Monday, December 12, 2011

பாக்கியராஜ் பதில்...




பாக்யா பத்திரிகையில் பாக்கியராஜ் .வாசகர்களுக்கு அளிக்கும் கேள்வி-பதில் பகுதி எனக்குப் பிடித்த ஒன்று.அவ்வப்போது அப்படி பிடித்த பதிலை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்த வாரம் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்கான கதை நமக்குத் தெரிந்தாலும்..அதைச் சொன்ன விதம் எனக்குப் பிடித்தது.

இதோ அந்த கேள்வி, பதில்..

கேள்வி- உங்கள் மனதில் பதிந்த ஏதாவது வித்தியாசமான கேரக்டர் பற்றி?

பதில்- ஒரு முனியனைப் பற்றி சொல்றேன்..உங்க மனசிலேயும் அவர் ஆழமா பதிஞ்சுடுவார் பாருங்க..நெட்ல படிச்சது.

       என்ன முனியா நான் ஊர்ல இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?

       பெரிசா ஒன்னுமில்லீங்க..நம்ம நாய் செத்துப் போச்சு

      அடக்கடவுளே! த்சோ..த்சோ..நல்லாத்தானேடா இருந்தது..எப்படி திடீர்னு செத்துச்சு?

     கெட்டுப்போன மாட்டுக் கறியை தின்னுடுச்சுங்க

      மாட்டுக்கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு

     நம்ம வீட்லதாங்க

     நாம தான் மாட்டுக்கறி திங்கறதில்லையேடா

     நாம திங்கறதில்லைங்க..நெருப்புல அவிஞ்சு போன மாடு மூணு நாளா கிடந்து கெட்டுப் போச்சுங்க.அதத்தான் நாய் தின்னிடிச்சு

     நம்ம மாடா

     ஆமாங்க..

     ஐயய்யோ...எப்படிடா எரிஞ்சு போச்சு

     வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயிலே விழிந்திடுச்சி

      வீடு எப்படிடா எரிஞ்சிச்சு

     குத்துவிளக்கு விழுந்து தீ பரவிடுச்சுங்க

     குத்துவிளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா

     அதுக்காக செத்தவங்க தலை மாட்டில விளக்கு வைக்காம இருக்க முடியுமா

     யார்ரா செத்தது

    உங்க அம்மா

    எப்படி செத்தாங்க

    தூக்கு போட்டுகிட்டு

   ஏன்

   அவமானத்தில்தான்

   என்னடா அவமானம்

   வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா

   ஓடிப்போனது யாரு

   உங்க பொண்டாட்டிதான்...


டிஸ்கி- லாஜிக் ஏதுவும் பார்க்காமல் நகைச்சுவையை மட்டும் ரசியுங்கள்

 

5 comments:

Unknown said...

பாகியராஜ் பதில்கள் எப்பொதும் சுவராஸ்யம்தான். நானும் ரசித்தேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

பகிர்வு அருமை.

ஹேமா said...

அதிர்ச்சியை அதிர்ச்சியில்லாமல் சொல்லுவதும் ஒரு வைத்தியம்தான்.!

இராஜராஜேஸ்வரி said...

அதிர்ச்சியை அதிச்சியில்லாமல்
அருமையாய் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Karthikeyan Rajendran said...

rasiththeen