அமைச்சரே!..நம் நாட்டில் பால் பொங்கியாயிற்றா
மந்திரி-தங்கள் பால் கோபம் பொங்கியாயிற்று மக்களுக்கு
2)பொங்கல் இனாம்னு இப்ப யாரும் வரதில்லையே பார்த்தியா
அதுதான் அரசாங்கமே எல்லாமே இனாமாக் கொடுத்துடறாங்களே
3)பொங்கலுக்கு என்ன படம் பார்க்கப் போற
ஆடுகளத்திலே சிறுத்தையா,இளைஞனா காவலனுக்குப் போறேன்
4)போன மாதத்திற்கு இந்த மாசம் எல்லாம் ஏறியிருக்கே பார்த்தியா..எதிலும் இறக்கம் இல்லை
பேப்பரை பாரு..இந்த மாசம் ஊழல்கள் போன மாசத்தைவிடக் குறைவாய் தான் இருக்கு
5)ஏம்மா..உனக்கு வரப்போறவன் வேலைக்குப் போகணும்,நல்லாவும் சமைக்கத் தெரியணும் இப்படி இரண்டும் சேர்ந்த மாப்பிள்ளை கிடைக்கறது கஷ்டமாச்சே
தனித்தனியாய் கிடைச்சாலும் இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் அப்பா
6)அவர் போன பிறவியிலே கழுதையா பிறந்திருப்பார்னு எப்படி சொல்ற
ஒரு சப்பாத்தியை பேப்பர் பிளேட்ல போட்டுக் கொடுத்தேன்.சாப்பிட்டுவிட்டு இரண்டாவது சப்பாத்தி நல்லாயிருக்குன்னு சொன்னார்
7)அந்த தலைவர் போலின்னு எப்படி சொல்ற
இதுவரைக்கும் எந்த ஊழலும் செய்யாதவராய் இருக்கறதாலத்தான்
8 comments:
super
//பொங்கலுக்கு என்ன படம் பார்க்கப் போற
ஆடுகளத்திலே சிறுத்தையா,இளைஞனா காவலனுக்குப் போறேன்
//
சரித்திரம்..,
//இந்த மாசம் ஊழல்கள் போன மாசத்தைவிடக் குறைவாய் தான் இருக்கு//
இப்படிக்கூட சந்தோஷப் படலாம் தல..,
பாஸிட்டிவ் அப்ரோச்ச்
//தனித்தனியாய் கிடைச்சாலும் இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் அப்பா
//
அதுக்குப்பேர்தான் தன்னம்ப்பிக்கை
5ந்தவது அவசியமானது ஹிஹிஹிஹி
நன்றி விக்கி உலகம்
வருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)
வருகைக்கு நன்றி டி.சாய்
Post a Comment