Saturday, December 13, 2008

வை.கோ.விற்கு ஒரு கடிதம்...

வணக்கம்.

தங்கள் மேடைப் பேச்சில் மயங்குபவர்களில் நானும் ஒருவன்.

தி.மு.க.வின் தானைத்தலைவனாய் இருந்த நீங்கள்...வெளியேற்றப்பட்ட போது கூடமனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன்.தாய்க்கழகத்திலிருந்து..தங்களது விலக்கம் குறித்து இப்பதிவில்
எதுவும் எழுதப்போவதில்லை.ஏனெனில் தாய்வீட்டில் உள்ள உங்கள் மனதிற்கு எல்லாமே தெரியும் என்பதால்.

அப்படியெனில் இப்பதிவின் நோக்கம்...?

தேவையில்லாமல் POTA வில் கைதாகி இருந்த போது..கலைஞர் பட்ட வேதனையும்..அவர் அப்போது உங்களைப் பார்க்க பட்ட கஷ்டங்களையும்..எல்லோருமே அறிவர். பின்னர் மாறனின் மறைவிற்கு நீங்கள் வந்திருந்த போது..கலைஞரும்,நீங்களும்..மாறனின் இழப்பில் அழுதது...அதை தொலைக்காட்சியில் பார்த்த என்னைப்போன்றோர் ,மீண்டும் தாய்க்கழகத்தில் நீங்கள் இணைய வேண்டும் என்று விரும்பினோம்.

கடந்த சட்டசபை தேர்தலில் அதற்கான காலம் கனிந்து வருவது போல இருந்தது.ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில்..தங்கள் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகள் போதாது என்று..கடைசி நிமிடம்
நீங்கள் அணி மாறினீர்கள்.

ஆனால் இப்போது நடப்பது என்ன?

தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்ற போது கூட ஜெ கண்டனம் தெரிவிக்காதவர்.

அந்த கூட்டணியில் உள்ள நீங்கள்..உங்களுக்கு ஒதுக்கிய தொகுதி எம்.எல்.ஏ., மறைவிற்கு பின் நடக்கும் அத்தொகுதி இடைத் தேர்தலில்..போட்டியிட அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்துள்ளதாக செய்திகள் படித்தோம்.(ஒருவேளை அது காலத்தின் கட்டாயமோ!!!)

இந்த விட்டுக்கொடுத்தலை..முன்னரே கலைஞருக்கு செய்திருந்தால் ..மீண்டும் தாய்வீடு வந்த உற்சாகம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.

தன்மானம் காத்த தானைதலைவனாய் இருந்திருப்பீர்கள்.

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை...

Better Late than Never

என்றும் அன்புடன்

ஒரு தமிழன்

16 comments:

bala said...

//இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை...

Better Late than Never

என்றும் அன்புடன்

ஒரு தமிழன்//

ஒரு தமிழன் அய்யா,

வை கோ அய்யா தாய் கழகம்(தி மு க?) திரும்பினால் மஞ்ச துண்டின் குடும்ப இரும்புப் பிடியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் தி மு க விற்கு ஆக்ஸிஜன் கிடைக்குமா என்ன?அப்படியே தி மு க மூச்சுத் திணறி உயிர் விட்டால் தான் என்ன ஆகிவிடும்?தமிழகம் முன்னேறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகிவிடும்.அது உங்களுக்கு மனக் கசப்பை ஏன் அளிக்கிறது?நீங்கள் மஞ்ச துண்டின் ஜால்ரா பதிவர்களை அப்பீஸ் செய்ய இப்படி எழுதியிருக்கிறீர்களா?அல்லது வை கோ வால் தான் ஸ்டாலினுக்கும்,மதுரை எரிப்பு புகழ் அழகிரி அய்யாவுக்கும் ஆப்பு வைக்க முடியும் என்ற மக்கியாவில்லித்தனத்துடம் இந்த பரிந்துரை செய்திருக்கிறீர்களா?சற்று விளக்க்கமா பதில் சொல்லுங்கய்யா.

பாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஒரு கட்சியில் இருந்து வெளிவந்து கட்சி ஆரம்பிப்பவர்கள் வெற்றி அடைய வேண்டும்.மீண்டும் அவர் இருந்த கட்சியுடன் கூட்டு வைப்பதில் என்ன பயன்? வைகோ அதை செய்திருக்கிறார்.ஆகவே..ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு அது தோல்வியே..அதனால் தான் இந்த பதிவு.மற்றபடி யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.என் பதிவுகளை படித்து வந்தால் இது உங்களுக்கு புரியும்.

bala said...

//மீண்டும் அவர் இருந்த கட்சியுடன் கூட்டு வைப்பதில் என்ன பயன்? //

ராதாகிருஷ்ணன் அய்யா,

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.தி மு க விடம் அவர் கூட்டு வைத்தது தன் தோல்வியை ஒத்துக் கொண்டதற்கு சமம்.

பாலா

Tech Shankar said...

வைகோவின் மேடைப்பேச்சுகளைக் காண
1)
வைகோ பேசுகிறார் பாகம் 1


2)
வைகோ பேசுகிறார் பாகம் 2

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Sharepoint the Great

கோவி.கண்ணன் said...

இராத கிருஷ்ணன் ஐயா, காஞ்சனா அம்மா,

தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துகள்.

அத்திரி said...

இவ்வார நட்சத்திர பதிவாளரே வாழ்த்துக்கள்

ISR Selvakumar said...

திருமங்கலம் தொகுதி
வைகோவிடமிருந்து பிடுங்கப் பட்டது
அல்லது வை.கோ விட்டுக் கொடுத்தார்
இரண்டில் எது உண்மையென்றாலும் அதனால் வை.கோவுக்கும் அவர் கட்சிக்கும் எந்த இலாபமும் இல்லை என்பது கசப்பான உண்மை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
கோவி.கண்ணன் said... ...
இராத கிருஷ்ணன் ஐயா, காஞ்சனா அம்மா,

தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துகள்.//
வருகைக்கு நன்றி கோவி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///r.selvakkumar said...
திருமங்கலம் தொகுதி
வைகோவிடமிருந்து பிடுங்கப் பட்டது
அல்லது வை.கோ விட்டுக் கொடுத்தார்
இரண்டில் எது உண்மையென்றாலும் அதனால் வை.கோவுக்கும் அவர் கட்சிக்கும் எந்த இலாபமும் இல்லை என்பது கசப்பான உண்மை.///
உண்மை

Venkat said...

Hello,

Read your blog on Vaiko and your inclination for him to join DMK. If he does, imagine his position after MKs life. Both sons are going to fight with each other and this guy will be nowhere.
Nevertheless, either he does not know about LTTE or is acting as if he does not know. He must be put behind bars for his pro LTTE speeches on supporting a banned org in India.

For example - tomorrow someone from a Muslim group in Tamil nadu appreciates about LeT and Dawa - will you ask for that individual's arrest or will you say its completely justifiable?

In my opinion, whether he is a leader or an individual - one has to respect the law of land. If not he cannot be outside - he has to be inside till the time he starts giving respect to the law of land or till his death - which ever is earlier.

Another - he does not have one particular trait that a leader requires - he gets emotional in public - he cries very often - dont you think this is non sense?

Do not tell me that MK and Jaya does not have that either - yes, I am aware that they do not have that - but this guy is anti-national. MK is also anti-national - but if he has to protect his position - he will sacrifice anything and justify it shamelessly.

Thanks

Venkataraghavan R

T.V.ராதாகிருஷ்ணன் said...

தனிக்கட்சி ஆரம்பித்து ஒன்றும் சாதிக்காத அவர்...தாய்க்கழகத்திலேயே இருந்திருக்கலாம் என்பதே என் எண்ணம்.
வருகைக்கு நன்றி வெங்கட்

Venkat said...

புரிஞ்சுதுங்க. ஒரே எல்லா அரசியல்வாதிங்க மேலேயும் ஒரு இனம் புரியாத எரிச்சலா இருக்கு. மக்களுடய உயிரை காப்பத்த முடியாதவனெல்லாம் ஒரு தலைவனா மந்திரியா

நன்றி. உங்கள் ப்ளாக் நன்றாக இருக்கிறது. உங்கள் பணி தொடரட்டும்.

வெங்கட்

T.V.ராதாகிருஷ்ணன் said...

கருத்துக்கும்...பாராட்டுக்கும் நன்றி வெங்கட்