Monday, December 15, 2008

அம்மா என்றால் அம்மாதான்..(.சிறுகதை )

தனக்கு முன்னால் தட்டில் கொண்டுவந்து வைக்கப்பட்ட அந்த ஸ்வீட்டைப் பார்த்தான் பிரபு.அவன் அம்மாவின் முகம் அதில் தெரிந்தது.

அவனுக்கு இந்த ஸ்வீட் பிடிக்கும் என எவ்வளவு நாட்கள் அம்மா அதை செய்து கொடுத்திருக்கிறாள்.அம்மாவுக்கு மட்டுமே செய்ய தெரிந்த இனிப்பு அது.என்னுடைய ஸ்வீட் அம்மாவின் ஸ்வீட் அது என்று ர(ரு)சித்தபடியே சாப்பிட்டுஇருக்கிறான் அவன்.

அதெல்லாம் பழைய கதை.

அவனுக்கு திருமணம் ஆனவுடன் அம்மா அவனுடைய மனைவி மைதிலியிடம் " இதோ பாரும்மா: இனிமேல் அவனை கவனிக்கவேண்டியது உன் பொறுப்பு.ஆனா இந்த ஸ்வீட் சமாசாரத்தை மட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன்.இதை நான் செய்தால் தான் அவனுக்கு பிடிக்கும்." என்று கூறிவிட்டாள்.

வீட்டுக்கு வீடு வாசற்படி.அவன் விஷயத்திலும் நடந்தது.

ஆம்..மைதிலிக்கும்..அம்மாவிற்கும் ஒத்து வராததால் தனிக்குடுத்தனம் வந்து விட்டான் அவன்.

அப்போது கூட..'அம்மா..அந்த ஸ்வீட் பண்றதை மைதிலிக்கு சொல்லிக்கொடு' என்று அவன் கூற..அம்மா செய்முறையை எழுதி அவளிடம் கொடுத்தாள்.

அதற்குப் பிறகு மைதிலி எவ்வளவோமுறை அதை செய்துக் கொடுத்து விட்டாள்..ஆனாலும் அம்மா செய்வது போல இல்லை..அந்த கைப் பக்குவம் வரவில்லை.இதை மைதிலியிடம் அவனாக சொல்லாவிட்டாலும்,அவளுக்கும் தெரிந்தே இருந்தது.

அதனால் எவ்வப்போது அவனுக்கு அந்த ஸ்வீட் சாப்பிட ஆசையோ அப்பவெல்லாம் அம்மாவைப் பார்க்க கிளம்பி விடுவான்.

***** ***** ****** ***** *****

'என்ன உங்கம்மா பண்ற மாதிரி இல்லையா'-மைதிலி

தலையை மேலும் கீழும் ஆட்டினான்.மைதிலிக்கு பதிலா அல்லது அந்த ஸ்வீட்டை சாப்பிடும் அழகா என அவனுக்கு மட்டுமே தெரியும்.

இது நடந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.

இன்று அவனது பிறந்த நாள்.அம்மா சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள்.கண்டிப்பாக அந்த ஸ்வீட் இருக்கும்.மைதிலியுடன் கிளம்பினான் பிரபு.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது..அம்மா குளியலறையில் இருந்தாள்.

அவனும்,மைதிலியும் அடுக்களையை நோட்டம்விட்டனர்.அம்மாவின் பழைய டயரி ஒன்று கிடைத்தது.அதை எடுத்து புரட்டுகையில்...பக்கத்தில் அந்த ஸ்வீட் செய்முறை இருந்தது.

அதை படித்த மைதிலி...ஆச்சரியத்துடன் "பார்த்தீங்களா:ஸ்வீட்டில் இந்த பொருட்களையெல்லாம் சேர்க்கணும்னு உங்க அம்மா சொல்லித்தரல்லை.அதனால்தான் உங்க அம்மா செய்வதுபோல வரல்லை'என்றவாறு தேவையான பொருட்கள் எழுதியிருந்த பகுதியை சுட்டிகாட்டி அம்மா மீது குற்றம் சாட்டினாள்.

அதை பார்த்த பிரபுவின் முகத்தில்...கோபம்...வருத்தம்...குழ்ப்பம்...

ஆம்...அம்மா முழுமையாக மைதிலிக்கு சொல்லித்தரவில்லை.ஒருவேளை மைதிலி தன்னிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடாது என்பதற்காகவா? ...ச்சே...அப்படிபட்டவளா அம்மா என்று எண்ணியவன் வாயிலிருந்து அவனை அறியாமலேயே வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

நடந்ததை எல்லாம் அடுக்களையின் வாயிலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அம்மா...கண்களில் கண்ணீர் கொப்பளிக்க "பிரபு: என்னை மன்னிச்சுடுடா..நீ தனி குடித்தனம் போனதும் .இந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே என்னை பார்க்க வர்றே..ஒரு வேளை மைதிலியும் என்னைப்போல செய்ய ஆரம்பித்துவிட்டால் ..நீ வர்றதையும் நிறுத்திவிடுவே...உன்னை பார்க்காமல் என்னால் இருக்கமுடியாதுடா... அதனால்தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துண்டுட்டேன்..தப்புன்னா மன்னிச்சுடுடா"கூப்பிய கைகளுடன் வார்த்தைகள்...துண்டு துண்டாக குமுறலுடன் வந்தன.

அம்மான்னா அம்மாதான் என்றவாறே நாத்தழுதழுக்க அம்மாவை அணைத்துக்கொண்டான் பிரபு.

14 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே என்னை பார்க்க வர்றே.//


தாய்மை ஒரு ஸ்வீட்டுக்குள் அடங்குவது கொடுமையிலும் கொடுமை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அம்மாவின் பழைய டயரி ஒன்று கிடைத்தது.அதை எடுத்து புரட்டுகையில்...பக்கத்தில் அந்த ஸ்வீட் செய்முறை இருந்தது.//


மைதிலியின் பேத்தி பழைய தமிழ்மணத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும்போது சொன்னால்,....


பாருங்க பாட்டி இதெல்லாம் சொல்லி தரல்...........

மணிகண்டன் said...

கதை நல்லாயில்லை.

தமிழ்மனம் சூப்பர்ஸ்டார் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

சின்ன தீம்மாக இருந்தாலும் நல்லா இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
கதை நல்லாயில்லை.

தமிழ்மனம் சூப்பர்ஸ்டார் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.//


வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SUREஷ் said...
இந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே என்னை பார்க்க வர்றே.//


தாய்மை ஒரு ஸ்வீட்டுக்குள் அடங்குவது கொடுமையிலும் கொடுமை///

:-((((

T.V.ராதாகிருஷ்ணன் said...

SUREஷ் said...
அம்மாவின் பழைய டயரி ஒன்று கிடைத்தது.அதை எடுத்து புரட்டுகையில்...பக்கத்தில் அந்த ஸ்வீட் செய்முறை இருந்தது.//


//மைதிலியின் பேத்தி பழைய தமிழ்மணத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும்போது சொன்னால்,....


பாருங்க பாட்டி இதெல்லாம் சொல்லி தரல்...........///

மைதிலியின் பேத்தி தமிழ் படிக்கிறாள் என்பதே இனிக்கும் செய்தி...வேறு ஸ்வீட் எதற்கு?
:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
சின்ன தீம்மாக இருந்தாலும் நல்லா இருக்கு.///

நன்றி கோவி

நசரேயன் said...

அம்மான்னா அம்மாதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
அம்மான்னா அம்மாதான்//

நன்றி நசரேயன்

Subbiah Veerappan said...

//////"பிரபு: என்னை மன்னிச்சுடுடா..நீ தனி குடித்தனம் போனதும் .இந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே என்னை பார்க்க வர்றே..ஒரு வேளை மைதிலியும் என்னைப்போல செய்ய ஆரம்பித்துவிட்டால் ..நீ வர்றதையும் நிறுத்திவிடுவே...உன்னை பார்க்காமல் என்னால் இருக்கமுடியாதுடா... அதனால்தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துண்டுட்டேன்.//////

அம்மா சொன்னது சரிதான். (சில) பெண்களுக்கு உள்ள இயற்கையான குணம் அது!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

///அம்மா சொன்னது சரிதான். (சில) பெண்களுக்கு உள்ள இயற்கையான குணம் அது!////


ஆஹா............

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி SP.VR. SUBBIAH saar

T.V.ராதாகிருஷ்ணன் said...

////SUREஷ் said...
///அம்மா சொன்னது சரிதான். (சில) பெண்களுக்கு உள்ள இயற்கையான குணம் அது!////


SUREஷ் said...
///அம்மா சொன்னது சரிதான். (சில) பெண்களுக்கு உள்ள இயற்கையான குணம் அது!////


ஆஹா............
............/////

ஆஹா !!!!!!!