இலங்கையில் போருக்குப் பிறகு அங்கு வாழும் தமிழர்கள் நிலை குறித்து அறிய வக்கீல் அங்கயற்கண்ணி,நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்த்த திருமலை ஆகியோர் இலங்கை சென்றனர்.அங்கு சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
வக்கீல் அங்கயற்கண்ணி சொன்ன தகவல்கள்
தமிழர்கள் வாழும் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகள்.ராணுவச் சிறையில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரின் வீடு இடிந்துக் கிடப்பதைப் பார்த்தோம்.அவரது தாயார் அங்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.தமிழ் நாட்டிலிலிருந்து நாங்கள் வருவதாகக் கூறியதும்..அவரது கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தது.அவர்களால் பேச இயலவில்லை.
வவுனியா அருகே ஓமந்தை என்ற இடத்தில் சோதனை சாவடியில் எங்களிடம் விசாரித்து, உளவுத் துறை போலீஸ் கைது செய்தனர்.பின்னர் பயங்கரவாத விசாரணைத் துறையில் காவலில் வைத்தனர்.பின் நீதிபதியிடம் எங்கள் நிலமையை விளக்கியதும் விடுவிக்கப் பட்டோம்.
உணவு,மருத்துவ வசதி எதுவும் இல்லாமல் ஈழத் தமிழர்கள் தவிக்கின்றனர்.அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.என்று கூறினார் வக்கீல் அங்கயற்கண்ணி .
அவர் மேலும் கூறுகையில்'கிளிநொச்சியில் மக்கள் அகதிகளாகவே உள்ளனர்.ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களே இல்லை.பெண்களும், குழந்தைகளும்..கால்,கைகள் இல்லாமல்,கண்கள் குருடான நிலையில் உள்ளனர்.ஊனமில்லாத குடும்பத்தையேப் பார்க்க முடியவில்லை.
மொத்தத்தில் அங்கு தமிழ் இனத்தை அழித்திருக்கிறார்கள்..அழித்துக் கொண்டும் இருக்கிறார்கள் ..என்றார்..
டிஸ்கி..இப்போது மைய அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவருவது குறித்து கவலைப்படுவதாக நடித்துவருகிறார்கள்.இது ஒரு ஹைக்கூவையே ஞாபகப்படுத்துகிறது..
ஆடுகள் நன்கு
தின்று கொழுக்கட்டும்
நாளை ரம்ஜான்
11 comments:
மொத்தத்தில் ...
தமிழ் இனத்தை ...
அழித்துக் கொண்டு... இருக்கிறார்கள் .
சத்தமில்லா யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது ஈழத்தில்.கண்டுகொள்வீர்களா....
கண்டுகொள்வார்களா!
ஈழத் தமிழன் நம்மை மன்னித்து விடுவான்.
ஆனால் - வரலாறு நம்மை ஒரு போதும் மன்னிக்கப் போவது இல்லை:(
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
நண்டு @நொரண்டு
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
ஹேமா
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
Nagasubramanian
அங்கயர்க்கண்ணி, பெருஞ்சித்திரனாரின் பேத்தி ....
மிகவும் வருத்தம் உண்டாக்கிய செய்தி..:((
//கே.ஆர்.பி.செந்தில் said...
அங்கயர்க்கண்ணி, பெருஞ்சித்திரனாரின் பேத்தி .... .//
ஆம்..அதைக் குறிப்பிட மறந்து விட்டேன்.நன்றி செந்தில்
வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்
Post a Comment