கலைஞர் 2001 சட்டசபைத் தேர்தலின் போதே..இது தான் நான் நீற்கும் கடைசித் தேர்தல் என்று கூறினார்.பின் 2006லும் நின்று வெற்றி பெற்று முதல்வரானார்.
இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் பேசுகையில்..'என்னை முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும் போது தலைவர் என்ற சொல்லில் தான் தி.மு.க.,வினர் ஆர்வமாயிருப்பார்கள்.ஆதலால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன்' என்று கூறியுள்ளார்.இதன் மூலம் அவர் மீண்டும் முதல்வராக மாட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அவரை இந்த முடிவெடுக்கத் தூண்டிய காரணங்கள் எவை என்று பார்த்தால்..
1)அவரது உடல் நிலை..
2) அழகிரி மாநில அரசுக்கு வர விரும்புகிறார் அல்லது தி.மு.க., விற்கு செயலாளர் ஆக விரும்புகிறார்.
3)ஸ்டாலின் முதல்வர் ஆனால்..அழகிரி கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியைக் கேட்பார்.அச் சமயத்தில்..கழகத்தின் தலைவர் என்ற பதவியை கலைஞர் தக்க வைத்துக் கொண்டால்..கழகமும், ஆட்சியும் மறைமுகமாக அவரது கட்டுப்பாட்டில் இருக்கும்.அழகிரியும்..தலைவருக்குக் கட்டுப்பட்ட செயலாளராயிருப்பார், கட்சி இதனால் பிளவு படாது என கலைஞர் நினைக்கலாம்
4) முதல்வராக ஆக வேண்டாம் என்று நினைத்துவிட்டால்..தேர்தலில் நின்று ஒரு எம்.எல்.ஏ., வாக இருக்க கலைஞர் விரும்ப மாட்டார்.
4) இது நாள் வரை தான் தேர்தல்களில் தோற்றதே இல்லை என்னும் ரிகார்டை கலைஞர் தக்க வைத்துக் கொள்ள நினைக்கலாம்.
மேற்குறிப்பிட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களாலேயே..கலைஞர் அப்படி பேசி இருப்பார் என்று தோன்றுகிறது.
டிஸ்கி-அப்படி ஒரு நிலை வந்தால் அன்பழகன் துணைத் தலைவராயிருப்பாரோ!!
நிகழ்வு -செய்திகள்
18 comments:
கலைஞர் தான் திமுகவின் தலைவராக இருப்பதில் தான் தனக்கு பெருமை என்கிறார்.
இதில் எங்கே அழகிரி தலைவர் ஆகும் செய்தி பொதிந்து இருக்கிறது.
கலைஞர் சொல்ல வந்த விஷயம் வேறு.
மேலும் கலைஞர் எந்தத் தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க கூடிய அளவிலியே இருக்கிறார்.
பொதுச்செயலாளர் என்பதை தலைவர் என தட்டெச்சு செய்துவிட்டேன்..இப்போது திருத்தப்பட்டது..
எல்லாம் அரசியல் நாடகம்! :-(
choice romba athigam....
Reva
மூன்றாவது காரணம் பலே... அதுதான் உண்மை...
அப்படியெல்லாம் நம்மை அவ்வளவு சீக்கிரம் சந்தோஷ படுத்த மாட்டார். போகாமல் படுத்துவார்!
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Chitra
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி prabakar
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Revathi
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
Bandhu
திரைக்கதை வசனம் டைரக்ஷன்
கலைஞர் மு.கருணாநிதி
’ அரசியல் பல்டி’
விரைவில் எதிர்பாருங்கள்.
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி goma
அவரு சர்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி தானே இருக்கிறார், பிறகு எங்கே தேர்தலில் நிற்பது ?
:)
இவர் முதல்வராக இருப்பாரா?
தலைவராக இருப்பாரா? என்பது தற்போது பிரச்சனையே அல்ல. தமிழினத்திற்கு தீங்கு விளைவிக்கும் “கருணாநிதி“ என்ற “நச்சு“ எந்த குப்பியில் இருந்தால் என்ன?
என்னது பாசத்தைலைவர் தேர்தலில் நிற்க மாட்டாரா ?
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி கோவி.கண்ணன்
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி seeprabagaran
//நா.மணிவண்ணன் said...
என்னது பாசத்தைலைவர் தேர்தலில் நிற்க மாட்டாரா ?..
:))))
Post a Comment