Thursday, March 24, 2011

வாய் விட்டு சிரிங்க...(தேர்தல் ஜோக்ஸ்)







அந்தக் கூட்டத்தில கடைசில நிக்கறாங்களே..அந்த இரண்டு பேரை கூட்டிட்டு வாங்க

ஏன் தலைவா..

அவங்க ஒரு படத்தில தலை காட்டியிருக்காங்க...நமக்கு ஆதரவா பொதுக் கூட்டத்தில பேசட்டும்



2)நடிகை புஷ்பாவிற்கு இந்த தேர்தல்ல தலைவர் ஏன் சீட் கொடுக்கல

அரசியல்ல இன்னும் முழுக்க மலரலயாம்



3)(தேர்தலில் வாக்களிக்க ஆயிரம் ரூபாய் கொடுக்கும் வேட்பாளரிடம் ஒரு வாக்காளர்..)

என்னங்க..இவ்வளவு குறைவா கொடுக்கறீங்க..ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில ஒரு வாக்காளருக்கு 42500 கொடுக்கலாம்னு கணக்கு சொல்லியிருந்தாங்களே!



4) தலைவர்ங்க எல்லாம் சென்னையைவிட்டு ஏன் வெளியூர் தொகுதிகள்ல போட்டி போடறாங்க..

வெளியூர்லதான் இன்னும் வளைச்சுப்போட நிலங்கள் இருக்காம்



5)தலைவர் தான் ஒரு பத்திரிகை ஆசிரியராய் இருந்ததை நிரூபிச்சுட்டார்

எப்படி

தேர்தல் அறிக்கையில கடைசி பக்கத்திலே..'இதில் காணப்பட்டவையெல்லாம் கற்பனையே..கற்பனையன்றி அவற்றில் உண்மை இல்லைன்னு எழுதிட்டாரே



6) ஆளும்கட்சி தேர்தல் அறிக்கையில அனைத்து தமிழருக்கும் ரேஷன்ல அரிசி இலவசம்னு சொன்னதாலே..எதிர்க்கட்சி தேர்தல் அறிக்கையில என்ன சொல்லியிருக்காங்க..தெரியுமா?

என்ன சொல்லியிருக்காங்க

சிங்கப்பூர்,அமெரிக்கா ன்னு வெளிநாட்டில இருக்கற தமிழர்களுக்கும் அரிசி இலவசம்ன்னு சொல்லியிருக்காங்க



7)குடிமகன்- எந்தக் கட்சித் தேர்தல் அறிக்கையிலும் நம்மைக் கண்டுக்க மாட்டேன்னு சொல்றாங்களே..யாராவது நமக்கு இவ்வளவு லிட்டர் சரக்கு இலவசம்னு சொல்லலாமே



8)பேருந்துல நடத்துநர் ஏன் அந்தப் பெரியவரைத் திட்டறார்..

இலவச பாஸ்ல வரார் இல்லையா? அதனால அந்த வெறுப்பை நடத்துநர் காட்டறார்

9அந்த  நகைச்சுவை நடிகர்  கட்சியில  சேர்வதற்கு  நிபந்தனை விதிச்சாராமே
 ..என்னன்னு
தன்னை பிரதமராக ஆக்கணும்னு

10)எல்லா தலைவர்களும்..எல்லாவற்றையும் இலவசமாய் கொடுப்பதாய் அறிவிச்சுட்டாங்கங்கறதால தலைவர் இப்படி ஒரு இலவசத்தை அறிவிச்சிருக்க வேண்டாம்


என்ன சொல்லியிருக்கார்

குழந்தைகள் இல்லாத குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் இலவசம்னு சொல்லியிருக்கார்

20 comments:

Chitra said...

குழந்தைகள் இல்லாத குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் இலவசம்னு சொல்லியிருக்கார்


......இது நல்ல ஐடியாவாக இருக்கே!

Pranavam Ravikumar said...

:-) Nice.

vasu balaji said...

தேர்தல்னு சொன்னாலே போதாதா. ஜோக்ஸ்னு வேற மூணெழுத்து வேஸ்ட் பண்ணிட்டீங்க சார்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்கல் நகைச்சுவைகள் தல..

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா...ஹா....ஹா... தேர்தல் வந்தாலும் வந்துச்சு... எப்படியெல்லாம் காமடி பன்றாங்கயா?

எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

Anonymous said...

எல்லாமே கலக்கல் ஜோக்ஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kochuravi

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சௌந்தர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prakash

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

ஹேமா said...

ஐயா....தேர்தல் வந்தாலும் வந்திச்சு.வரவர கிண்டல் கூடிப்போச்சு உங்களுக்கு.யாராச்சும் பாத்து சம்பத்தப்பட்டவங்ககிட்ட சொல்லப்போறாங்க !

Jayadev Das said...

\\என்னங்க..இவ்வளவு குறைவா கொடுக்கறீங்க..ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில ஒரு வாக்காளருக்கு 42500 கொடுக்கலாம்னு கணக்கு சொல்லியிருந்தாங்களே! \\ ஊழல் பணத்தில 20% கமிஷன் தாங்க எங்க கைக்கு வந்தது, அதையே நாலஞ்சு திருடனுக்குள்ள பங்கிடும் பொது இன்னும் கம்மியாயிடுச்சு, அதாங்க இவ்வளவு குறைவா குடுக்கிறோம்.

Jayadev Das said...

\\ இலவச பாஸ்ல வரார் இல்லையா? அதனால அந்த வெறுப்பை நடத்துநர் காட்டறார்.\\ இது தமாசு அல்ல, ணப்படி இலவச பாஸ் குடுத்தா நடக்கப் போகும் நிஜம். ஏற்கனவே பள்ளிக் குழந்தைகளை இந்த கண்டக்டர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள், முதியவர்களை என்ன பாடுபடுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

Jayadev Das said...

\\நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்.\\ என்னாலும் முடியும் என்பது தன்னபிக்கை, என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம். [பாத்துக்கோங்க, அப்புறம் உங்க இஷ்டம்..!!]

Kanchana Radhakrishnan said...

//என்னால் மட்டுமே முடியும் //

நம்மால் முடியும்
நம்மால்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி jeyadev das