Tuesday, April 27, 2010

வள்ளுவனும்..இன்பத்துப்பாலும் - 5

மலரும்..மங்கையும் ஒரு ஜாதி என்றான் ஒரு கவிஞன்..மற்றவனோ மலர்களிலே அவள் மல்லிகை என்றான்..அடுத்தவன் ஒருவன் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப்பார்க்கையிலே என்றான்..

இப்படி ஒவ்வொரு கவிஞனும் போட்டிப் போட்டுக் கொண்டு பெண்களை மலர்களுக்கு ஒப்பிட்டனர்..

இவர்களின் முன்னோடி..பொய்யாமொழியான் மட்டும் சும்மா இருந்திருப்பானா..இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவன் பெண்களையும்..அவர்களின் அங்கங்களையும் என்னென்ன மலர்களுக்கு ஒப்பிட்டு இருக்கிறான் பாருங்கள்..

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

அனிச்ச மலர் மென்மையானதுதான்..ஆனால்..அதனினும் மென்மையானவளாம் அவனது காதலி..

மலர்களைக் கண்டால்..நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது, புத்துணர்ச்சி தோன்றுகிறது..ஆனால் கண்டால் வியக்கவைக்கும் மலர்கள் உளதா...இருக்கிறது என்கிறார் வள்ளுவர்..தன் காதலியின் கண்கள் பலரும் கண்டு வியக்கும் மலராம்..

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

மலர்களைக் கண்டு மயங்கும் நெஞ்சமே..இவளது கண்களைப் பார்..பலரும் கண்டு மயக்கும் மலராய் அது திகழ்கிறது

ஒரு மலர் தன்னைப் போன்ற இன்னொரு மலரைக் கண்டு..அது போன்ற அழகு தனக்கு இல்லையே என நாணித் தலைகுனியுமா....குனியும் என்கிறார்..

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

(என் காதலியை)குவளை மலர்கள் காண முடிந்தால்..'இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே' என தலைகுனிந்து நிலம் நோக்குமாம்..

ஒரு பெண்..தன்னை மற்ற அழகான ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு தான் அது போல இருப்பதாக எண்ணுகிறாள்..உண்மையில் அப்படி துளியும் இல்லை..ஆனால் அப்படி நினைப்பவள்..அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியாமலும் இருக்கிறாள்..ஊரார் இவளை அழகாக இருப்பதாக நினைக்க இவள் என்ன செய்ய வேண்டும்..அந்த அழகானப் பெண்ணை நோக்கும் பலரும்..இவளைப் பார்க்காமல் கேள்வி ஞானத்திலேயே இருக்க வேண்டும்..இதைத்தான் இந்தக் குறள் மூலம் வள்ளுவர் கூறுகிறார்..

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

நிலவே..மலரனைய கண்களுடைய என் காதலிக்கு ஒப்பாக நீ இருப்பதாய் உனக்கு பெருமை இருக்குமேயாயின்..(அதை மற்றவர்கள் நம்ப வேணுமெனில்) அவர்கள் காணும்படி நீ தோன்றாது இருப்பதே மேல்...

12 comments:

மதுரை சரவணன் said...

தகவலுக்கு நன்றி. அருமையாக எடுத்து கூறி உள்ளீர். வாழ்த்துக்கள்

Chitra said...

அருமை - அழகு. :-)

இராஜ ப்ரியன் said...

நன்று!

shortfilmindia.com said...

கண்ணைப் பற்றி மட்டும் தான் வள்ளுவன் சொல்லியிருக்கிறானா..?:)

கேபிள் சங்கர்

சிநேகிதன் அக்பர் said...

விளக்கம் மிக அருமை.

goma said...

அழகான தெளிவான விளக்கம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மதுரை சரவணன் said...
தகவலுக்கு நன்றி. அருமையாக எடுத்து கூறி உள்ளீர். வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றி சரவணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
அருமை - அழகு. :-)//

நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராஜ ப்ரியன் said...
நன்று!//


வருகைக்கு நன்றி இராஜ ப்ரியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//shortfilmindia.com said...
கண்ணைப் பற்றி மட்டும் தான் வள்ளுவன் சொல்லியிருக்கிறானா..?:)

கேபிள் சங்கர்//

வள்ளுவர் எதைப்பற்றியெல்லாம் சொல்லியுள்ளாரோ..அதைப்பற்றியெல்லாம் வரிசையாக எழுதுகிறேன் :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
விளக்கம் மிக அருமை.//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
அழகான தெளிவான விளக்கம்//

நன்றி goma