Friday, March 4, 2011

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (4-3-11)

1)விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்ளிட்ட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளது. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது



2)இந்த வாக்கியத்தைப் பாருங்கள்..இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இந்த வாக்கியத்தை பின்னிருந்து படித்தாலும் அதேதான்.பாலிண்ட்ரோம் வாக்கியம் இது

Was it a car or a cat i saw



3)தற்போது உலகளவில் 1கோடியே 80 லட்சம் பேர் டிமென்ஷியா என்னும் மூளைக்கோளாறு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனராம்.விடமின் பி12 குறைவே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.



4)உலகின் பரப்பளவில் 2.4 விழுக்காடு பரப்பளவே இந்தியாவின் பரப்பு.ஆனால் மக்கள் தொகையில் 17 விழுக்காடை ஆக்கிரமித்துள்ளோம்.



5)இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகள் 6661 ஆகும்.

6)நமது நாணயங்கள் டெல்லி,மும்பை,ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் உள்ள நாணயசாலைகளில் அச்சடிக்கப்படுகின்றன.நம்மால் நாணயங்களைப் பார்த்து அவை எங்கு அச்சடிக்கப்பட்டன என சொல்ல முடியுமா?
முடியும்..எப்படி என்கிறீர்களா..
ஒவ்வொரு நாணய சாலைக்கும் ஒரு சின்னம் உண்டு.அதை வைத்து கண்டுபிடிக்கலாம்
டெல்லியில் அச்சடிக்கப் பட்டிருந்தால்..அந்த நாணயம் உருவாக்கப் பட்ட ஆண்டிற்குக் கீழே . (புள்ளி) இருக்கும்.
மும்பை எனில் பக்கவாட்டில் சதுரம் இருக்கும்
ஹைதராபாத் எனில் * (ஸ்டார்) இருக்கும்
கொல்கத்தா எனில் எந்தச் சின்னமும் இருக்காது

18 comments:

சக்தி கல்வி மையம் said...

இந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு அருமை..

ஈரோடு கதிர் said...

6661 மொழிகளா!!!??

Chitra said...

உலகின் பரப்பளவில் 2.4 விழுக்காடு பரப்பளவே இந்தியாவின் பரப்பு.ஆனால் மக்கள் தொகையில் 17 விழுக்காடை ஆக்கிரமித்துள்ளோம்.

... :-(



5)இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகள் 6661 ஆகும். ....WOW!!!

ராமலக்ஷ்மி said...

மொழிகள்.. ஆச்சரியம். நாணயம்.. கவனித்துப் பார்க்கிறேன். நல்ல தகவல்கள்.

vasu balaji said...

இன்னைக்கு சுண்டல் டாப்பு.

Anonymous said...

சுண்டல் கம்மியா இருக்கே

Anonymous said...

இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகள் 6661 ஆகும். //
அடேயப்பா

ஹேமா said...

அப்பாடி..இத்தனை மொழிகளா...அதுவும் இந்தியாவிலேயே !

Bruno said...

Was it a car or a cat i saw

விகடகவி
malayalam
sexes

palindrome !!

Bruno said...

Was it a car or a cat i saw

விகடகவி
malayalam
sexes

palindrome !!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Bruno said...
Was it a car or a cat i saw

விகடகவி
malayalam
sexes

palindrome !!//

பாலின்ரோம் சொற்கள் நிறைய இருக்கிறது.
நான் சொல்லியுள்ளது வாக்கியம் புருனோ சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கருன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஈரோடு கதிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா