யூதர்கள் தங்களை மிகவும் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களைச் சாத்தானின் மக்கள் என்றும் எண்ணி இருந்தார்கள்.யூத மதத்திலிருந்து பிரிந்த சமாரியர்களையும் அவர்கள் வெறுத்தார்கள்.
ஆனால் இயேசுநாதர் அவர்களோ எல்லா மக்களையும் இறைவனின் குழந்தைகளாக எண்ணி அன்பு காட்ட வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தார்.
அவரின் இந்த அறிவுரை யூத மத குருக்களுக்குப் பிடிக்கவில்லை
வேத நூலை நன்கு அறிந்த மதகுரு ஒருவர் இயேசுநாதர் அவர்களிடம் குற்றம் காண வேண்டும் என்ற நோக்கில், 'சொர்க்கம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார்.
'இது குறித்து வேத நூலில் என்ன சொல்லி இருக்கிறது' என்று அவரிடம் பதில் கேள்வி கேட்டார் இயேசுநாதர்.
'உன் இறைவனாகிய கடவுளை உன் உள்ளத்தாலும், உடலாலும் முழுமையாக நேசிப்பாயாக.உன்னை நேசிப்பதைப் போலவே உன் அண்டை அயலானையும் நேசிப்பாயாக என்று எழுதியுள்ளது..என்றார் அவர்.
'நன்கு சொன்னீர்.இவற்றையே தொடர்ந்து செய்து வாரும்.உமக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்றார் இயேசுநாதர்.
'யூதனுக்கு யூதனே அண்டை அயலான்.மற்றவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்' என்ற எண்ணம் கொண்டிருந்த வர், 'என் அண்டை அயலான் யார்?' என்று கேட்டார்.
இதற்கு விளக்கம் தர நினைத்த இயேசு, ஒரு கதை சொல்லத் தொடங்கினார்."யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவிற்குச் சென்றுக் கொண்டிருந்தான்.வழியில் திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.அவனிடமிருந்த பொருளைக் கொள்ளை அடித்ததுடன் அவனையும் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள்.உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் அவன்.
அந்த வழியாக யூதகுரு ஒருவர் வந்தார்.அவனைப் பார்த்த அவர் எந்த உதவியும் செய்யாமல் சென்று விட்டார்.
அடுத்ததாக யூதர் கோவில் பணியாள் ஒருவன் அங்கு வந்தான்.அவன் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாதவன் போல அங்கிருந்து சென்று விட்டான்.
கழுதையின் மேல் சமாரிய வணிகன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த யூதன் அருகே சென்றான்.காயங்களை எல்லா, கழுவிக் கட்டுப் போட்டான்.பிறகு அவனைத் தன் கழுதையின் மீது ஏற்றிக் கோண்டு ஒரு சத்திரத்தை அடைந்தான்.ஒருநாள் முழுதும் அங்கேயே தங்கி இருந்து கவனித்தான்.அவனுக்கு இன்னமும் உணர்வு திரும்பவில்லை.
தனக்கு அவசர வேலை இருப்பதை உணர்ந்த சமாரியன், 'சத்தரத்துக்காரரே..இவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.செலவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.இந்த இரண்டு பொற்காசுகளை வைத்துக் கோள்ளுங்கள்.அதிகம் செலவானால் நான் திரும்பி வந்து தருகிறேன்' என்று சொல்லி விட்டு சென்றான்.என்ற இயேசுநாதர் அவர்கள்,'இப்போது சொல்லுங்கள்..திருடர்களிடம் சிக்கிய அந்த யூதனுக்கு அயலானாய் நடந்து கொண்டவன் யார்?' என்று கேட்டார்.
'அவனுக்கு இரங்கி உதவி செய்த சமாரியனே நல்ல அயலான்' என்றார் மத குரு.
நீரும் சென்று அப்படியே நடந்து கொள்ளும் என்றார் இயேசுநாதர் அவர்கள்..
டிஸ்கி - அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்.
7 comments:
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்;)
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்;)
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
உன் இறைவனாகிய கடவுளை உன் உள்ளத்தாலும், உடலாலும் முழுமையாக நேசிப்பாயாக.உன்னை நேசிப்பதைப் போலவே உன் அண்டை அயலானையும் நேசிப்பாயாக என்று எழுதியுள்ளது..என்றார் அவர்//
அற்புதமான வரிகள்.
எல்லோரையும் நேசிப்போம்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு.
கிறிஸ்மஸ் புதுவருட வாழ்த்துக்கள்.
இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்
Post a Comment