Saturday, January 29, 2011

கண்ணீரில் குளிக்க வைத்தான்

உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..


உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..

ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..



தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை

தண்ணீரில் பிழைக்க வைத்தன்

கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை

கண்ணீரில் குளிக்க வைத்தான்



தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை

தண்ணீரில் பிழைக்க வைத்தன்

கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை

கண்ணீரில் குளிக்க வைத்தான்



கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை

உறவை கொடுத்தவர் அங்கே

அலை கடல் மேலே அலையாய் அலைந்து

உயிரைக் கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்

கடல் தான் எங்கள் வீடு

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்

கடல் தான் எங்கள் வீடு

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்

இதுதான் எங்கள் வாழ்க்கை

இதுதான் எங்கள் வாழ்க்கை



தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை

தண்ணீரில் பிழைக்க வைத்தன்

கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை

கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான்



கடல் நீர் நடுவே பயணம் போனால்

குடி நீர் தருபவர் யாரோ

தனியாய் வந்தால் துணிவைத் தவிர

துணையாய் வருபவர் யாரோ

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம்

ஊரார் நினைப்பது சுலபம்



தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை

தண்ணீரில் பிழைக்க வைத்தன்

கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை

கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான்

கண்ணீரில் குளிக்க வைத்தான்


- வாலி

டிஸ்கி-ஓட்டு கேட்டு வருவோர்க்கு வேட்டு வைப்போம்

5 comments:

ஹேமா said...

இன்றைய நிலைமையில் இந்தப்பாடலை நானும் அடிக்கடி நினைத்தேன்.வானொலியில்கூட அடிக்கடி ஒலிபரப்பாகிறது.ஏன் மீன்பிடிக்கும் தமிழனுக்கு மட்டும்தானே பொருந்துகிறது !

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு வரியும் இன்றளவும் தமிழக மீனவரின் துயராக.. :(!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

Reva said...

Sollamal sollum sogathai...
Reva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Revathi