Monday, January 31, 2011

பதிவர்களை கிண்டலடிக்கும் விகடன்..வன்மையாகக் கண்டிக்கிறேன்





விகடன்...26-1-11 இதழில் கதை என்ற பெயரில் கட்டுரை ஒன்று.'சரஸ்வதி விஜயம்' என்று..புத்தகக் கண்காட்சிக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

இதில் தேவையில்லாமல் இணையத்தைப் பற்றியும்..பதிவர்களைப் பற்றியும் எழுதியுள்ளனர்.

இதை அனைத்துப் பதிவர்களும் ஏன் கண்டனம் செய்யவில்லை..

அவர்கள் கிண்டலைப் பாருங்கள்..

"திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகள் மாதிரி முழித்துக் கொண்டு சிலர் வலதும், இடதுமாகப் பிரக்ஞை இன்றிப் பார்த்தவாறே போய்க்கொண்டு இருந்தார்கள்.நிச்சயமாக இவர்கள் பிளாக்கர்கள்.அடுத்த வருடம் எழுத்தாளர்கள் ஆகிவிடுவார்கள்.

இரண்டு பிரக்ஞை அற்றவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள்.'

'நீங்க ..நீ..மம்பட்டியாந்தானே?"

"நீங்க..நீ..வெட்டியாந்தானே?" இன்டெர்நெட் எழுத்தாளர்களின் புனைப் பெயர்களுக்குப் பின்னால் கதையோ, காரணமோ எந்தக் கண்றாவியும் கிடையாது.ஆரத் தழுவிக் கொண்டார்கள்.போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.மறுநாள் இந்த சந்திப்பைப் பிளாக்கில் போட்டோவோடு போட்டு விழா மாதிரி கொண்டாடுவார்கள்'

வருத்தம் இல்லா வாசகர் சங்கத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் பிளாக்கர்கள்.கூகுள்காரன் இலவசமாக பிளாக் எழுதிக் கொள்ள இடம் கொடுத்ததுமே..இணையத்தில் துண்டு போட்டு இலக்கியத்தில் குடிசை போட்டவர்கள்.இன்டெர்னெட்டில் டன் கணக்கில் எழுத்துக் குப்பை கொட்டுபவர்கள்.இவர்களே ஒருவருக்கு ஒருவர் 'எழுத்துச் சூறாவளி' 'இலக்கியச் சுனாமி' என்று பட்டம் கொடுத்துக் கொண்டவர்கள்.அவ்வப்போது மொண்ணையாக ஏதாவது கூட்டம் போடுவார்கள்.மைக் பிடித்து சப்பையாகப் பேசுவார்கள்.இந்த இலக்கிய நிகழ்வுகளின் போட்டோக்களை இண்டெர்னெட்டில் ஒரு ரவுண்டு ஓட்டுவார்கள்.

என்னதான் நகைச்சுவை என்றாலும்..பதிவர்களை கேலி செய்து சமணன் எழுதியுள்ள இக்கதையை வன்மையாக சக பதிவன் என்ற முறையில்  வன்மையாகக் கண்டிக்கிறேன்.

68 comments:

ILA (a) இளா said...

:) உண்மை இல்லையா? அப்படித்தானே நாம. அப்படித்தானே அவுங்களும் இருந்திருப்பாங்க? வலியோனை இளையோன கிண்டல் செய்யும் முறைதானே இது

Prasanna Rajan said...

இதில் என்ன கண்டிக்க வேண்டியிருக்கிறது?? அத்தனையும் உண்மை. எல்லோரும் விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டியவர்களே. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருந்திருந்தால் இந்த பதிவே போட்டு இருக்க மாட்டீர்கள்...

டக்கால்டி said...

Take it easy. Please be sportive.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிவர்கள் டன்..டன் னாக எழுதுவது குப்பை என்பதை என்னால் நகைச்சுவையாய் ஏற்க முடியவில்லை.இதனால் எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று சொன்னாலும் நான் கவலைப்படவில்லை Prasanna Rajan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி இளா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி டக்கால்டி

goma said...

,விகடன் [கதையில் வரும் கருத்துக்கு யாரும் பொறுப்பாக முடியாது .நீங்கள் விகடன் கிண்டல் அடிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்....இதே விகடன்தான் யூத்ஃபுல் விகட்னாக ,எத்தனை பிளாகரை மரியாதைப் படுத்தியிருக்கிறது.]
பிளாக் என்பது பிறர் வாசிக்க அனுமதி அளிக்கப்பட்ட ஒரு திறந்த டைரி.
அந்த எண்ணத்தோடு எழுதினால் பிரச்சனை இல்லை.
கதாபாத்திரத்தின் மூலம் ஆசிரியர் சொல்லியிருப்பது ஒன்றிரண்டு ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் இருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்வோம்.

Philosophy Prabhakaran said...

குறிப்பிட்ட கட்டுரையை எழுதியது யார் என்று தெரியுமா தலைவரே... பயபுள்ள இங்கே இருந்து போனவனா தான் இருப்பான்...

பவள சங்கரி said...

thanks for sharing

எல் கே said...

கண்டிப்பா எழுதுனதும் ஒரு பதிவர்தான் அதில் சந்தேகமே இல்லை

Unknown said...

விடுங்க......... இந்த பதிவுலகத்துல எழுதுறவங்க அதிகபட்சம் தங்களின் மன ஆற்றாமைய எழுதி அதுல ஒரு மன சாந்தி கொள்ராங்க..........பாவம் காசுக்காக பத்திரிகையோட தங்களின் கருத்துக்களையும் விக்கும் கூட்டதிட்க்கு அது புரியாது விடுங்க...........நாம எவ்ளோ பேர கிண்டலடிக்கிறோம் அதே மாதிரி சிரிச்சிட்டு போக வேண்டியது தான் ஹி ஹி!

தமிழ் உதயம் said...

கட்டுரையில் சில உண்மைகள் இருந்தாலும், பதிவுலகின் வளர்ச்சி அவர்களை மிரட்சி அடையவே செய்யும், அதில் வரும் பல அற்புதமான கட்டுரைகள், பத்திரிகைகளில் வாசிக்க இயலாதவைகள். இவர்களும் தங்கள் இணைய தளத்தில் நடிகைகளின் கேலரி போடுபவர்கள் தானே. வலைத்தளத்தை கேலி பேசும் தகுதி அவர்களுக்கு இல்லை தான்.

Prathap Kumar S. said...

உண்மைதானே சார்...சொல்லிருக்கானுங்க... இது கோபம்பட என்ன இருக்கு....
நடக்க்றதை அப்படியே எழுதிருக்கானுங்க...:)))

சமுத்ரா said...

உண்மை தான்...ஆனால் பதிவுலகிலும் சிறந்த எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

ஆனந்தி.. said...

அட..அது நகைச்சுவை கதை தானே ராதா சார்...be sportive..நானும் அதை படிச்சு சிரிக்க தான் செஞ்சேன்...கோவம் எல்லாம் வரலை...விகடன் பதிவர்களை தட்டி கொடுத்தும் இருக்காங்க ராதா அவர்களின் energy பக்கங்கள் மூலமா..ஜாலி ஆ படிச்சிட்டு சிரிச்சிட்டு போகலாமே...எதுக்கு கண்டனம் எல்லாம்...

idroos said...

Vikatana kandichi oru thodar padhivu potralama

idroos said...

Vilayaatukku sonnen boss

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனத்துக்கு எல்லாருமே உட்பட்டுத்தான் ஆக வேண்டும். நாம் கூட விகடனை விமர்சிக்கிறோமே...டேக் இட் ஈஸி பாலிசி தேவை

Unknown said...

Bloggers shouldn't expect, immunity from critics!

goma said...

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் பிளாகர்கள் பல உயர்மட்ட பேர்வழிகளுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருக்கிறார்கள்.
பத்திரிகைகள் வெளியிடத் தயங்கும் கருத்துக்கள் எல்லாம் நானே எழுத்தாளன் நானே பத்திரிகை ஆசிரியர் என்ற பாணியில் பகிரங்கமாகப் பகிர்ந்து விடப்படுவதால்...பதிவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது

கோவி.கண்ணன் said...

//பதிவர்கள் டன்..டன் னாக எழுதுவது குப்பை என்பதை என்னால் நகைச்சுவையாய் ஏற்க முடியவில்லை.//

எனக்கென்னவோ அந்த நகைச்சுவையை யாரோ பதிவர் தான் எழுதிக் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கோவி.கண்ணன் said...

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. பதிவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல

Anonymous said...

இப்பதான் புகைய ஆரம்பிச்சிருக்கு பொறாமை,கடுப்பு எல்லாம்

settaikkaran said...

இதை வலைப்பதிவர்களுக்கு விகடன் தந்திருக்கிற மறைமுகமான விளம்பரம் என்று எடுத்துக்கொண்டு போகலாம். அவங்க சொன்னதுலே பெரிசா ஏதும் தப்பிருக்கிரா மாதிரி படலியே...! :-))

துளசி கோபால் said...

அவர் அதை எழுதி 'சன்மானம்' வாங்கி இருப்பாரு.

பிரபல பத்திரிகைகளும் 'பக்கம் நிரப்ப' இப்போ பதிவர்கள் எழுத்து தேவையா இருப்பதைக் கவனிச்சீங்களா?

அவுங்க எடுத்துப்போட்டதும் நாமும் ஆஹா.... இதுலே வந்துருக்கு அதுலே வந்துருக்குன்னு பெரும் மகிழ்ச்சி அடையறோமுல்லே:(

சரி விடுங்க. பழமொழி ஒன்னு நினைவுக்கு வருது..... எதையோ..பார்த்து...... எதுவோ....ப்ச்

Unknown said...

விகடனின் எழுத்தில் உண்மை இருக்கும் அதே நேரத்தில், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை என்பது அதிர்ச்சியாகவில்லை. எனெற்றால் பிளாக்கர் அனைவரும் தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என்றோ, எழுத்தாளர்கள் என்றோ சொல்வது கிடையாது.
அதே நேரத்தில் விகடன் உற்பட தமிழத்தில் வரும் ஏனெய பத்திரிகைகைளின் நிலை அனைவரும் அறிந்ததே.
அன்புடன்
வேலு சாந்தமூர்த்தி.

வல்லிசிம்ஹன் said...

சினம் கொள்வதில் என்ன தவறு. பெண்களைக்கேலி சொல்வார்கள், மாமியார் ஜோக் பிரபலமாகும்,இப்போது ஆள் யாரும் கிடைக்கவில்லை பதிவர்களைச் சொல்கிறார்கள். இங்கே எழுதுவதெல்லாம் குப்பை என்றால் பத்திரிகைகள் மட்டும் வேறு என்ன விஷயங்களைச் சொல்கின்றன. நடிகைகள், வம்பு தும்புகள் தானே!

சீனு said...

இதுல கண்டிக்க என்ன இருக்கு? உண்மை தானே? இதை ஜஸ்ட் ஜோக்கா எடுத்துகிட்டு போங்க பாஸ். நாம இங்கன உக்காந்து ஒபாமாவை கிழிக்கலையா? அதுபோல தான்...

Anonymous said...

நாம் உச்சத்திலேயே நிலைத்திருக்க வேண்டும் என்றால்... இரண்டு விஷயங்கள் செய்ய வேண்டும்.
ஒன்று வளர்ந்து வருபவர்களை விமர்சனம் செய்ய வேண்டும். மற்றொன்று வளர்ந்து உச்சத்தில் இருப்பவர்களை கிண்டல் அடிக்க வேண்டும். இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் என்று புரிகிறதா?

ரிஷபன்Meena said...

உண்மை சுடும்

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப குறைந்து விட்டது என்று மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது எவ்வளவு நிஜம் என்று புரிகிறது

நல்லதொரு விகடன் கட்டுரையை/கதையை படிக்க தந்ததுக்கு நன்றி!!

Kaarthik said...

நாம் நடிகர்களையும், எழுத்தாளர்களையும், அரசியல்வாதிகளையும் செய்யாத கிண்டலா இதில் வந்து விட்டது? . இதையெல்லாம் Sportive-ஆக எடுத்துக் கொள்வோமே :-)

shameer said...

இதில் என்ன கண்டிக்க வேண்டியிருக்கிறது?? அத்தனையும் உண்மை. எல்லோரும் விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டியவர்களே. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருந்திருந்தால் இந்த பதிவே போட்டு இருக்க மாட்டீர்கள்..

PRASANNA RAJAN///உங்க நேர்மைய எனக்கு புடிச்சிருக்கு!!!!!!

அமர பாரதி said...

Take it easy Tvrk sir. Everything they said is true.

கடம்பவன குயில் said...

இதில் கண்டனத்திற்கு என்ன இருக்கு? தைரியமாய் ப்ளாக் ஆரம்பித்து சுதந்திரமாய் எழுதும்போது விமர்சனத்தை பார்த்து பயந்தால் முடியுமா? இதெல்லாம் ஒரு விளம்பரம்னு ஜாலியாக எடுத்துகிட வேண்டியதுதான்.அவகளுக்கு இல்லாத எழுத்து சுதந்திரம் நமக்கு நம்ம ப்ளாக் கில் இருக்கில்ல அந்த வயிதெரிச்சல்தான் அவுகளுக்கு. வேறென்னத்த சொல்றது போங்க

சீனு said...

H.srividhya,

//அவகளுக்கு இல்லாத எழுத்து சுதந்திரம் நமக்கு நம்ம ப்ளாக் கில் இருக்கில்ல அந்த வயிதெரிச்சல்தான் அவுகளுக்கு. வேறென்னத்த சொல்றது போங்க//

அவர்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லையென்பது உண்மை தான். ஆனால் அது restriction + பொருப்பும் கூட. வயித்தெரிச்சல் இருக்காது.

நாம எழுதறதுக்கு வீட்டுக்கு ஆட்டோ வரும்னா நாமளும் அப்படி எழுதமாட்டோம் இல்லையா? ;)

ராஜ நடராஜன் said...

மொத்த பின்னூட்டங்களும் உங்களுக்கு சாதகமாக இல்லை.எத்தனை பேரை நாம் விமர்சிக்கிறோம்.நாமும் விமர்சனத்துக்குட்பட்டவர்களே.Take it easy!

Thekkikattan|தெகா said...

What I feel the bloggers are well informed, and lot smarter than the so called பக்கத்தை நிரப்பும் முண்டக்கன்னிகள்! எங்க வலிக்குதாம்...

Thekkikattan|தெகா said...

//அவுங்க எடுத்துப்போட்டதும் நாமும் ஆஹா.... இதுலே வந்துருக்கு அதுலே வந்துருக்குன்னு பெரும் மகிழ்ச்சி அடையறோமுல்லே:(///

துளசி அவர்கள் கூறியதை நம் பதிவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த பைத்தியக்காரத்தனமே இவர்களை இப்படியெல்லாம் பகடி பண்ணி பக்கத்தை நிரப்பி 200 ரூபாய் சம்பாரிக்கச் சொல்லுது. பயம் வந்துவிட்டது என்று கொள்வதைத் தவிர வேறு எப்படியாக எடுத்துக் கொள்ள முடியும்?

Dr. Selvaganesan said...

பதிவர்களைப் பற்றிய உண்மை நிலைதானே. ஒரு சில பதிவர்களுக்கு வாசிப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
மொத்த பின்னூட்டங்களும் உங்களுக்கு சாதகமாக இல்லை.எத்தனை பேரை நாம் விமர்சிக்கிறோம்.நாமும் விமர்சனத்துக்குட்பட்டவர்களே.Take it easy!//
சாதகமான பின்னூட்டங்கள் வரவில்லை என்ற வருத்தம் எனக்கில்லை.
என்னைப் பொறுத்தவரை..எந்த ஒரு பதிவரும் தான் எழுதுவதை இலக்கியம் என்று சொல்வதில்லை.
எவரும் தங்களுக்குள் எந்த பட்டங்களையும் கொடுத்துக் கொள்ளவில்லை.
ஒட்டு மொத்தமாக பதிவர்கள் எழுதுவதை எல்லாம் குப்பை என்றதை யார் என்ன சொன்னாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
என் மனதில் இதில் நகைச்சுவையை விட எள்ளி நகையாடல் அதிகம் இருந்ததாலேயே இப் பதிவு.

ராம்ஜி_யாஹூ said...

நான் உங்கள் பக்கம் டி வி ஆர் , இந்த விசயத்தில்.
உண்மையில் பல பதிவர்கள் அச்சு எழுத்தாளர்களை/ஊடகங்களை விட சிறப்பாகவே எழுதுகின்றனர்.

இங்கே பல பதிவர்களுக்கும் தாங்கள் விகடனை குறை சொல்லி எழுதினால் நாளை தங்கள் பதிவோ/ட்விட்டரோ /பெயரோ விகடனில் வராமல் பொய் விடும் என்ற அச்சம் மிக முக்கிய காரணம்

ராம்ஜி_யாஹூ said...

போய் விடும்

சீனு said...

ராம்ஜி_யாஹூ,

//இங்கே பல பதிவர்களுக்கும் தாங்கள் விகடனை குறை சொல்லி எழுதினால் நாளை தங்கள் பதிவோ/ட்விட்டரோ /பெயரோ விகடனில் வராமல் பொய் விடும் என்ற அச்சம் மிக முக்கிய காரணம்//

நல்ல கண்டுபிடிப்பு. போங்க பாஸு... :))

Jegan said...

டக்கால்டி said...
"Take it easy. Please be sportive."

விகடனில் நான் படிக்காமல் விட்ட கட்டுரையை இங்கே வெளியிட்டமைக்கு நன்றி. உண்மையைத்தானே எழுதியிருக்காங்க. ரசித்துவிட்டு சிரித்து விட்டு போலாம். அதை விட்டுட்டு சின்ன சின்ன விஷயத்தஎல்லாம் பெரிசாக்க தேவையில்லை. அதெல்லாம் அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்.

மணிஜி said...

விகடனில் நிறைய பதிவர்கள் வேலை பார்க்கிறார்கள்...சும்மா கலாய்ச்சிருப்பாங்க.....ணாவா கூட இருக்கலாம்

மணிஜி said...

//ராம்ஜி_யாஹூ,

//இங்கே பல பதிவர்களுக்கும் தாங்கள் விகடனை குறை சொல்லி எழுதினால் நாளை தங்கள் பதிவோ/ட்விட்டரோ /பெயரோ விகடனில் வராமல் பொய் விடும் என்ற அச்சம் மிக முக்கிய காரணம்//

நல்ல கண்டுபிடிப்பு. போங்க பாஸு... :)//

ராம்ஜி சொன்னது உண்மை. அங்கும் அரசியல் உண்டு....

மணிஜி said...
This comment has been removed by the author.
ஜீவன்சிவம் said...

நான் இது குறித்து ஏற்கனவே ஒரு பதிவு போட்டேன்..அது மீண்டும் உங்கள் பார்வைக்கு
http://nanbansuresh.blogspot.com/2011/01/blog-post_28.html

M.G.ரவிக்குமார்™..., said...

நம் பதிவர்களின் படைப்புகள் இல்லாமல் இப்போதெல்லாம்
விகடனே வருவதில்லை.
மழையை சொல்பவர் ரமணன்
பிழையாய் சொல்பவர் சமணன் என விட்டு விட்டுப் போக வேண்டியது தான்!

PRABHU RAJADURAI said...

நாட்டில் கண்டிப்பதற்கு எவ்வளவோ விசயங்கள் உள்ளது....இதைப் படித்து சிரித்துவிட்டுப் போங்கள்.

முஹம்மது ஆரிப் said...

ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். பதிவர்கள் வந்த பின், பெரும்பாலான பேர்கள் இங்கே வந்து படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அவங்களுக்கு circulation குறைந்து விட்ட அந்த பயம் தான் காரணம் என்கிறேன் நான்.

நண்பர் Thekkikattan|தெகா சொல்வது நூறு சதவீதம் சரி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ILA(@)இளா
Prasanna rajan
டக்கால்டி
Goma
Prabhakaran

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நித்திலம்-சிப்பிக்குள் முத்து
எல் கே
விக்கி உலகம்
தமிழ் உதயம்

Anisha Yunus said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

இப்பதான் புகைய ஆரம்பிச்சிருக்கு பொறாமை,கடுப்பு எல்லாம்
//

Repeatttt!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிஜீ...... said...
விகடனில் நிறைய பதிவர்கள் வேலை பார்க்கிறார்கள்...சும்மா கலாய்ச்சிருப்பாங்க.....ணாவா கூட இருக்கலாம்//

இருக்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நாஞ்சில் பிரதாப்™
Samudra
ஆனந்தி.
ஐத்ருஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சி.பி.செந்தில்குமார்
ரம்மி
.கண்ணன்
ஆர்.கே.சதீஷ்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சேட்டைக்காரன்
துளசி கோபால்
Shanthamoorthy
வல்லிசிம்ஹன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

சீனு
கொக்கரகோ...
ரிஷபன்Meena
Kaarthik
shameer

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
அமர பாரதி
Shrividya
ராஜ நடராஜன்
Thekkikattan|தெகா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
s
ராம்ஜி_யாஹூ
மணிஜீ......
Jegan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஜீவன்சிவம்
M.G.ரவிக்குமார்™...,
Prabhu Rajadurai
முஹம்மது ஆரிப்
அன்னு

கவிஞர் அஸ்மின் said...

எழுதுபவர்கள் எல்லாம் எல்லாம் எழுத்தாளர்கள் அல்லர். எழுத்தை ஆள்பவர்களும் எழுத்தால் ஆள்பவர்களுமே உண்மை எழுத்தாளர்கள்.வலைஞர்களுக்குள்ளும் வளமான எழுத்தாளர்கள் வலம் வருகின்றார்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கவிஞர் அஸ்மின்

Avargal Unmaigal said...

brother take it easy.....

அருவி said...

சரிதான்

அருவி said...

சரிதான்

அருவி said...

செல்வேந்திரன் விகடனில் எழுதியுள்ளது நூற்றுக்கு நூறு சரியான விடயம். பதிவர்களில் 99 சதமானம் மொக்கை பதிவர்களே! நமது குறைகளை முதலில் திருத்தி கொள்வோம்.