இந்த இடுகையில் வள்ளுவரின் சொல்விளையாட்டை மேலும் இரண்டு குறள்களில் பார்க்கலாம்..
வினை செயல் வகையில் எட்டாவது குறள்..

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

சாதாரணமாக..நாம் கடைக்கு கிளம்புகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்..மளிகை சாமான் வாங்கி முடித்து வீடு திரும்பும் போது..சமைக்க ஏதேனும் காய்கறியையும் அருகிலேயே கிடைக்கையில் ..ஒரே நடையாக அதையும் வாங்கிக் கொண்டு செல்வதில்லையா...அதைத்தான் சொல்கிறார் வள்ளுவர்..

எப்படி..

யானையைப் பிடிக்க நினைப்பவர்கள்..என்ன செய்வார்கள்..மற்றொரு யானையை ஒரு இடத்தில் கட்டி வைப்பர்.இது கண்டு..அந்த யானையைக் காக்க மற்றொரு யானை வந்து..பிடிக்க வெட்டப்பட்டிருக்கும் குழியில் விழுந்து அகப்பட்டுக் கொள்ளும்.இதுதான் யானையை வைத்தே யானையைப் பிடிப்பதாகும்.

மேலே சொன்ன குறளின் பொருள் -ஒரு செயலில் ஈடுபடும்போது, அச் செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

வினையான், வினையாக்கி,யானையால்,யானையா என்னே சொல் விளையாட்டு.

அடுத்த குறள்
நட்பு அதிகாரத்தில் ஆறாம் குறள்..

நட்பு என்னும் சொல் நான்கு இடத்திலும்..மற்றும் முகநக,தகநக எனவும் சொல் விளையாட்டு ஆடும் குறள்

நண்பரின் இல்லத்திற்குச் செல்கிறோம்..அவரோ குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இருக்கிறார்,நம்மைப் பார்த்ததும்..'அடடே வா..வா., என முகத்தில் மகிழ்ச்சியை காட்டி வரவேற்கிறார்.ஆனால் மனதிற்குள்..இவன் ஏன் இப்போது வந்து நம்மை தொல்லை செய்கிறான் என எண்ணுவாரானால்..அது நட்பு ஆகாது.மனதார மகிழ்ச்சியுடன் நண்பன் என்பவன் மற்றொரு நண்பனிடம் பழக வேண்டும்.

இதையே வள்ளுவர்...

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல..இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும் என்கிறார்.


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு


மீண்டும் அடுத்த இடுகையில் சந்திப்போம்.

10 comments:

ராமலக்ஷ்மி said...

விளக்கங்கள் அருமை.

Chitra said...

வாழ்க்கையின் எதார்த்தங்களை எத்தனை அழகாக உவமைகளுடன் சொல்லி இருக்கிறார்! பகிர்வுக்கு நன்றிங்க.

தமிழ் said...

அருமை

வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி திகழ்

goma said...

குறளில் வடியும் தமிழ்தேனை ,அழகாக பிழிந்து தந்திருக்கிறீர்கள்

goma said...

என் குறள் தொடரும் பாதியிலேயே நிற்கிறது .தொடரச் சொல்கிறது உங்கள் குறள் இன்பம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// goma said...
என் குறள் தொடரும் பாதியிலேயே நிற்கிறது .தொடரச் சொல்கிறது உங்கள் குறள் இன்பம்//

அருந்த அருந்த திகட்டாதது குறள்..
தொடருங்கள் கோமா

ஹேமா said...

தேடித் தரும் குறள் இன்பம் எப்போதும் சலிக்காது.