Thursday, August 12, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(13-8-10)
உலக நிலப்பரப்பில் இந்தியா 2.3 சதவிகிதம் மட்டுமே..ஆனால் உலக மக்கள் தொகையில் 17.5 சதவிகிதம்

2)நம் நாட்டில் 25 கோடி இளைஞர்களின் சராசரி வயது 24.சுமார் 30 கோடி பேர் 12 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்தியா இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக விளங்குவதால் வருங்காலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு நம் நாடு சவாலாய் இருக்கும்.

3)ராகுல் காந்தியிடம் தமிழக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது..'இனி காமராஜ் ஆட்சி அமைப்போம் என சொல்லாதீர்கள்..காங்கிரஸ் ஆட்சி அமைப்போம்' என்று கூறுங்கள் என அறிவுரைக் கூறினாராம்..ஆமாம் உண்மைதான்..அந்த பெருந்தலைவர் பற்றி பேச இன்று யாருக்கு அருகதை இருக்கிறது

4)சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் 'உங்கள் பணிக்கால அனுபவங்களை புத்தகமாக எழுதுவீர்களா?' என்று கேட்ட போது..எழுதுவதானால் உண்மையை எழுத வேண்டும்.அப்படி எழுதினால் வீண் சர்ச்சைகளும், பிரச்னைகளும் வரும்.உண்மையை எழுத முடியாத போது எதற்கு சுயசரிதை எழுத வேண்டும் என்றாராம்.

5) கடற்கரையிலிருந்து நாம் கடலைப் பார்த்தால்..சுமார் 3 மைல்கள் தூரமே பார்க்க முடியுமாம்.

6)வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் Gas Cylinderக்கும் காலாவதி தேதி உண்டு.கெடு முடிந்த பின்னரும் அதை பயன்படுத்தினால்..அபாயங்கள் நேரக்கூடும்.சிலிண்டரின் மேல் பகுதியை இணைக்கும் இரும்புப் பட்டையில் A10, B11, C12, D13 இப்படி எண்கள் இருக்கும்.A எனில் ஜனவரி முதல் மார்ச்,B எனில் ஏப்ரல்-ஜூன், C எனில் ஜூலை- செப்டம்பர், D எனில் அக்டோபர்-டிசம்பர்..அடுத்த இலக்கம் வருடம் ..உதாரணமாக A10 எனில் 2010ல் முதல் காலாண்டுவரை அதை உபயோகப் படுத்தலாம் என்று அர்த்தம்..(இதில் இன்னும் போலிகள் வரவில்லை என நம்புவோம்.)

7)இன்றைய தேதியில் காஷ்மீரின் 45 சதவிகித நிலப் பரப்பு மட்டுமே இந்தியாவிடம் உள்ளது.33 சதவிகிதம் பாகிஸ்தான் வசம்..22 சதவிகிதம் சீனாவிடம்..நம் வசம் உள்ளதை கைப்பற்றுவது..இல்லையேல்
நம் வசம் உள்ளதை தனி நாடாக்குவது இதுதான் பாகிஸ்தான் லட்சியம்..இதற்காகவே 63 ஆண்டுகளாக போராடுகிறது..இந்தியாவும் பேச்சு வார்த்தை (!!) நடத்திக் கொண்டிருக்கிறது.

8) இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் வானம்பாடிகளின் இந்த இடுகை தமிழா தமிழா வின் மகுட இடுகையாகிறது.வாழ்த்துகள் பாலா

9) கொசுறு ஒரு ஜோக்

காங்கிரஸ் தொண்டர்- தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று இனி சொல்லாதீர்கள்..காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று சொல்லுங்கள்..என்கிறாரே ராகுல்...காங்கிரஸில் எந்த கோஷ்டியை சேர்ந்தவர் ஆட்சின்னு சொல்லலையே....
தொண்டர்2- ஆட்சியை பிடிக்கும் முன் இன்னும் எவ்வளவு கோஷ்டிகள் உருவாகுமோ..அதனாலத்தான் அதை இப்பச் சொல்லலை

6 comments:

vasu balaji said...

/அந்த பெருந்தலைவர் பற்றி பேச இன்று யாருக்கு அருகதை இருக்கிறது/

நிச்சயம் மனசாட்சி இருக்கிற யாரானாலும் ஒத்துக் கொள்ள வேண்டியது இது.

/உண்மையை எழுத முடியாத போது எதற்கு சுயசரிதை எழுத வேண்டும் என்றாராம்./

இப்படிக் கேக்க வெச்சு அப்பாடான்னு இருப்பாங்க போல:)

மகுடத்துக்கு நன்றி சார்.:)

Unknown said...

அது மகுட இடுகைதான்.... வானம்பாடிகள் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் ...

இவ்வளவு குறைந்த நிலபரப்பில்.. எவ்வளவு பெரிய மக்கள் ... நாம் பாராட்டுக்கு உரியவர்கள்தான் ....

Mahi_Granny said...

nice to see every week giving crown to a deserving post. this week it goes to really deserving post. thanks for sharing . info abt gas cylinder is new to me.

க ரா said...

சுண்டல் சுவை :)

Vidhya Chandrasekaran said...

பகிர்விற்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
Bala
கே.ஆர்.பி.செந்தில்
Mahi_Granny
இராமசாமி கண்ணண்
வித்யா