Monday, December 26, 2011

ரஜினி மண்டபத்தில் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதம்





 அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு
 தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா
மண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர்.

அன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.
 டெல்லியில் அவர் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவருடன் தானும் உண்ணாவிரதம் இருக்க விரும்பியதாகவும்,
ஆனால் உடல் நலன் காரணமாக இருக்க முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில் அன்னா ஹசாரே மும்பையில் இன்று மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.
அதேசமயம் நாட்டின் அனைத்து நகரங்களிலும் இந்திய ஊழல் ஒழிப்பு அமைப்பினரும் உணணாவிரதம் தொடங்குகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டம் ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான ராகவேந்திரா
கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.

இலவசமாகவே இந்த மண்டபத்தை ரஜினி கொடுத்துள்ளார்.  தற்போது நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும்
ஊழலுக்கு எதிரான எந்த சட்ட மசோதாவுக்கும் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தனது மண்டபத்தை இலவசமாக கொடுத்துள்ளார் ரஜினி

கடந்த ஆகஸ்ட் மாதம் அன்னா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

2 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

ADAM said...

RAHAVENDRA MANDABAM BUILT BY BLOCK MONEY