Thursday, March 17, 2011

கலைஞருடன் ஒரு கற்பனைப் பேட்டி..





கேள்வி- தி.மு.க., 119 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்

பதில்-234 க்குள் 119 இருப்பதால்

கேள்வி-திருவாரூரில் நீங்கள் போட்டியிடக் காரணம்

பதில்-திருவாரூர் என ஒரு தொகுதி இருப்பதால்

கேள்வி-காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அது வெற்றி பெறுமா?

பதில்-இதற்கான பதில் சத்திய மூர்த்திபவனில் கிடைக்கும்

கேள்வி-இந்த நேரத்தில் சாதிக் தற்கொலை செய்துக் கொண்டது பற்றி..இது கொலையா..தற்கொலையா

பதில்-தற்கொலைக்குள்ளேயே கொலை இருப்பது தெரியவில்லையா

கேள்வி-பத்திரிகைகள் ஒத்துழைப்பைக் கேட்டுள்ளீர்களே..ஏன்?

பதில்-பக்கம் பக்கமாய் வசனம் எழுதும் என்னை..அடுக்கடுக்காய் வசனம் பேசும் என்னை..ஓருரு வார்த்தைகளில் பதில் பேசவைப்பதால்

கேள்வி-அ,தி.மு.க., கூட்டணி தகராறு பற்றி

பதில்-இதற்கு நான் மகிழ்ச்சியாய் உள்ளது என பதிலை எதிர்பார்ப்பீர்களானால்..நீங்கள் ஏமாறுவீர்கள் என நான் சொல்வேன் என எதிர்பார்க்கிறீர்களா

கேள்வி-தனித்து மெஜாரிட்டி பெற்று தி.மு.க., ஆட்சி அமைக்குமா

பதில்-அத்தைக்கு மீசை முளைக்கட்டும்..பின்னர் அத்தையா..சித்தப்பாவா என புரியும்

கேள்வி-வைகோ திரும்ப உங்களிடம் வருவாரா?

பதில்-என் படங்களுக்கு ஹவுஸ்ஃபுல் போர்ட் போட முடியாவிடினும்...தொகுதி பங்கீடு முடிந்து ஹவுஸ்ஃபுல் போடப்பட்டு விட்டது

கேள்வி-இந்த முறை தேர்தல் அறிக்கையில் இலவசமாக என்ன அறிவிக்கப் போகிறீர்கள்

பதில்-மைய அரசில் மந்திரிகள் மாற்றத்தை வைத்து அதற்கேற்றார் போல் இலவசங்கள் அறிவிக்கப் படும்..

கேள்வி-வீராசாமி,மணி ஆகியோர்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே

பதில்-அன்பழகன் மற்றும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டி இருப்பதால்

கேள்வி-நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எங்கு பதவி ஏற்பீர்கள்

பதில்-சீவக சிந்தாமணி பூங்கா தயாராகிவருகிறது.

கேள்வி-மகாபலிபுரம் போய் வேட்பாளர் பட்டியலை தேர்ந்தெடுக்கக் காரணம்

பதில்-மாமல்லன் தான்

15 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா செம காமெடி

Unknown said...

அப்படிப்போடு அருவாள!

Nagasubramanian said...

//அன்பழகன் மற்றும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டி இருப்பதால்//
நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா ...

Pranavam Ravikumar said...

நல்லா எழுதி இருக்கீங்க!

காந்தி பனங்கூர் said...

நல்ல கற்பனை.......

காந்தி பனங்கூர் said...
This comment has been removed by the author.
vasu balaji said...

கடோசி கேள்விக்கு பதிலுக்கு கொமெண்டு:
அதாங்கைய்யா லூசுத்தனமா கீது:))

ஹேமா said...

எப்பிடியாச்சும் இந்தப் பதிவை அவரைப் பாக்க வையுங்க !

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதல் வருகைக்கு நன்றி செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
விக்கி உலகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Nagasubramanian

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kochuravi

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
காந்தி பனங்கூர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா