தலைவர் எந்தக் கடிதத்தையோ 100 பிரதி ஜெராக்ஸ் எடுக்கச் சொன்னாரே!
ஆமாம்..சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்படுவது குறித்து பிரதமருக்கு எழுதும் கடிதத்தைத்தான்
பிரதமர் என்ன செய்வார்
இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஜெராக்ஸ் எடுத்து வைத்துள்ள கடிதத்தில் ஒன்றை வெளியிடுவார்.
2)தலைவர் குடியரசு தின செய்தியை மறந்து போய் முடியரசு செய்தின்னு சொல்லிட்டாரே
மகனுக்கு முடி சூட்டும் எண்ணத்தில் இருப்பதால் ஏற்பட்ட சிறு குழப்பம்
3)தமிழுக்காக பிரதமரை சென்னையில் சந்திக்காத முதல்வர் டெல்லிப் போறாரே
சென்னையில் தமிழ் முக்கியம்..டெல்லியில் தொகுதி முக்கியம் ஆயிற்றே
4)திருமாவளவன் பற்றி என்ன நினைக்கிற..
அவரை புரிஞ்சுக்கவே முடியலே.. தி.மு.க., விற்கு கண்டனம் தெரிவிக்கிறார்..காங்கிரஸை திட்டறார்..ஆனால் அவங்க கூட்டணியிலே இருக்கார்..
அவர் தன் பெயரையும் இளங்கோவன்னு மாத்திக்கலாம்
5)பாகிஸ்தான் .சைனா வடக்கேயும்..அவர்கள் உதவியுடன் ஸ்ரீலங்கா தெற்கேயும் இந்தியாவை தாக்கினால் பிரதமர் என்ன முடிவெடுப்பார்
ஒபாமா என்ன சொல்றார்னு கேட்பார்
6)ஜெ 18 கட்சிக் கூட்டணி அமைக்கப் போகிறாராமே
அதுல ஒரு உறுப்பினர் பேட் கட்சி எவ்வளவாம்
7)கலைஞர் மறந்து போய் தங்க பாலு தி.மு.க., வில் இருப்பதாய் நினைத்து அவர் பெயரை மத்திய அமைச்சருக்கு சிபாரிசு செய்கிறாராமே
10 comments:
திருமாவளவன் பற்றி என்ன நினைக்கிற..
அவரை புரிஞ்சுக்கவே முடியலே.. தி.மு.க., விற்கு கண்டனம் தெரிவிக்கிறார்..காங்கிரஸை திட்டறார்..ஆனால் அவங்க கூட்டணியிலே இருக்கார்..
அவர் தன் பெயரையும் இளங்கோவன்னு மாத்திக்கலாம்///
ஹா ஹா ஹா .
வருகைக்கு நன்றி நா.மணிவண்ணன் s
வருகைக்கு நன்றி chitra
இந்த நேரத்தில சத்தமாச் சிரிக்கமுடில.ஆனா சிரிச்சேன் !
வருகைக்கு நன்றி ஹேமா
வரிக்கு வரி சிரிக்க வைத்தது... சிந்திக்கவும் வைத்தது... ஆனால் ஏதோவொரு அவசரகதியில் எழுதினது போல தெரிகிறதே.... உண்மையா சார்...
நன்றி பிரபா..
வேறு ஒரு முக்கிய வேலையில் ஈடுபட்டுள்ளேன்..ஆதலால்..இந்த இடுகையை அவசரத்தில் இட்டது உண்மைதான்.
வாழ்த்துகள் ஷெர்லக்ஹோம்ஸ் பிரபா
அனைத்தும் அருமை பாராட்டுக்கள்
நன்றி தங்கராசு நாகேந்திரன்
நன்றி மாதேவி
Post a Comment