Thursday, March 31, 2011

வடிவேலு அமைச்சராகிறார்..





கடந்த சிலநாட்களாக தமிழக தேர்தல் களத்தில்..பல அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள், பேச்சாளர்கள் பேசினாலும்...முதன்முறையாக தேர்தல் மேடைகளில் பேச ஆரம்பித்துள்ள வைகைப்புயல் வடிவேலுவின் பேச்சைக் கேட்க கூடும் மக்களைக் கண்டு..கோபாலபுரமும், போயஸ் கார்டனும் வியப்பில் வாயைப் பிளக்கின்றனராம்.

தி.மு.க., தலைமையும்..தங்கள் கட்சிக்கு ஒரு தங்கச் சுரங்கம் கிடைத்துவிட்டாற்போல மகிழ்கிறார்களாம்.

தி.மு.க., ஆட்சி அமைத்தால்..வடிவேலு மேலவை உறுப்பினர் ஆகலாம் எனத் தெரிகிறது.

தவிர்த்து..அவர் ஆதரவை விடாமல் பற்றிக் கொள்ள நினைக்கும் தி.மு.க., அவரை சினிமாத் துறை அமைச்சராக ஆக்கவும் முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியைக் கேள்விப்பட்ட விஜய்காந்த் வயிற்றெரிச்சலில்..தன் தேர்தல் பணியை நிறுத்தி வைத்துள்ளாராம்.



டிஸ்கி- ஹி..ஹி..இன்று தேதி ஏப்ரல் ஒன்னு  ..

11 comments:

பாட்டு ரசிகன் said...

எப்படியெல்லாம் இறங்கிட்டிங்க..

சி.பி.செந்தில்குமார் said...

நீங்களுமா? ஸ்.. அப்பா .. முடில..

Unknown said...

ஹி..ஹி..இன்று தேதி ஏப்ரல் ஒன்னு ..

பொ.முருகன் said...

இன்னைக்கு பதிவு போடுற அத்தனைப் பேரையும்,விஜயகாந்த்க்கிட்ட கொண்டுப்போங்கப்பா அவரு ரெண்டு தட்டு,தட்டுனா தான் சரிப்பட்டுவரும்.ஏப்ரல் ஒன்னு லொள்ளு தாங்கமுடியல.

Yoga.s.FR said...

முக்கிய செய்தி;இலங்கை அணியில் முரளி நீடிப்பார்!

Pranavam Ravikumar said...

ஐயோ ஐயோ !

MANO நாஞ்சில் மனோ said...

ஹய்யோ ஹய்யோ ஆண்டவா....

goma said...

இது மட்டும் உண்மையானால் ஆண்டு முழுவதும் முட்டாள் தினம்தான்

vasu balaji said...

ஒரு வேளை இப்படி நடந்துட்டா பதவி ஏற்புக்கு “அவனவன் எடுக்குற முடிவு உனக்கு சாதகமாத்தாண்டா இருக்கு வடிவேலு’ன்னு சொல்லிட்டு போவாரு:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாட்டு ரசிகன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி