Tuesday, August 3, 2010

க.கா., வும் ச.சீ.,யும்

தூக்கு தூக்கி என்று சிவாஜி நடித்த படம்...இப்படத்தில் ஒரு பிரசங்கத்தில் கதாநாயகன் கீழ்கண்டவற்றை கேட்கிறான்.

கொண்டு வந்தால் தந்தை

கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்

சீர் கொண்டு வந்தால் சகோதரி

கொலையும் செய்வாள் பத்தினி

உயிர் காப்பான் தோழன்...

இதில் எது நடக்குமோ..நடக்காதோ...நான்காவது இப்போதெல்லாம் அதிகமாக நடந்துக் கொண்டிருக்கிறது..கணவனைக் கொல்வது..காதலனைக் கொல்வது..கள்ளக் காதலனைக் கொல்வது...

சமுதாயத்தில் மன வருத்ததை ஏற்படுத்தும் நிகழ்வுகள்..

இரண்டாண்டுகளுக்குமுன்..கணவனுடன் தேனிலவிற்கு சென்றுவிட்டு அங்கு தன் காதலனை வரவழைத்து கணவனைக் கொன்ற நிகழ்வு படித்தோம்.

இப்போது..சமீப காலங்களில் கள்ளக் காதலால் நடந்த நிகழ்ச்சிகள்.

சென்னை தண்டையார்பேட்டையில் பலருடன் தொடர்பு வைத்திருந்த மஞ்சுளாவை அவளது க.கா., சிவசங்கர் கொலை செய்தார்

தன் க.கா., வெறுக்கத் தொடங்கியதால் அவரது 4 வயது மகனை கொலை செய்தார் பூவரசி என்பவர்..

இரண்டாவது கள்ளக் காதலனுடன் பழகியதைக் கண்டிக்கப்போய் முதல் காதலனை கொலை செய்து எரிக்க உதவினார் பெண் போலீஸ் சாஸ்திரக்கனி

ஒரகடத்தில் காதலனுடன் வாழ கணவனை விட்டு ஓடி விட்டு ..மீண்டும் கணவனுடன் வாழ வந்து ..கணவனுடன் சேர்ந்து காதலனைக் கொன்றார் குப்பு என்பவர்..

இப்போதெல்லாம் இது போன்ற செய்திகள் அதிகம் கேள்விப் படுகிறோம்...ஊடகங்களும் இந் நிகழ்ச்சிகளை..அதிகம் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இப்படிப்பட்ட சமுதாய சீரழிவுக்கு காரணம் என்ன...

வறுமையா..ஆடம்பர வாழ்வு கனவா..பண நடமாட்டம் அதிகமா..காம இச்சையா..

சமூக ஆர்வலர்கள் என்ன நினைக்கிறார்கள்..இதை சீரமைக்க அவர்கள் பங்கு என்ன..

எங்கே போகிறோம் நாம்..

13 comments:

vasu balaji said...

//வறுமையா..ஆடம்பர வாழ்வு கனவா..பண நடமாட்டம் அதிகமா..காம இச்சையா..//

டிவோர்ஸ் ப்ரோசீஜர்ஸ் அண்ட் லா!. சோ கால்ட் சமூகம்:).

Vidhoosh said...

குடும்ப அமைப்புக்களின் முக்கியத்துவம் பற்றி சொன்னால், பெண்ணடிமைத்தனம் என்கிறார்கள்.
சுதந்திரமாக இருந்தாலோ எல்லாம் கெட்டுப் போச்சு என்கிறார்கள்.
ஒரு பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கும் போரில் பலியாகும் வீரர்கள் இவர்கள் என்பதாகப் பாருங்கள்.. புரட்சியாளர் என்றறியப் படுவீர்கள்...

எனக்கு என்றைக்கும் என்னவோ போடா மாதவா மட்டுமே...

Vidhoosh said...

இது போன்ற மட்டமான கிளுகிளுப்பு விளம்பரம் தேடி, "எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே" என்ற பொது மந்தபுத்தியை உண்டு பண்ண மீடியாவை என்னவென்று சொல்வது?

Vidhya Chandrasekaran said...

இந்த மாதிரி க.கா செய்திகள், கொலைகளைப் கேட்க வரும்போது ச.சீ ச்சீச்சீ என்று தோன்றுகிறது.

//வறுமையா..ஆடம்பர வாழ்வு கனவா..பண நடமாட்டம் அதிகமா..காம இச்சையா..//

இவற்றோடு ”நான்” என்ற மனோபாவம். ஈகோ:((

Unknown said...

இனி இதை சீரமைக்க முடியாது .. கலாசார மாற்றத்தின் முதல் படி இது நட்சத்திர ஹோட்டல்களில் இதன் அடுத்த நிலைக்கு வந்தவர்கள் வருகிறார்கள்..
அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் சாதாரண விசயமாகிவிடும் .. கொலைகளும் குறையும் ...

சிநேகிதன் அக்பர் said...

உண்மையைச் சொல்லப்போனால். இது காலம் காலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. அவரவர் சூழலில் அவரவர் செய்வது சரி. முன்பு மீடியாக்கள் குறைவு. இப்போது எது கிடைத்தாலும் நீயூஸாக்கி விடுகிறார்கள். அல்லது வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறார்கள்.

இதில் பாதி, உண்மையான சம்பவத்தோட இவர்கள் சேர்த்த கதைகளுடன் வரும். மக்களுக்கு பரபரப்பாக ஏதாவது கொடுக்கவேண்டுமே.

பிரபாகர் said...

//எங்கே போகிறோம் நாம்..//

கண்டிப்பாக நல்ல திசையில் அல்ல அய்யா!

பிரபாகர்...

Radhakrishnan said...

இது எல்லாம் கலந்ததுதான் சமூகம் என பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்னர் ஒரு ஊருக்குள் தெரிந்து கொண்டிருந்த விசயம் இப்போது உலகமெலாம் தெரிந்து கொண்டிருக்கிறது. நாம் எங்கேயும் போகவில்லை. நமது வாழ்க்கையை பிறர் வாழாதவரை பிறர் வாழ்க்கையை நாம் வாழாதவரை எல்லாம் கேள்விகுறியாய் தெரிவது இயல்புதானே ஐயா. நல்ல சிந்தனை.

ஹேமா said...

எங்கே போகிறோம் நாம் என்றூ கேட்டபடியே போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்.விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனின் மனவளர்ச்சி குறைந்துகொண்டே போகிறது.

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

ramanathan said...

கொலையும் செய்வாள் பத்தினி என்பதன் அர்த்தம் வேறு.

தன்னுடைய கற்பை, பத்தினி தன்மையை காப்பற்றி கொள்ள
கொலையையும் செய்ய துணிவாள் என்பதே சரியான அர்த்தம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ramanathan said...
கொலையும் செய்வாள் பத்தினி என்பதன் அர்த்தம் வேறு.

தன்னுடைய கற்பை, பத்தினி தன்மையை காப்பற்றி கொள்ள
கொலையையும் செய்ய துணிவாள் என்பதே சரியான அர்த்தம். //

ராமநாதன்..நான் சொல்லியுள்ள படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

அதில் லலிதா ஏற்ற பாத்திரம்..தனது கள்ளக் காதலனுக்காக கணவனுக்கு விஷமிட்டு கொல்லப்பார்க்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி