Monday, December 5, 2011

ஐஸ்வர்யா குழந்தையின் பெயர் என்ன..? (வாய் விட்டு சிரிங்க)





தலைவர் வரிகளை உயர்த்துவது தெரியாமல் உயர்த்தறாரே..எப்படி..
அரசியல்ல வர்றதுக்கு முன்னாலே..எடுப்பது தெரியாமல் பஸ்ல பிக்பாக்கெட் செய்யற தொழில் செய்தவராச்சே!

2)பஸ்ஸை இழுத்து மூடப் போறாங்களாமே..
 ஆமாம்..கட்டண உயர்வு அதிகமாயிடுச்சாம்..அதனால..தான்னு கூகிள் சொல்லுது

3)தலைவர் கோர்ட்ல இருந்து வந்ததும் வருத்தத்தோடு பாஸ்..பாஸ் னு சொல்றார்
 பெயில் கிடைக்கலையாம்..பெயிலுக்கு எதிர்ப்பதம் பாஸ் னு நினைச்சு சொல்றார்

4)உன் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போற..
 அதுவா இப்ப முக்கியம்..அதுக்கு முன்னாலே ஐஸ்வர்யா பச்சன் குழந்தைக்கு 'அ' வில ஆரம்பிக்கற பெயரைத் தேடிக்கிட்டு இருக்கேண்

5)காலம் எப்படி மாறிப்போச்சு பத்தியா..
என்ன சொல்ற
செய்யற ஊழலைக் கூட மரியாதையா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..2 ஜி..3 ஜி ன்னு

6)தலைவர் ஏன் ரொம்பக் கோபமா இருக்கார்..
 யாரோ அவரை 'ராஜா' ப்போல வாழணும்னு வாழ்த்திட்டுப் போனாராம்

7)அதிகாரி- ஆஃபீஸிற்கு ஏன் மினி ஸ்கர்ட்டோட வர
  ஸ்டெனோ- இன்னிக்கு சனிக்கிழமை அரை நாளாச்சேன்னு தான்
 அதிகாரி- அப்போ..நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை..விடுமுறை..உன்னை வீட்டில வந்து பார்க்கிறேன்

8)அவர் ஒரு போலி டாக்டர்ன்னு எப்படி சொல்ற
 ஜலதோஷம்னு போனேன் உனக்கு எட்டாம் இடத்தில தோஷம்னு சொல்றார்.

9)என் பொண்ணு எதுக்கெடுத்தாலும் வெட்கப்படுவா
 அதனாலதான் shyலஜான்னு பெயர் வச்சியா

10)உங்கப் படத்தைப் பத்தி  இணையத்திலே நல்லா அடிச்சு துவைச்சுட்டாங்க
  அதனாலதான் படத்தில கலர் அங்கங்க திட்டுத் திட்டா தெரியுதா?

8 comments:

goma said...

காலையில் கணினி திறந்ததும் ஹா ஹா என்று அன்றைய சிரப் ஒரு டோஸ் தந்து விட்டீர்கள் நன்றி

Jayadev Das said...

\\செய்யற ஊழலைக் கூட மரியாதையா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..2 ஜி..3 ஜி ன்னு\\ ஹா.. ஹா.. ஹா..

Jayadev Das said...

\\6)தலைவர் ஏன் ரொம்பக் கோபமா இருக்கார்..
யாரோ அவரை 'ராஜா' ப்போல வாழணும்னு வாழ்த்திட்டுப் போனாராம்.\\ "ராசா" போல வாழணும்னுசொன்னாத்தானே கோபம் வரணும்!!!

Jayadev Das said...

\\8)அவர் ஒரு போலி டாக்டர்ன்னு எப்படி சொல்ற
ஜலதோஷம்னு போனேன் உனக்கு எட்டாம் இடத்தில தோஷம்னு சொல்றார்.\\ முன்பெல்லாம் வைத்தியம் தெரிந்தவர்களுக்கு ஜோதிடமும் தெரிந்திருக்குமாம், அந்த மாதிரி வைத்தியர் கிட்ட போயிருப்பாரு.. ஹா..ஹா..ஹா..ஹா..

aazhimazhai said...

நல்ல சிரிச்சேன் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Jayadev Das

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி aazhimazhai