Wednesday, January 5, 2011

அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து விலகினார் அழகிரி

மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக கூறும் கடிதம்.

தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்குமாறும், அது முடியாத பட்சத்தில் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டாராம் அழகிரி.

அழகிரி கோரிக்கைகள்:

- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

- நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியை விட்டு அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

- சென்னையில் கனிமொழி ஏற்பாடு செய்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அழகிரி வைத்துள்ளதாக தெரிகிறது.

- மாநில அளவில் கட்சியில் தனக்கு முக்கியப் பொறுப்பு தர வேண்டும்

மேலும், கோபாலபுரம் இல்லத்தை இலவச மருத்துவமனையாக்கும் திட்டத்திற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அழகிரியின் இந்த புதிய போர்க்கொடியால் திமுக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

இருப்பினும் அழகிரியின் இந்த போர்க்கொடி முதல்வரைக் கவலைப்படுத்தவில்லை என்று தெரிகிறது. மாறாக, இதை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேற்று நடந்த திமுக உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எதைப் பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் நம்முடன் நீடிப்பது உறுதி. அதேபோல பாமகவும் நம்முடன் வரும். எனவே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று முதல்வர் கூறியுள்ளாராம். இந்தக் கூட்டத்தில் அழகிரி கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்றுஇரவு முதல்வர் கருணாநிதியை அழகிரி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுக வட்டாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
(நன்றி  தட்ஸ்தமிழ் )

டிஸ்கி-அழகிரி ராஜினாமா பற்றி வந்த செய்தியை டி.ஆர்.பாலு(!!) மறுத்துள்ளார்

14 comments:

Chitra said...

தலைவர் வீட்டில் இப்பொழுதே, "பொங்கலோ பொங்கல்"!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
தலைவர் வீட்டில் இப்பொழுதே, "பொங்கலோ பொங்கல்"!//

:))))

பூங்குழலி said...

கடிதத்தை பிரதமரிடமா கொடுத்தார் ?அவர் அப்பாவிடம் தானே ?இவர்கள் வீட்டு செல்ல சண்டைக்கு நாம் எதற்கு பார்வையாளர்கள் ஆக வேண்டும்?ராஜினாமா செய்தால் செய்யட்டுமே ?ஏதாவது நாட்டுக்கு நஷ்டமா என்ன ?

Rajasurian said...

சும்மா சீன் காட்றாங்க.

//ராஜினாமா செய்தால் செய்யட்டுமே ?ஏதாவது நாட்டுக்கு நஷ்டமா என்ன ? //

அதே அதே :)

vasu balaji said...

மிச்ச மீதி சொத்து கணக்கு வருமா சார்:))

சிநேகிதன் அக்பர் said...

சார் உங்க டெம்ப்ளேட் அழகு ஆனால் ஸ்லோவாக இருக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பூங்குழலி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Rajasurian

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
மிச்ச மீதி சொத்து கணக்கு வருமா சார்:))//

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஆசை பாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// சிநேகிதன் அக்பர் said...
சார் உங்க டெம்ப்ளேட் அழகு ஆனால் ஸ்லோவாக இருக்கிறது//
ஆமாம்..அக்பர்..எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க.
ஆனா இப்ப எல்லாம் டெம்ப்ளேடை மாற்றினா சில தகவல்கள் காணாமல் போய் விடுகிறது..அதனால் மாற்ற தயக்கமாய் உள்ளது

Unknown said...

எனக்கென்னமோ இதுவும் ஒரு நடகமாகதான் தோன்றுகிறது ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
எனக்கென்னமோ இதுவும் ஒரு நடகமாகதான் தோன்றுகிறது//

எனக்கென்னவோ..அழகிரி கொஞ்சம் straight forward ஆ இருப்பரோன்னு தோணுது

ராஜ நடராஜன் said...

//தலைவர் வீட்டில் இப்பொழுதே, "பொங்கலோ பொங்கல்"! //

பொங்கலோ பொங்கல்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
//தலைவர் வீட்டில் இப்பொழுதே, "பொங்கலோ பொங்கல்"! //

பொங்கலோ பொங்கல்!//

பொங்கலோ பொங்கல்:)))