Tuesday, February 10, 2009

இந்தியாவிற்கு அல்-கய்தா மிரட்டல்

அல்-கய்தா இயக்கத்தலைவன் பின்லேடனுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ல தலைவன்..அபு அல்-யாசித்.அவன் அரபு மொழியில் பேசிய வீடியோ கேசட் ஒன்று பி.பி.சி.,க்கு வந்திருக்கிறதாம்.அதில் அவன் கூறி இருப்பதாவது..

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால்..முப்பையில் நடந்தது போன்ற தாக்குதல்களை..இந்தியாவின் பிற பெரிய நகரங்களிலும் நடத்துவோம்..என மிரட்டல் விடப்பட்டுள்ளது.ஆஃப்கனிஸ்தானில்..ரஷ்ய ராணுவத்தை மண்ணில் புதைத்தது போல இந்திய ராணுவத்தை..தீவிரவாதிகள் மண்ணில் புதைத்து விடுவார்கள்.இந்திய பொருளாதார மையங்கள் அழிக்கப்படும்.

அபு-அல் யாசித்பாகிஸ்தானையும் கண்டித்துள்ளான்..எதற்கு தெரியுமா? தீவிரவாத இயக்கங்களுக்கு தடை விதித்துள்ளதற்கு.

இந்நிலையில்..இந்திய ராணுவ அமைச்சர் அந்தோணி..'நாட்டுக்கு எதிரான எந்த மிரட்டலையும்..இந்திய ராணுவம் சமாளிக்கும் நிலையில் உள்ளது' என கூறியுள்ளார்.மேலும்..நாட்டின் பாதுகாப்பு நிலை கருதி ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருப்பதில்..எந்த சமரசமும் செய்துக் கொள்ள முடியாது..என்றுக் கூறியுள்ளார்.

5 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அப்படியே நமக்கு முடியாவிட்டால் இலங்கை அமைதிப்படை வந்து நமக்கு உதவாதா? கண்டிப்பாக உதவும்.:P

கோவி.கண்ணன் said...

இந்தியாவை மிரட்டிப் பழகினால் தான் மற்ற நாடுகளை மிரட்ட முடியும் என்பது அல்கய்தாவுக்கு தெரிந்திருக்கிறது !

:)))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிரணாப் முகர்ஜியை அனுப்பி இது விஷயமாக ராஜபக்ஷேயை சந்திக்க சொல்லலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// கோவி.கண்ணன் said...
இந்தியாவை மிரட்டிப் பழகினால் தான் மற்ற நாடுகளை மிரட்ட முடியும் என்பது அல்கய்தாவுக்கு தெரிந்திருக்கிறது !

:)))))))////

:-)))))))))))