Monday, January 31, 2011

கலைஞர் காமெடி பீசா..??!!





கலைஞரின் டில்லி விசிட்டுக்கு அரசு பல காரணங்களைச் சொன்னாலும்..உண்மையான காரணம் சோனியாவைச் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசுவதே முக்கிய காரணம் என அனைவரும் அறிவார்கள்.

என்ன..வழக்கம் போல..மீனவர்கள் பிரச்னை குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதிமொழி(!!) அளித்துள்ளார்..என்பது..கலைஞர் அந்த விஷயமாகவே டில்லி சென்றுள்ளார் என நம்ப வைப்பதற்காக..

இந்நிலையில் சோனியாவிடம் தொகுதி பங்கீடு பற்றி பேசும்போது..பா.ம.க., வும் கூட்டணியில் இருக்கிறது என்று கூறினால்..முன்னே..பின்னே ..காங்கிரஸ் கட்சிக்கு இடம் ஒதுக்கிடலாம்..என்று கலைஞர் நினைத்தே பா.ம.க., தங்கள் கூட்டணியில் உள்ளது என அறிவித்தார்.கலைஞரின் விருப்பமும் அதே..ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., விற்கு கிடைத்த 12 தொகுதிகள் வெற்றி..பா.ம.க., தங்களுடன் இருந்திருந்தால் கிடைத்திருக்காது என கலைஞர் அறிந்திருக்கக்கூடும்.ஆகவே தான் தானே முந்திக் கொண்டு...பா.ம.க., பற்றி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு..மருத்துவரை உச்சாணி கிளையில் அமர்த்திவிட்டது..கலைஞர் தம் கட்சியின் பலத்தை அறிந்து..தன்னை அவருடன் இணைத்துக் கொண்டுள்ளார் என நினைத்து விட்டார்..

இதுதான் தருணம் என எண்ணிய மருத்துவர்..'கலைஞர் சொன்னது அவர் விருப்பமாயிக்கலாம்..ஆனால் நாங்கள் இது பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லை.மேலும் இது சம்பந்தமாக வேறு சிலக் கட்சிகளும் எங்களை அணுகி உள்ளன..ஃபெப்ருவரி முதல் வாரத்தில் முடிவெடுப்போம்' என சற்று கித்தாப்புடன்,சற்று முறுக்குடன் பதிலளித்துள்ளார்.

நேற்றுவரை..தன்னை யாராவது சேர்த்துக் கொள்வார்களா..என்ற நிலையில் இருந்தவரை கலைஞரின் இந்த அவசர அறிவிப்பு..உள்ளூர மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்..தன்னாலும் கலைஞரை சஞ்சலத்தில் ஈடுபட வைக்க முடியும் என எண்ணி..மருத்துவர் கலைஞரை காமெடி பீஸ் ஆக்கிவிட்டாரோ!!

8 comments:

arasan said...

இவங்களுக்கு இதே வேலை தான் நண்பரே ...
என்ன ஒரு வில்லத்தனம் ,...
பதிவு அசத்தல்

தமிழ் உதயம் said...

இனறைய தேதில, அரசியல்வாதிகள் எல்லோருமே காமெடி பீஸ்தாங்க.

bsatheeshme said...

கலைஞர் இந்த நேரத்தல எதை சொல்லனும்னு அவருக்கு தெரியும்....2006 தேர்தல் நேரத்துல அவரோட தேர்தல் அறிக்கை காமிடி பீசா ... பாத்தது -அ.தி.மு.க.

MANO நாஞ்சில் மனோ said...

பதிவு அசத்தலா இருக்கு மக்கா.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அரசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ் குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano