கலைஞரின் பேச்சு...
முல்லை பெரியாறு பலவீனமாக இருக்கிறது என வதந்திகள் பரப்பப்பட்ட காரணத்தால், 1981 முதல் 94 வரை அணையை 3 முறை பலப்படுத்தியிருக்கிறோம்.
24 அடி அகலம் 3 அடி உயரத்தில் 1200 அடி நீளத்திற்கு 12,000 டன் கான்க்ரீட் போடப்பட்டு, அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. அணையின் பின்புறத்தில் தாங்கு அணையாக 135 அடி உயரத்தில் 1700 அடி நீளத்தில் 33 அடி அகலத்தில் கான்க்ரீட் போடப்பட்டுள்ளது.
பூகம்ப பயத்தை போக்கும் வகையில் அணையின் 1500 அடி நீளத்தில், 9 அடி இடைவெளி விட்டு 4 அங்குல விட்டத்தில் 95 துளைகள் இடப்பட்டு அதிலிருந்து கம்பிகளை எடுத்து கீழ் மட்டத்திலே 30 அடி கீழே உள்ள பாறைகளில் சொருகி, அதை கான்க்ரீட் கலவை கொண்டு உறுதிப்படுத்தி 20 டன் எடையைத் தாண்டும் அளவுக்கு இறுக்கி முடுக்கி விடப்பட்டுள்ளது. நிலநடுக்கமே ஏற்பட்டாலும் அணைக்கு எந்தப் பாதிப்பும் வராது. அணை முன்பை 3 மடங்கு பலமாக இருக்கிறது.
எனவே அணை பலவீனமாக உள்ளது என்பது பொய்யான வாதம், கேரளாவின் சூழ்ச்சி. இதை யாரும் ஏற்க வேண்டியதில்லை என்பதை செயல் மூலமாக திட்டவட்டமாக தெளிவாக்கியிருக்கிறோம்.
முல்லைப் பெரியாறு வழக்கில் அணை உறுதியாக இருக்கிறதா என்பதை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றமே 2001ல் பிப்ரவரி 10ம் தேதி 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அதில், மிட்டல் தலைவராகவும், மத்திய தலைமைப் பொறியாளர் 2 பேர், மத்தியப் பிரதேச மாநில அணைப் பாதுகாப்புக் குழுத் தலைவர் , உ.பி. தலைமைப் பொறியாளர், தமிழக அரசின் சார்பில் ஒரு பிரதிநிதி, கேரள சார்பின் ஒரு பிரதிநிதி என 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு ஏறத்தாழ 1 ஆண்டு காலம் முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. அதில், அணை உறுதியாக இருக்கிறது, அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்தது.
அதன் பிறகு 2002ல் முல்லைப் பெரியாறு அணை குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு உறுதி தொடர்பாக 7 பேர் கொண்ட நிபுணர் குழுவின் முடிவுகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு உறுதி செய்கிறது என்று அதில் மத்திய அரசு தெரிவித்தது.
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதமன்றம், 2006 அன்று தீர்பபின் விவரங்களைத் தெரிந்து கொண்டால், கேரளத்து அரசு சார்பாக வெளியிடப்படும் தகவல்கள், எவ்வளவு மோசமானவை, நம்பகத்தன்மை அற்றவை என்பதை புரி்து கொள்ளலாம்.
அணை பலமிழந்து விட்டது என்ற கேரளாவின் கூற்றில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. வல்லுநர் குழு பரிந்துரைத்தபடி 142 அடி வரையில் நீரைத் தேக்கி வைக்கலாம். மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை மத்திய நீர்க் குழுவுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தமிழகம் மேற்கொண்ட பின்னர் உச்சமட்ட அளவான 152 அடி வரை தமிழ்நாடு நீரைத் தேக்கிக் கொள்ளலாம்.
கேரள அரசு மற்றும் அதன் அதிகாரிகள் தமிழ்நாடு அரசு சார்பில் பணிகளை செய்வதை தடுத்து நிறுத்தும் போக்கினைக் கைவிட வேண்டும். தமிழக அரசின் பணிகளை தடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பினை அப்போதே மதிக்காமல் கேரள அரசு அடுத்த 16வது நாளில் நீர்ப்பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு முதல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியாக வைத்துக் கொள்வோம என்று சட்டமே செய்தது.
இப்போது சட்டசபையைக் கூட்டி 120 அடியாக வைத்துக் கொள்வோம் என்று தீர்மானம் போடுகிறது. அது என்ன சட்டமன்றமா, இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடிய பஞ்சாயத்தை விட மோசமான ஒரு அமைப்பா?.
இந்தியாவிலேயே கேரளாக்காரர்கள் மிகுந்த அறிவாளிகள், திறமையானவர்கள், புத்திசாலிகள் என்றெல்லாம் பேசப்படுவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்றால், அது யாரை ஏமாற்ற, இந்த நாடகம் நடத்துகிறார்கள் என்பதை தமிழ் மக்கள், மன்னிக்க வேண்டும், இந்திய திருநாட்டு மக்கள், தேசிய உணர்வு படைத்த மக்கள், இந்தியா ஒன்று என்று எண்ணுகின்ற மக்கள் அனைவரும் இதைக் கவனித்துப் பார்க்க வேண்டும.
வேண்டும் என்றே திட்டமிட்டு, தமிழகத்தினுடைய செழிப்பை, செல்வாக்கை, வளத்தை வீணாக்கி அழித்து, தமிழகத்தை சஹாரா பாலைவனமாக்க திட்டமிட்டு கேரளத்திலிருந்து ஒரு சதி ஜோடிக்கப்படுமேயானால் அதை தமிழன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தான் அழிவதற்கு தன்னுடைய சந்ததிகள் அழிவதற்கு தன்னுடைய மக்கள் அழிவதற்கு தன்னுடைய நாடு அழிவதற்கு தன்னுடைய எதிர்காலமே அழிவதற்கு எந்த முட்டாள் தமிழனும் ஒத்துக் கொள்ள மாட்டான்.
எனவே நாம் நடத்துகின்ற அறப்போர், தமிழ்நாட்டில் கேரள மக்கள் இன்றைக்கு சுதந்திரத்தோடு உலாவுகிறார்கள். தொடர்ந்து சுதந்திரத்தோடு இருப்பார்கள் என்பதில் நமக்கு ஆடேசபனை கிடையாது. தமிழன் கேரளத்திலே வாழ வேண்டும். அந்த ஒற்றுமையும், உணர்வும், வளர வேண்டுமென்றால், தழைக்க வேண்டுமேயானால், இடைத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, நாங்கள் இடக்கு செய்வோம் என்றில்லாமல், ஒரு இடைத் தேர்தலுக்காக எவ்வளவு பேர் அடிபடுவது, கொல்லப்படுவது, உடமைகளை இழப்பது, உயிர்களைப் பலி கொடுப்பது என்ற நிலை எல்லாம் ஏற்படாமல், எங்களோடு ஒத்துழைத்து கேரளத்தில் உள்ள பெரியவர்கள், அறிவாளிகள், கேரளத்தில் உள்ள நிபுணர்கள், விஞ்ஞானிகள், வித்தகர்கள், விவசாயப் பெருங்குடி, மக்கள் தமிழ் மக்களின் கைகளைத் தூக்கி, தமிழர்களும் கேரளத்தில் உள்ளவர்களும் சகோதரர்கள்தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல், கேரளம், களித் தமிழ் பேசுகிற நாடும், துளு பேசுகிற நாடும், எல்லா மக்களும் இந்தியர்கள்தான்.
ஒரு காலத்திலே சேர, சோழ, பாண்டியர் மூவேந்தர்களின் கொடியின் கீழ் வாழ்ந்தவர்கள்தான். அந்தக் கொடி நிழலில் உருவாக்கிய ஒற்றுமை, உறுதி, என்றும் நிலை நிறுத்தப்பட இந்தப் பிரச்சனையில், யாரும் உணர்ச்சிவசப்படாமல் அவர்களும் நாமும் சகோதரர்கள் என்று எண்ண வேண்டும், இருவரும் வளமை பெற வேண்டும்.
16 comments:
அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
அன்பின் டிவிஆர்
உணர்ச்சி பூர்வமாக அணுகுவதை விட்டு விட்டு அறிவு பூர்வமாக அணுக வேண்டும். தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இந்த நேரத்தில் நமக்கு தேவை ஒற்றுமை மட்டுமே....எந்த பாகுபாடும் இல்லாமல் மக்கள்,அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரு மித்த கருத்துடன் இதை எதிர்கொள்ள வேண்டும்..
பகிர்ந்தமைக்கு நன்றி...
ஊர் கூடி தேர் இழுத்தால் ஒழிய தேர் நடையை அடையும்...
ஆனால் இங்கு கும்பல் கும்பலாக பிரிந்து செயல்படுவது வருத்தத்தையளிக்கிறது...
தேவையான பகிர்வு...
நன்றி ஐயா...
அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிங்க கூட உதவ மாட்டாங்க.
இந்த பழமொழி குறித்து உங்க கருத்து என்ன?
பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..
இந்தப் பிரச்சினை தொழில்நுட்ப பிரச்சினை இல்லை. அரசியல்.
நல்ல பதிவு.
நன்றி.
//யாரும் உணர்ச்சிவசப்படாமல் அவர்களும் நாமும் சகோதரர்கள் என்று எண்ண வேண்டும், இருவரும் வளமை பெற வேண்டும்.//
உண்மை,அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.
சில புது தகவல்களையும் அறிந்து கொண்டேன் ..
சரியான தீர்வு இல்லையெனில் அழிவுதான் இரு சாராருக்கும் ...நன்றி
சிறப்பான சேதியையும் புள்ளிவிவரங்களையும் தந்து உள்ளீர்கள் உண்மையில் பாராட்டுகள் நன்றி
பகிர்விற்கு நன்றி!
தமிழன் , மலையாளி என பாராமல் இந்தியன் என்ற முறையில் அனைவரும் இந்த பிரச்சனையை அணுக வேண்டும் ... பகிர்வுக்கு நன்றி ...
தமிழன் , மலையாளி என பாராமல் இந்தியன் என்ற முறையில் அனைவரும் இந்த பிரச்சனையை அணுக வேண்டும் ... பகிர்வுக்கு நன்றி ...
அறிவோடு ,பலத்தோடு, உறுதியோடு
அணுக வேண்டிய நேரம்.
தனிப்பட்டவரின் லாபங்கள் கணக்கில் வராமல் பொது நன்மை காணப்பட வேண்டும். மிக மிக நன்றி.
///முல்லைப் பெரியாறு பலவீனமானதா.--..கலைஞர்///
தாங்கள் தலைப்பிலேயே கலைஞர் உரை என்று பதிவிட்டுள்ளீர்கள்...!
அவர் ஆற்றிய உரையில் எங்குமே தொய்வில்லை...! தொடக்கம் முதல் முடிவு வரை எதனை... எந்த கருத்தை சொல்லவந்தாரோ அதனை... அதில் பிரச்சினையின் காரணமும்....எச்சரிக்கையும்... கண்டனமும்....தீர்வும்....நடைமுறையில் செய்யவேண்டியவையும் சொல்லியுள்ளார்...!
இவர் என்ன....!
மத்தவங்க மாதிரி...
மண்டபத்துல எழுதி கொடுத்தத வாங்கி வந்து...
மேடைல படிக்கிற ஆளா அவரு...!
இல்ல....!
சிலபேர் மாதிரி எதார்த்தத்தில் நடக்காததை (அதாவது மிலிடரிக்கிட்ட கொடு... மத்திய அரசாங்கம் கைபற்றட்டும் என) பேசுற ஆளா அவரு...!
Post a Comment