சென்ற தேர்தலில் தி.மு.க., விற்கு வாக்களிக்கும் படி வடிவேலு பிரச்சாரம் செய்தாலும்...அவரது குறி விஜய்காந்தை தாக்குவதாகவே இருந்தது.
வடிவேலு பேசிய எந்த கூட்டத்திலும் மறந்தும் அ.தி.மு.க.,வை அவர் தாக்கவில்லை..ஜெ பற்றியும் விமரிசிக்கவில்லை.
கலைஞரின் மேலும் பற்று உள்ளவர் வடிவேலு.
இந்நிலையில் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.உள்ளாட்சித் தேர்தலின் போது அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
விஜய்காந்த் தற்போது அ.தி.மு.க.,உடன் ஆன கூட்டணியிலிருந்து விலகி, ஜெ வையும் விமரிசித்து வருகிறார்.
அதனால் வடிவேலு இப்போது அ.தி.மு.க., வில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவருடன்..விஜய்காந்தின் நெருங்கிய நண்பரும், அவரை வைத்து பல படங்கள் தயாரித்த இப்ரஹிம் ராவுத்தரும் அ.தி.மு.க., வில் சேரப்போவதாகக் கூறப்படுகிறது.
மதுரையைச் சேர்ந்த வடிவேலு, அழகிரி மூலம் தி.மு.க.விற்குக் கொண்டுவரப்பட்டவர்.
வெளியாகியுள்ள தகவல் உண்மையானால்..வடிவேலு, அழகிரி உறவு என்னவாகும் எனத் தெரியவில்லை.
விஷயம் என்னவாகயிருந்தாலும்..கோலிவுட்டில் இச் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 comments:
கமலஹாசன், ரஜினி இவங்க போன ஆட்சியில கருணாநிதி ஏங்க போனாலும் கூடவே போய் குந்திகிட்டு இருந்தாங்க, அப்படியே அம்மா ஆட்சி வந்ததும் "தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது" ன்னு ஒருத்தர் சொல்றாரு, இன்னொருத்தர் அப்பாவின் மடியில் குழந்தைன்னு சொன்னவரு இப்போ அமாவின் மடியில் குழந்தைம்பாரோ என்னவோ. யாரையும் பகைத்துக் கொள்வதில்லை. இந்தாலும் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம். தவளையும் தன் வாயால் கெடும்னு கதையா பண்ணிட்டாரு. அழுக்குகிரிக்கும் தெரியும் யாரா இருந்தாலும் இதைத்தான் செய்ய வேண்டி வரும்னு.
கழுத கெட்டால் குட்டிச்சுவரும்பாங்க, குட்டிச் சுவரே கெட்டால் கழுதை எங்கே போகும் ?
இன்னொரு குட்டிச் சுவற்றிற்குத்தானே
Vadivelu Vedivelu aga poraara?!...Pavam.
Tamilmanam vote 2.
TM 2.
Post a Comment