Friday, March 11, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (11-3-11)





இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது..பிரணாப் முகர்ஜி, 'மழைக்கு இந்திரனையும்,செல்வத்திற்கு லட்சுமியையும் பிரார்த்திப்பதாக'க் கூறினார்.இதற்கு டிவிட்டரில் பதில் வந்து விட்டதாம்..இவற்றையெல்லாம் அழிக்கும் கடவுள் சிவன்..பிரணாப் என.



2)நாள் முழுதும் கூடுமானவரை ஆனந்தமாக சிரியுங்கள்.இதன் மூலம் மன அழுத்தம், கவலையை போக்கலாம்.மனம்விட்டு சிரிப்பதால் முகத்திலுள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி கிட்டி, முக அழகுக் கூடுகிறது



3)மனித உடலில் மிகவும் குளிர்ச்சியான பாகம் மூக்கின் நுனியாகும்



4)துருவப் பிரதேசங்களான ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றனவாம்.அடுத்த நூறு ஆண்டுகளில் சென்னை நகரமே கடலில் மூழ்கிடும் என்கிறார் 'பனிமனிதர்' என அழைக்கப் படும் துருவப்பகுதி ஆராய்ஸ்சியாளர் ராபெர்ட் ஸ்வான்



5)தமிழக அரசின் சின்னமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் 196 அடி உயரமாம். 11நிலைகளுடன்..11 கலசங்களுடன் அமைந்துள்ளது.பொதுவாக கோபுரங்களில் சாமிகளின் உருவம்தான் இருக்கும்..ஆனால் இந்தக் கோபுரத்தில் அப்படி ஏதும் கிடையாது.தமிழர்களின் சிறந்த கட்டிடக் கலைக்கு இது எடுத்துக் காட்டாகும்



6)அரசியல் அதிகாரத்திற்காக எதையும் செய்கிற அளவிற்கு துணிந்து விட்டார்கள்.அதற்காகத் தேர்தல் விதிகளை மீறி பணத்தை இறைக்கிறார்கள்.வாக்காளர்கள் இதற்கு ஒரு போதும் மயங்கக் கூடாது.பணத்திற்கும், பிரியாணி பொட்டலத்திற்கும்,மது விற்கும் வாக்குகளை அடகு வைக்கும் நிலைக் கூடாது..'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்கள் புரிய வைக்க வேண்டும் என்கிறார்..தமிழக தேர்தல் அதிகாரியாய் இருந்த நரேஷ் குப்தா.



7) கடந்த நிதி ஆண்டில் நாட்டில் தகவல் நுட்பம் மற்றும் பி.பீ.ஓ., துறை 19 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

8)ஜப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் அந்நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை முற்றிலுமாக புரட்டிப்போட்டுள்ளது
 

16 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பதிவு...

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

vasu balaji said...

/என் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்கள் புரிய வைக்க வேண்டும் என்கிறார்../

அவங்கதான் நம்மள நல்லாவே புரிஞ்சி வச்சிருக்காங்களே:))

Chitra said...

'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்கள் புரிய வைக்க வேண்டும் என்கிறார்..தமிழக தேர்தல் அதிகாரியாய் இருந்த நரேஷ் குப்தா.


..golden words.

சக்தி கல்வி மையம் said...

இன்று ஜப்பானில் தாக்கிய சுனாமியில் உயிரிழந்த சகோதர, ‌ சகோதரிகளுக்கு வேடந்தாங்கலின் ஆழ்ந்த அனுதாபங்கள்..

ஹேமா said...

யப்பான் சுனாமி மனிதனின் அறிவீனம்.ஏனோ என் மனம் மரத்துக்கிடக்கிறது மரணங்கள் கண்டு.ஒருவேளை ஈழம் இரத்த சரித்திரம் எழுதியதாலோ !

மூக்கின் நுனி குளிர்வதால்தான் நுழையக்கூடாது என்பார்களோ !

Anonymous said...

இன்னுமா இந்திரனை நம்புகிறார்கள். அக்னியை நம்பி ஏவிய விண்கலன் எல்லாம் அக்னிக்கே இரையாகிய பின்னுமா.. கொடுமை கொடுமை .........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பொதுவாக கோபுரங்களில் சாமிகளின் உருவம்தான் இருக்கும்..ஆனால் இந்தக் கோபுரத்தில் அப்படி ஏதும் கிடையாது.தமிழர்களின் சிறந்த கட்டிடக் கலைக்கு இது எடுத்துக் காட்டாகும்//

புதிய தகவல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prakash

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கருன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
இக்பால் செல்வன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வீராங்கன்

மாதேவி said...

நல்ல தகவல்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாதேவி