Thursday, January 20, 2011

தோனியும்..மன் மோகன் சிங்கும்..


                                                         நீயும் நானும் ஒன்னாம்
                                                     

கிரிக்கெட்டில் வெற்றி கேப்டனாக திகழ்ந்து வருகிறார் தோனி..

மன்மோகன் சிங், சோனியாவின் ஆதரவு பெற்றதில் வெற்றி பிரதமராக இருக்கிறார்.

தோனிக்கும், மன்மோகன் சிங்கிற்கும் உள்ள ஒற்றுமை ..வியக்க வைக்கும் ஒன்றாகும்..

தோனி தலைமையிலான அணி வெற்றி பெறுகையில்..பாராட்டும் மக்கள்..ஏதேனும் போட்டியில் தோற்றாலோ அவரை உண்டு, இல்லை என ஆக்கிவிடுகின்றனர்..

அது கண்டு தோனி வருந்துவதில்லை.

அதுபோல மன் மோகன் அரசை உச்ச நீதி மன்றம் பல முறை சாடியுள்ளது.மன் மோகன் சிங், சற்றும் அது பற்றி கவலையோ, வருத்தமோ பட்டதில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் சரி, உணவு தானியங்கள் வீணாகப் போவதாக கூறப்பட்ட வழக்கிலும் சரி உச்ச நீதி மன்றம் சொன்னதற்கு..சற்றும்..கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

இப்போது கருப்பு பண விவகாரமாக அடுத்தடுத்து இரண்டு முறை மத்திய அரசை கடுமையாக உச்ச நீதி மன்றம் சாடியுள்ளது.நாட்டின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.அந்த செயலை அரசு ஏன் மறைக்கப் பார்க்கிறது? எனக் கேட்டுள்ளது.

மன் மோகன் சிங்..இது விஷயமாக மத்திய அரசின் இயலாமையை, பிரணாப் ஊடகங்களுக்கு எடுத்துச் சொல்லச் சொல்லும் பணியை ஒப்படைத்துள்ளார்.

தோனி, எதிரணி அபாரமாக விளையாடும் போதும் சரி, நம் அணியினர் விக்கெட் சொற்ப ஓட்டங்களுக்கு மட மட வென சரிந்தாலும் சரி..சற்றும் மனம் வருந்தாமல், டென்ஷன் இல்லாமல்..சிரித்தபடியே விளையாடுவது போல..எந்த நிலையிலும்..தனது ரியாக்க்ஷனைக் காட்டாது..எதுவுமே நடக்காததுப் போல இருக்கிறார் பிரதமர்.

ஆனால் ஒன்று விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி, தோல்விகளை சமமாகப் பார்க்க வேண்டியது அவசியம்..அப்போதுதான் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முடியும்.

ஆனால் பிரதமருக்கு அந்தக் கவலையில்லை..கட்சியின் வெற்றி தோல்வியை சோனியா பார்த்துக் கொள்வார்.கட்சி வெற்றியடைந்தால்..ராஜ்யசபா உறுப்பினர் ஆகிவிடலாம்.பிரதமர் ...ஆட்சியை நடத்தவும் பிரணாப், சோனியா, ஒபாமா ஆகியோர் உள்ளனர்.

9 comments:

Philosophy Prabhakaran said...

என்ன விதமான கம்பரிசன் இது... ஒன்றும் விளங்கவில்லையே...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிஸீஸீஐ என்பது இந்திய அணியா? என்பதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்ன இருந்தாலும் பிரதமராக இருப்பது வெளையாட்டான வேலையாக எல்லாம் இருக்காது

எல் கே said...

தவறான ஒப்பீடு. வெளியில் சிரித்தாலும், பயிற்சியின் பொழுது வீரர்களை கடுமையாக பயிற்சி செய்யவைத்து விடுவார்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல் கே...
தோனி போல டென்ஷன் ஆகாமல் இருப்பவர் இவர் என்ன நடந்தாலும்..எனக் கொள்ளவும் :)))

"உழவன்" "Uzhavan" said...

nice comparison :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//phy Prabhakaran said...
என்ன விதமான கம்பரிசன் இது... ஒன்றும் விளங்கவில்லையே//
சுற்றி என்ன நடந்தாலும் கவலையில்லாமல் இருப்பதுபோல இருப்பவர் பிரதமர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வீராங்கன் said...
என்ன இருந்தாலும் பிரதமராக இருப்பது வெளையாட்டான வேலையாக எல்லாம் இருக்காது//



இன்றைய பிரதமர் ஒரு பம்பரம்..(வைகோவை சொல்ல வில்லை) சாட்ட யார் கையில் என சொல்ல வேண்டுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

சரியாகப் புரிந்துக் கொண்டமைக்கு நன்றி உழவன்