Tuesday, December 6, 2011

ஆள் மாறட்ட கேஸும்...கல்யாண சுந்தரமும்..




பத்தாம் வகுப்புத் தேர்வில்..வேறு ஒருவரை தனக்கு பதில் தேர்வு எழுத வைத்தார் புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம்.அது தெரிய வர அடுத்த நாள் பரிட்சைக்கு ஆள் வரவில்லை.

அவர்மீது புகார் வர..அமைச்சர் தலைமறைவானார்..

புதுவை சட்டசபையிலும் இதனால் எதிர்க்கட்சிகள் கலாட்ட செய்தனர்.

அவருக்கு பாவம்..அமைச்சர் பதவியும் பறி போனது.தன்னை கைது செய்யாமல் இருக்க நீதி மன்றங்களை நாடி..கடைசியில் ஒரு வழியாக உச்ச நீதி மன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

அவரை காவல்துறை விசாரித்தது..மொத்தம் 300 கேள்விகள் கேட்கப்பட..அவர் பதில் சொன்னார்.

ஆமாம்..அவர் 300 கேள்விகளுக்கு பதில் சொன்னாரே..ஒழுங்காக பரிட்சைக்குப் போயிருந்தால்..அதிக பட்சம் 30 கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதுமே...என்று நண்பர் ஒருவர் கேட்க..நான் சொன்னேன்..

'போலீஸ் விசாரணையில் அதிகப் பட்சக் கேள்விகளுக்கு..'தெரியாது..தெரியாது' என்று பதில் சொன்னார்..அதே பதிலை அவர் தேர்வில் சொல்லியிருக்க முடியுமா? என்றேன்.

(ஆமாம்...உங்கள் பெயர்தானே கல்யாணசுந்தரம் ..என்று கேட்டிருந்தால் அதற்கும் அவர் தெரியாது என்று பதில் சொல்லியிருப்பாரோ!)

(டிஸ்கி...இந்நிலையில் பல ரர க்கள் தங்கள் தலைவரை திருவள்ளுவர் ரேஞ்சிற்கு உயர்த்துகிறார்களாம்..கேட்டால்..வள்ளுவன் எழுதிய குறள்கள் 1330..ஆனால் எங்கள் தலையிடம் கேட்கப்பட்டது 1339 கேள்விகள் என்று..அட போங்கப்பா..எதை எத்தோடு ஒப்பிடுவது...வள்ளுவனின் கற்பனையில் உதித்தவை 1330..ஆனால் இங்கோ....)